தூமணி மாடத்திலே சுற்றும் விளக்கு எரிகிறது அப்படின்னா என்ன தெரியறது ?
அந்தக் காலத்துலே பவர் கட் ஏதும் கிடையாது அப்படின்னு தெரியறது.
கொஞ்சம் கூட யோசிக்காம உடனே பதில் சொல்ரதுல்லே உங்களை மிஞ்ச உலகத்துலே வேற யாரும் இருக்கமாட்டா.. இந்த கோலம் போடனும் அப்படின்னு காலைலே 4.30 மணிக்கே வந்து லைட் போட்டுண்டு கோலம்.
அதுதான் சுற்றும் விளக்கெரிய ..அப்படின்னு பாடறா போல இருக்கு.
பாசுரத்தை சரியா கேளுங்கோ. அப்பத்தான் அர்த்தம் புரியும்.
சரி. சத்தமா வை.
சித்தத்தை சிவன் மேல் வைத்தால் வெளிச் சத்தம் உட்சத்தம் எல்லாமே நல்லா கேட்கும்.
இன்னிக்கு பஜனைக்கு இன்னுமே ஒரு பத்து பேரு கூட யாரும் வல்லையே !!
கவலை வேண்டாம்.பனி ரொம்ப ஜாஸ்தி
+Balu Sriram
நேத்திக்கே ஸ்ரீராம் சார் மூக்கை உறிஞ்சுண்டு இருந்தார்.
அவாத்துலே ஒரு வேளை இன்னிக்கு லீவ் போடுங்கோ அப்படின்னு சொல்லி இருக்கலாம்.
அப்ப என்ன செய்யறது ? பஜனை postponed அப்படின்னு வாசல்லே ஒரு போர்டு வச்சுடலாமே.
அதெல்லாம் வேண்டாம். இந்த பணியை விடக்கூடாது. பனியும் ஜாஸ்தி.அத முன்னாடியே யோசனை செஞ்சு தான் ஒரு காரியம் செஞ்சு இருக்கேன்.
இன்னிலேந்து உபன்யாசம் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.
யார் வரப்போறார் ?
வேளுக்குடி கிருஷ்ணன்
தன்யனானேன். அவர் வருவதற்கு முன்னாடி நான் பாடி கண்ணதாசன் சொன்ன உரையையும் படித்து விடட்டுமா ?
என்ன ராகத்துலே பாடரதாக உத்தேசம் ? தொண்டை சரியில்லையே..
இந்த பாசுரம் சாதரணமா அமீர் கல்யாணி லே தான் பாடுவா.
நான் ஒரு டிபரண்டா டிரை பண்ணப்போறேன்.
கேட்கறையா ?
சரி, சரி, என்னை விட்டா உங்களுக்கும் யாரு லிசனர் இருக்கா ?
ஆஹா. வேளுக்குடி சார் வந்தாச்சு.
வரணும் வரணும்.
அவதாரிகை. இன்னிக்கு தமிழ்லே முன்னுரை
t
டிபன் ?
ஒரு மணி நேரத்துக்கு மேலே பிரவசனம் பண்றார். பொறுமையா கடைசி வரைக்கும் கேட்கரவாளுக்கு மட்டும் ...
என்ன ?
சரவணா பவன் லேந்து மினி டிபின் கொண்டு வரச் சொல்லி இருக்கேன்.
ஆஹா ...பொறுத்தார் பூமி ஆழ்வார்.
அது ஆள்வார் . மார்கழி மாசத்திலே பேசப்படுவது ஆழ்வார்.
பெண்ணாக பிறந்து தன இள வயதிலேயே அரங்கனைப் பாடுவது அந்த தாயாரே அவதரித்து இருந்தால் தான் சாத்தியம்.
ரைட்டு. டிப்பின் லே என்னென இருக்கும் ?
நீங்களே பாருங்க.
சூப்பர் ஆ இருக்கே...
*******************************************************************************8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
********************************************************************************If people engage themselves in doing service activities, and practise ujjayi breath and meditation, then the same energy which one experiences as fear, anxiety and tension, flips over and becomes love and compassion for all. +Sri Sri Ravi Shankar