JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், டிசம்பர் 31, 2013

Thiruppavai 17

வெளிலே கதவ திறந்து போக முடியாது போல இருக்கே
பனி கொட்டறது.
வாசல்லே  பார்க்கறேன்.ஒரு நிலாவுக்கு பத்து நிலா   இருக்கு.
 என்ன இது ?
பனி வருஷா வருஷம் தான் கொட்டறது. அதற்காக ஆண்டாள் திருப்பாவை பாடற மாசத்திலே வாசல் லே கோலம் போடாம குத்து விளக்கு ஏத்தாம இரண்டு பேர் கோலாட்டம் போட்டுண்டு பாடாம இருக்கலாமா?

உனக்கு முடியல்லேன்னா நான் போடறேன், என்று கோல மாவு, காவி அனைத்தையும் எடுத்துண்டு தலைலே மப்ளர் சுத்திண்டு வாசலுக்கு போனால்,

பிரமித்து போய்விட்டேன்.

ஏ , மீனாச்சி, இங்கே வந்து பாரு.

இங்கே ஏற்கனவே ஒரு திவ்யமா கோலம் போட்டு இருக்கா.

.
யாரு போட்டு இருப்பா ?
என்று கேட்பதற்கு முன்னாடி,
நான் தான் தாத்தா போட்டேன் என்று என் பேத்தி சஞ்சு சொல்றா.
நீயா போட்டே.
ஆமாம்.
யாரு சொல்லிகொடுத்தா.
அத நானே கத்துண்டு போட்டேனாக்கும்.

அது தான் நம்ம பேத்தி. mezzo  சுப்ரானோ வும் பாடும். அதே சமயம் பூக்கோலமும் போடுவாள். ஷி இஸ் எ க்ரியேடிவ் ஜீனியஸ் . நான் அன்னிக்கு அவ பாடறத பாத்த உடனே சொல்லிட்டேனே என்கிறாள்  வீட்டுக்காரி.

என் பொண்ணு முகத்திலே அத்தனையும் பெருமை. 

கௌரி பொண்ணா , கொக்கா என்றாள் என் அகமுடையாள்.

சரி சரி  அப்படின்னு சொல்லிட்டு திருப்பி ஒரு தரம் கோலத்தை பார்ப்போம் அப்படின்னு திரும்பினா கோலம் காணாம போச்சே.

என்னது ?
தாத்தா இது ஹோலொக்ரம் டிஸ்ப்ளே .
என்றாள் பேத்தி.
அதானே பார்த்தேன். கோல மாவே இல்லாம ஒரு கோலமா !!

சரி சரி; திருப்பாவை பாசுரம் 17 இன்னிக்கு
.எம்.எல்.வி. அம்மா பாட்டு


ஆஹா !! இப்ப தானே தெரியறது... இன்னும் அந்த கண்ண பிரானே துயில் களைந்து எழவில்லை !!

அதுனாலே தூங்காதே தூங்காதே அப்படின்னு சொல்லி எழுப்பு உன் தம்பியை அப்படின்னு பலதேவன் கிட்டே கோதையும் அவங்க பிரண்ட்ஸ் ம்
ரிக்வெஸ்ட் பண்றாங்க.

கண்ணனுக்குத் தெரியாதா ! எப்ப எழுந்திருக்கணும் அப்படின்னு !
மாயன் அல்லவா ! அவனும் மாயன் அவன் துயிலும் மாயமே அல்லவா !

கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு தந்த உரை பார்ப்போம்.

நீங்க என்ன வேற ராகத்துலே பாடி இருக்கீங்க..!!

இது ஒரு அதிசய ராகம். ஆனந்த ராகம். அபூர்வ ராகம். 

இந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.
கேட்கறவங்க சொல்லணும் என்ன ராகம்
அப்படின்னு

பாடி முடியறதுக்குள்ளே சத்தமான சத்தம்.
ஒரே கோலாட்ட சத்தம்.

என்னது ஒரு கல்யாண கோஷ்டியே வர்றது !!

ஆமாம். இன்னிக்கு கோதை திருக்கல்யாண உத்சவம். கெட்டி மேளம் கொட்டற கல்யாணம். 

இந்த ஊர் மாமி எல்லாம் நம்மாத்துலே வந்து கல்யாணம் உத்சவம்
இன்னிக்கு ஒரு கோலாட்ட நிகழ்ச்சி.

பேஷ் பேஷ்.
Reception Rose petals.
courtesy: tripadvisor.com


வாங்க.வாங்க. எல்லோரும் வாங்க.
வந்த உடனே ஒரு நிமிஷம் கூட டிலே பண்ணாம, கோலாட்டம், கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பம்.
vanga vanga.
அமக்களம் தான் இன்னிக்கு.

வந்தவர்கள் எல்லாமே களைச்சு போயிட்டாங்க.
அவங்களுக்கு என்ன கொடுப்பது ? என்ன நைவேத்தியம் ?

அதெல்லாம் சின்ன சின்ன நைவேத்யம் எல்லாம் சரிப்படாது.
அப்படின்னு சரவணா பவன் லே சொல்லி ஒரு கல்யாண சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.

யாரு இத்தனை பணம் கொடுத்தா?

பணத்துக்கு என்ன குறைச்சல் ? ஒரு ஈமெயில் போட்டேன். பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டிடுத்து. பெருமாள் நா அனுப்பறார் !! தாயார் கவனிச்சுப்பா அப்படின்னு இருந்துட்டா எதுக்குமே கவலைப்பட வேண்டாம்.

இப்ப எனக்கு பசி வந்துடுத்து.

பசி தினம் தான் வரது.  ஷைலஜா அம்மா உரை இங்கே இருக்கு. அதை முதல்லே படிச்சு இன்னம் நன்னா இந்த பாசுரத்தை மனசுக்குள் வாங்கிக்கங்க.இது என்ன துளசி கோபால் 60 வது ஷஷ்டி அப்த் பூர்த்தி அன்று கிடைச்ச சாப்பாடு மாதிரி இருக்கு.

ஜோர்.ஜோர்.

அது மாதிரி இன்னொரு சாப்பாடு என்னிக்கு கிடைக்கும் என்றே தெரியல்ல.
எல்லாம் +revathi narasimhan கைங்கர்யம்.

அவர் மூலமா அந்த பெருமாளே அனுக்ரஹம் பண்ணி இருக்கார்.

யார் யார் வந்திருக்கிராளோ அவர்களுக்கெல்லாம் தேங்காய்,குங்குமம்,0பழம் வெத்தலை பாக்கு , பக்ஷணம் ஒரு தாம்பூல பைலே போட்டு   கொடு.

ஆச்சு. கோதை கல்யாணம் ஜாம் ஜாம் அப்படின்னு முடிஞ்சது.

எல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்.

*****************************************************************************
இன்னிக்கு எல்லோருக்கும் ஒன்னு சொல்ல மறந்து போயிடுத்தே..

என்ன இது.. கோதை கல்யாணத் திருவிழா.

இதுலே கூட மறந்து போறதுக்கு என்ன இருக்கு ?ஹாப்பி நியூ இயர் சொல்லுங்கோ.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
*****************************************************************
*****************************************************************
When celebration becomes service,
there is no guilt.
And when service becomes celebration,
there is no pride.

+Sri Sri Ravi Shankarகதவைத் திற

விடியறதுக்கு இன்னும் ஜாஸ்தி நேரம் இல்ல.
வெள்ளென வானம் வர நேரமில்லையா.
சீக்கிரமே முழிப்பு வந்துட்டுத்து.

அதனாலே உங்களுக்கு முன்னாடியே எழுந்திண்டு கோலம் போட வந்துட்டேன். என்றாள் பல் போன கிழவி.

பனித்துளி பனித் துளி எல்லாமே இவ தலை லே ..!!

எனக்கோ அந்த பனி லே இவ தலைலே மப் ளர் கூட போட்டுக்காம வாசல்லே உட்கார்ந்துண்டு கோலம் போடறா.  இவ கோலம் போடல்லே நான் என்னிக்காவது சொல்லி இருக்கேனா !!  ஏதோ நான் ஸ்டிக்கர் கோலம் கொண்டு வந்து வாசல்லே ஒட்டினதுல்லே இவ்வளவு ரோசமா ?

ராதே !! உனக்கு கோபம் கூடாதேடி,
சீ சீ    ... கோதே உனக்கு கோபம் கூடாதேடி என்று ஒரு இழு இழுத்தேன்.
ராகத்தை.  அவளையும் வம்புக்கு.

சும்மா வம்பு பண்ணதீக. இதோ வந்துட்டேன் என்று கோலத்தை முடித்து விட்டு திரும்பினாள்.  என்ன பார்க்கறீங்க..

நான் அந்த காலத்தை நினைச்சேன்.
.
அது இருக்கட்டும். கோலம் எப்படி இருக்கு ? என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

ஸ்டைலு ஸ்டைலு தான் என்று ஆரம்பித்தேன்.

வாசல்லே நின்னுண்டு பாட்டா. ?

எதிர் வீட்டு வாசல்லே புதுசா கல்யாணம் ஆன பொண் கோலம் போட்டுண்டு இருந்ததை நான் பார்த்ததை அவ பாத்துட்டா..

என்னது ?

கோலத்தை சொன்னேன். சமாளித்தேன். ஆனா மனசு சொல்லித்து .
பொய் சொல்லக்கூடாது .

கோலத்தைப் பார்த்தேன்.
என்ன அழகான பூக்கள்.!!


http://kolamnkolam.blogspot.in/2009/01/flower-pots-kolam.html
அது சரி, இன்னிக்கு திருப்பாவை 16 வது பாசுரத்தை கேட்போம்.
என்று டி.வி. டி. யை போட்டேன்.ரொம்ப அழகா பாடி இருக்காங்க இல்ல. ராகம் மோஹனத்திலே
இந்தப் பாட்டுக்கு கூட கதவை திறக்கலையா !!

அப்ப இன்னொரு ராகத்திலே பாடி பார்ப்போம்.

நானும் இன்னிக்கு இதே பாசுரத்தை இன்னொரு ராகத்திலே பாடி இருக்கேன்.

கண்ணா ! கதவைத் திற.  கோதை காத்துக்கிட்டு இருக்கா.

சஹானா தானே ?

ஆமாம்.  கோதை தன்னோட தோழிகளோட பரந்தாமன் கண்ணன் வாசல்லே வந்து ,
கதவைத் திற கதவத் திற, அப்படின்னு சொல்றா.

நீங்க யாரு ? அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா ? அப்படின்னு அந்த வாட்ச்மேன் கேட்பதற்கு முன்னாடியே...

எங்களுக்கு உள்ளே இருக்கிற நேயன் ஒரு இ மெயில் போட்டு இருக்காரு.
அதனாலே தான் அவர் செய்தி படிச்சுட்டு வர்ரோம்.
நீ கதவைத் திற என்கிறாள்.
இந்த பாசுரத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ளனும் அப்படின்னா
 நீங்க இந்த வழியா போங்க.,.. 

என் தஞ்சாவூர் நண்பர் அழகான வர்ணனை இங்கே.  ஒரே பதிவிலே கண்ணனையும் காணலாம். சிவ தர்சனமும் செய்யலாம்.

துரை செல்வராஜ் சாருக்கு அந்த பரந்தாமன் தீர்காயுசை கொடுக்கட்டும். தொடர்ந்து அவர் இறைப்பணி உலகம் முழுவதும் பரவட்டும்.

Velukkudi Krishnan

வேளுக்குடி கிருஷ்ணன் இன்னமும் .வரவில்லை.
அவர் சிடி யும் இன்னும் வல்லை.

ஆனா இன்னிக்கு வரவேண்டிய நைவேத்யம் வந்துடுத்து.
பாத்த உடனே நாக்கிலே ஜலம் ஊறிடுத்து .
http://www.tastyappetite.net/2010/11/sooji-ka-halwa-rava-kesari.html

ஒன்னு எடுத்து வாயிலே போட்டுக்கப்போனேன்.
என்ன அப்படி அவசரம்?

லைப் லே எதுக்குமே அவசரப்பட கூடாது அப்படின்னு சொல்றாக.
ஆனா அவங்களுக்கு முன்னாடி ஒரு அல்வாத் துண்டை வச்சு பாக்கலையே

பரந்தாமா!
எங்களுக்கு உன் வாசற்கதவை திறக்கும்
நாளும் எந்த நாளோ !!

*********************************************************************************************************************************************************************************************************************************************

இன்னிக்கு என்ன பொன் மொழி. 
****************************************************************************
எல்லாத்துக்குமே நீ ஒரு சாட்சி தான். 
அப்படின்னு உனக்கு புரிஞ்சு போச்சுன்னா,
உனக்கு வலியும் இல்ல மன வேதனையும் இல்ல. 

நடந்தது எதுக்கும் நீ பொறுப்பும் இல்ல. 
நடந்தது எதுவும் உன்னால இல்ல. 

என்னால தான் எதுவுமே ஆவுது அப்படின்னி நீ நின்னைக்கும்போதுதான் 
உனக்கு முடிவு பற்றி கவலை வருது. 

நீ வருவதற்கு முன்னாடியும் உலகம் உருண்டுண்டு தான் இருந்தது. 

நீயும் நானும் போனப்பிறகும் இந்த உலகம் உருண்டுண்டு தான் இருக்கும்.

அப்ப

நீயும் நானும் 

ஜஸ்ட் அப்சர்வர் தான்.  

when you are a mere observer, there is no anguish, no pain, no suffering, no victim, no villain…there’s just you, in total bliss.

திங்கள், டிசம்பர் 30, 2013

இளங்கிளியே .எழுந்திருச்சு வாயேன்.

வேங்கடவனை உனக்குத் தெரியுமா ?
யாரு உங்க பிரண்டு வெங்கடராமன்!
இல்லை .
பழைய ஜனாதிபதி வெங்கடராமன் ?
அதுவும் இல்லை.
அப்ப நடுக்கடலிலே நாகத்தின் மேலே படுத்திருக்கும் ஆதி சேஷனா ?
கொஞ்சம் சரி. அந்த ஆதி சேஷன் மேலே படுத்திருக்கும் வேங்கடவனா?
எக்சாக்ட்லி .
அவர் வூட்டின் வாசலிலே ஒரு அழகு கோலம். அத அப்படியே போட்டொ புடிச்சு, லாமினேட் பண்ணி, ஸ்டிக்கர் ஒட்டி ,

இப்ப நம்ம வீட்டு வாசல்லே ஒட்டி வச்சிருக்கேன்.

இது என்னோடது அப்படின்னு கேசு போட்டுடப்போறாக..!!

இல்ல, இந்த வேங்கட நாகராஜ் நல்லவங்க.  ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வரப்போறாங்க. பாரேன்.


திருப்பாவை பதினைந்தாவது பாசுரம் ஒலிக்கிறது.
 கோவில் மணி ஓசை மாதிரி இல்ல இருக்குது ?
 பாட்டு ஒன்று  வருது.கேளடியம்மா , எழுந்திருச்சு வாயேன்.

எல்லே இளங்கிளியே ...


கவியரசர் கண்ணதாசன் அவர்களின் திருப்பாவை மொழிபெயர்ப்பு.
நன்றி. த ஹிந்து தினசரி.
படிப்பது.
வேற யார் படிப்பாங்க.. சுப்பு தாத்தா தான்.
பாட இல்ல செய்யறாரு ?
முதல்லே ஆரபி ராகத்துலே பாடுவாரு. பின்னே படிப்பாரு.
எனக்கு என்னவோ இரண்டுமே ஒன்னத்தான் கேட்குது.
இந்த திருப்பாவையின் தத்துவார்த்தத்தை அறிய இங்கு செல்லுங்கள்.

ஒரு அற்புதமான் பரதம் .
இந்த கலை கொஞ்சம் வித்யாசமானது.  கோதை வைபவம்.
மேடம் அனிதா ரத்னம்
ots uppuma
ஓட்ஸ் உப்புமா வா ? என்னவோ நான் வெஜ் சமாசாரம் போல இருக்கு ?
நோ..நோ...பயப்படாமே சாப்பிடு.


ஓட்ஸ் உப்புமாவா ?
ஆமாம். ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது.
அப்படியா..
ஆமாம். உனக்கு வேணும்னா கீதா மேடத்தை கேட்டுப்பார்.

ரொம்ப காரமா இருந்தா சரிப்படாது.
ஒரு அரை மிளகாய் குறைச்சு பண்ணு. நல்லா இருக்கும்.

அதான் இப்ப எல்லாம் ஹார்லிக்ஸ் ஓட்ஸ் வித் மசாலா வருதே.
ஆமாம். அத ஜஸ்ட் கொதிக்கிற தன்னிலே போட்டு இரண்டு நிமிஷம் வச்சாலே போதுமே.

இது அந்த சீனு, ஆவி, பால கணேஷ் அவங்க கிட்ட சொல்லு. அவங்க தான் தண்ணிய சுட வச்சு தயாரா இருக்காங்க.


சரி, முதல்லே எல்லோருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க.
**************************************************************************

இன்றைய பொன்மொழி.ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்


மயில் போலே பொண்ணு ஒன்னு  என்று பாட ஆரம்பித்தேன்.

மூச் !! மார்கழி மாசம் பகவானைத் தவிர்த்து வேறு எதுவும் மனசுலே கூடாது.


வேற என் மனசுலே ஒண்ணும் இல்லையே.
என் மனசுலே அந்த கோதை ஒத்தி தான் இருந்தா.  பெண்ணாகப் பிறந்த பரமனைப் பாடிய ஒரே ஆழ்வார் கோதை ஆண்டாள் தானே ...

அந்த கோதை ?

 கொஞ்சம் பொறு. இன்னா அவசரம். !! ஒரு அஞ்சு நிமிசத்திலே உன் கண் முன்னாடி நிறுத்தறேன் என்று சத்தமா சபதம் போட்டேன்.

அஞ்சு இல்ல , அரை நிமிஷத்திலே ஆண்டாள் மயிலு போலே  என் முன்னே பிரசன்னம். 

ஆஹா கண்டு கொண்டேன். நான் கண்டு கொண்டேன்.
அங்கேயும் கண்ணன் மயில் இத்யாதி இத்யாதி. 

என்னங்க இது ? கோதை ஆண்டாள் படமில்ல. நிசமாவே கோதை அப்படின்னு ஒரு பக்தை இன்று திருப்பாவை பக்தி மாலையில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருக்கிராளோ என்று நினைத்தேன்.
நன்றி: நாச்சியார் 
போன வருஷம் மார்கழி மாசம் 14 வது பாசுரத்துக்கு பதிவு போட்ட மேடம் நாச்சியார் வல்லி நரசிம்மன் அவர்களின் பதிவு இன்று பார்த்தேன்.
+revathi narasimhan thank u very much Madam.
I saw your latest posting in your blog also.I do not know how to respond.

 என்ன ஒரு அழகிய கோதை அவர் கண்ணுக்கு முன்னாடி அன்னிக்கு வந்திருக்கிறாள் பார்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


அந்த பங்கயக் கண்ணனைப் பாட அவனது பக்தர்கள் காலம் காலமாக 108 திவ்ய க்ஷெத்திரங்களுக்கும் படை  எடுத்துக்கொண்டு  இருக்கி றார்கள்.

 கோதை மட்டும் தான் சரியா  எம்பெருமாள் எங்கே இருப்பார்  இருக்கார் அப்படின்னு புரிஞ்சுண்டு  புவிலே பிறந்திருக்கிறாள்.
அவள் பாடிய 14 வது  .பாசுரத்தைக் கேட்போமா...நெக்ஸ்ட், கவிஞ்ர் கண்ணதாசன் இந்த 14வது பாசுரத்துக்கு என்ன அழகான எளிய உரை எழுதி இருக்கிறார் பாருங்கள்.

Let us listen to the simple meaning of the text of 14th Pasuram.


வேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக , வலை நண்பர் திருவரங்கத்து பரமன் பக்தை திருமதி  ஷைலஜா அவர்கள் பதிவிலே இருக்கும் தத்துவார்த்தையும் விசாரம் செய்வோம்.
velukkudi krishnan sir
அமைதி. அமைதி. வேளுக்குடி சார் பிரசங்கத்தை துவங்கியாச்சு.உபன்யாசம் முடிந்து விட்டது.

நேத்திக்கு ஏகாதசி உபவாசம் முடிஞ்சு போயிடுத்து.

இன்னிக்கு பசி ஏகத்துக்கு, புசி , புசி  என்று வயிறு கூச்சல் போடுகிறது.

என்னடி மீனாச்சி, ப்ரேக்பாஸ்ட் என்னாச்சு !

இதோ அந்த ஹாலுக்கு எல்லாரையும் கூட்டிக்கொண்டு
போங்கோ.
என்றாள் மீனாட்சி பாட்டி.

Courtesy: www.cookatease.com Add caption

அடுத்த ஹாலுக்கு போனா அசந்து போகிற மாதிரி buffe லஞ்ச் மாதிரி, ரைஸ் சேவை, எள்ளு சேவை, எலுமிச்சை சேவை, தயிர் சேவை.
http://www.umakitchen.com/2011/05/curd-sevai.html


எதிர்த்தாப்போல டி.வி. ஸ்க்ரீன் லே ஓடிட்டிருக்கு. திருப்பதி தேவஸ்தானம் டி.வி.
T T D TV லே ..
ஒரு பக்கம் எலுமிச்ச சேவை, தயிர் சேவை. இன்னொரு பக்கம் கேசவன் சேவை,  நாராயணன் சேவை. மாதவன் சேவை,  கோவிந்தன் சேவை. பாலாஜி சேவை.

கோவிந்தம் பரமானந்தம் 
GOVINDHAM PARAMANANDHAM.

ஆஹா..இன்னிக்கு நல்ல சேவை.

பெருமாளே நம்ம வீட்டுக்கு வந்து தரிசனம் தர்றார்.
வந்தவர்கள் எல்லாமே ரொம்ப லக்கி தான்.
+Dindigul Dhanabalan +Vasudevan Tirumurti +divya vg +Tulsi Gopal +Ranjani Narayanan +அம்பாளடியாள் வலைத்தளம் +Gayathri Desigan +Kumaran Malli +Balu Sriram +Rajeswari Jaghamani +Lalitha Mittal +meena kavinaya +Samba Murthy +Geetha Sambasivam +Manjubashini Sampathkumar +Shylaja Narayan

()()()()()()()()()()()()()())())()()()()()()()(​)()()()()()()()()()()()()()()()()()()())())()()()()()()(()(

இன்றைய பொன்மொழி. 

ALLOW YOUR LIFE TO FLOW LIKE A JUNGLE RIVER IN ITS OWN WAY.
ENJOY THE FLOW. 
U WERE NEVER DIRECTING ITS DIRECTION
NOR WILL U EVER BE SO. 

pl click here
****************************************************************************

சனி, டிசம்பர் 28, 2013

அனந்த பத்மனாபனிடமிருந்து அல்வாவுக்கு இழுக்கிறது MANASU

இந்த கோலத்திலே ஒரு விசேடம் என்ன சொல்லுங்க பார்க்கலாம் ? 

என்றாள் மீனாட்சி பாட்டி.


Add caption
இன்னிக்கு எம்.எல்.வி. அம்மா பாடும்போது எத்தனை பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை செவிக்கப்போரோமோ அத்தனை கோலம் இன்னிக்கு.


அம்மாடியோவ் !  எத்தனை கோவிலுக்கு போகப்போறோம் ?
குளிரக் குளிரக் கோவிந்தனைப் பாடப்போறோம்.

கவனமா பாருங்க..

ஒவ்வொரு கோவிலும் ஒரு திவ்ய ஸ்தலம்.

திருப்பாவை 13 வது பாசுரம் பாடும்போது 13 பெருமாள் கோவில்  தர்சனம்.

இப்ப எம். எல். வி. அம்மா பாடறதை கேட்போமா ?


13 stanza raag atana
mlvவேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக இந்த பாசுரத்தையும் பாசுரத்தின் சிம்பிள் மீனிங் என்ன என்று எனக்கு புரியறா மாதிரி
கவியரசர் கண்ணதாசன் சொல்வதையும் கவனிப்போம்.
Velukkudi krishnan Arrives .

வாங்கோ வாங்கோ
என்று வந்திருந்தவர் அத்தனை பேரும் எழுந்து நின்று 
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறார்கள். 
Welcome Sir.


உபன்யாசம் நடந்துகொண்டு இருக்கும்போதே ஒரு டெம்போ மாதிரி சின்ன வானிலே  இரண்டு மூன்று அண்டாக்கள் வந்து இறங்குகின்றன.

சுப்பு தாத்தாவுக்கு ஏகத்துக்கு குஷி.

இங்கே திருப்பாவை தமிழ் இலக்கிய விழா நடக்கும்போது நமது வலை உலக அன்பர்கள் நண்பர்கள்  ஒவ்வொருவரும் தினமும் அறுசுவை யுடன் கூடிய  அன்னதானம் செய்து, இந்த விழாவை சிறப்பிக்கின்றனர்.

பரந்தாமனின் கருணை தான் என்னே என்னே என்று  ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.
+Anandaraja Vijayaraghavan
அங்கிருந்தே அந்த ஆனந்த கண்ணீரைப் பார்த்த ஆனந்த விஜயராகவன் , நெஞ்சு விம்ம விம்ம , தாத்தா பக்கத்தில் வந்து  சொல்றார்.

தாத்தா !! இந்த சீனுக்கு மனசாகல்லை.
பாவம் இந்த தாத்தா. தினம் தினம் குளிரக் குளிரக் கோவிந்தனை பாடுகிறாரே.  அவருக்கு நம்ம சைடுலேந்து எதுன்னாச்சும் செய்யணும்டா

அப்படின்னு என்கிட்டே, நான் வண்டலூர் ஜூவிலே திரு பாவை பாடிகிட்டு இருந்த போது செல்லடிச்சார் ...

அப்படியா என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டேன்.


லோகத்திலே போல்லுயுடட் வாடர் ஜாஸ்தி ஆகிடுத்து.  மார்கழி பஜனைக்கு வந்தவர்களைக் காப்பது நமது பொறுப்பில்லையா அவங்களுக்கு பாடும்போது தொண்டை கட்டிக்கொள்ள கூடாது இல்லையா என்று நினைச்சு...

நினைச்சு .... என நான் நானும் இழுத்தேன்.

+Srinivasan Balakrishnan சீனு தான் சார், அதான் சீனிவாசன் பாலக்ருஷ்ணன் மூணு அண்டாவிலே வெந்நீர் அனுப்பிச் சிருக்கார்.

எதுக்கு, நாங்கள் எல்லாம் குளிக்கவா ?  ஏற்கனவே கீசர் போட்டு குளிச்சாச்சே!!

இல்லை சார், குடிக்க,  ஒவ்வொரு லிட்டரா போட்டு பாக் பண்ணி இருக்கோம். 100 டிகிரி வரைக்கும் கொதிக்க விட்ட பின் தான் ஆவி வந்தபின் எடுத்து அண்டாவிலே ஊத்தி இருக்கோம் . ப்யூர் வாடர்.

என்று சீனுவும் ஆவியும் தாத்தாவை ஆச்வாசப்படுத்த

இத்தனையும் குடிக்கவா ??????????????

ஆமாம். சுப்பு தாத்தா சார். இன்னிக்கு ஏகாதசி  இல்லையா.அதினாலே இன்னிக்கு துளசி ஜலம் தான் பிரசாதம். சாப்பாடு, அன்னம் எல்லாமே 

ஆஹா.பகவான் இன்னிக்கு ஆவி வழியா சீனு வழியா இன்னிக்கு என்ன அப்படின்னு சொல்லி இருக்கார்.

இருந்தாலும் லேசா பசிக்கிராப்போல இருக்கே என்று மனசு சொல்லித்து.
பேஷ், பேஷ், நேத்திக்கே
நெஸ்லே டீ பவுடர் நான் இரண்டு கிலோ வாங்கி வச்சுருக்கேன்  என்றேன்.

அது வேண்டாம். தேவை இல்ல,
இதை  நீங்க இத  இத  பாக்கலையா.. என்றார்  ஆவி.

இன்னும் என்ன?

வாட்டர் மட்டும் இல்ல  தாத்தா, கூடவே  ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு ப்ளாஸ்க் வீதம் பனங்கல்கண்டு  பால், மஞ்சள் பொடி , மிளகு போடி, பாதாம் போட்டு. 30 ப்ளாஸ்க் இன்னிக்கு கொண்டு வந்திருக்கோம். இந்தாங்க ஒரு கப் சாப்பிட்டு பாருங்க. என்றார் ஆவி.
+Anandaraja Vijayaraghavan


மனசு உள்ளுக்குள்ளே
இல்லை, அண்டாவிலே ஏதோ புளியஞ்சாதம்,தயிர்சாதம் அப்படின்னு வரது என்று நான் அப்படின்னு நினைச்சதே. ஆனா கல்கண்டு பால் வர்றது.

என் மனசை  என் முகத்தைப்பார்த்தே புரிந்துகொண்ட மீனாச்சி பாட்டி,

வந்தவர்களுக்கு பால் மட்டும் தானா அப்படின்னு நீங்க ஒன்னும் கவலைப்படாதீக..

  +Gomathy Arasu கோமதி அரசு அம்மா நேத்திக்கே போன் பண்ணி, குக்கர் அல்வா ராதாஸ் கிச்சன் லே  தயார் பண்ணி, கரெக்டா 9 மணிக்கு 50 பேருக்கு வந்துடும்.  உபன்யாசத்துக்கு வந்தவர்களை பொறுமையா உட்கார்ந்து இருக்கச்சொல்லுங்க. இன்று சொல்லி இருக்காங்க..

அப்படியா.. என்று சொல்லும்போதே...

இன்னொரு அம்மா ஆடோவிலே அல்வா வந்து இறங்குகிறது.
உள்ளே வரும்போதே பச்சை கற்பூர வாசனை மனசை அனந்த பத்மனாபனிடமிருந்து
அல்வாவுக்கு இழுக்கிறது.

http://radhaskitchen-1.blogspot.in/2011/09/blog-post_25.html
               தாங்க் யூ ராதா ராணி மேடம். தாங்க் யூ கோமதி அரசு மேடம்.

கொஞ்சம் லேட் ஆயிடுத்து என்கிறார். கொண்டு வந்தவர்.

அதனாலே என்ன?

இது மார்கழி திங்கள் அல்லவா ?
அதனால் தான் அல்வா வந்து விட்டது

pallandu pallandu
பல்லாண்டு பல்லாண்டு பாடிக்கொண்டே பரமனை நினைத்துக்கொண்டே
பரமனை பாடுங்கள்.

சுகமோ சுகம்.

அல்வாவைச் சாப்பிட்டு பிறகு எல்லோரும் கல்கண்டு பாலையும் சாப்பிட்டு விட்டு, இந்த புள்ளைங்க..
திடங்கொண்ட சீனுவையும்
பயணம் ஆவியையும்
ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க..

தீர்காயுசா இருக்கணும்.

*******************************************************************************
இன்றைய பொன்மொழி.

LOVE IS UNCONDITIONAL. 
WHEN U AND I LOVE ANYONE 
IT  MEANS OUR LOVE IS SANS ANY EXPECTATIONS ANY DEMANDS.

THAT LOVE ALONE TAKES US TO 
INNER PEACE AND BLISS.

AND THAT IS PARAMAN.

வெள்ளி, டிசம்பர் 27, 2013

கிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட்.

Courtesy: http://shelleysdavies.com/?p=16611
Please read pooja jayaram in the above article.
பொழுது பொல பொல  விடிய போறது.

நானே தான் இன்னிக்கு வாசல்லே கோலம் போடவேண்டும்.
. நான் கோலம் போட்டுட்டு வர்றேன்.
அதுக்குள்ளே இந்த பாலை காச்சுங்க. என்று சொல்லி விட்டு ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு

அவள் அதான் எங்காத்து நானி வாசலுக்கு போனாள்.

பாட்டி அவள் போட்டுக்கொண்டிருக்கும் அந்த  மடிசார் பாட்டி போடும் கோலத்தைப் பார்த்துக்கொண்டே தாத்தாவாகிய  நான்
ஆவின் பால் பாக்கெட்டைத் திறக்க,

பால் பாக்கெட் கை விட்டு நழுவி,

ஒரு லிட்டல்  பாலும் தரையிலே கொட்டி போனது.

பால் எல்லாம் கொட்டி போச்சே ...

 கோலம் போட்டுவிட்டு ரொம்ப டயர்டா திரும்பி வரும் பார்யாள் காபி என்னாச்சு என்று கேட்பாளே..

கிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட் ( சேறு) ஆகிவிட்டது.

 என்ன பண்றது  அப்படின்னு நான் நடு நடுங்கி நிற்கையிலே

அப்ப எம்.எல்.வி. அம்மா இந்த திருப்பாவை 12 வது பாசுரம் காதில் விழரது.

அடடா. அங்கேயும் பால் கறக்காம, எருமை மாட்டு மடிலேந்து பால் சுரந்து கீழே தரை எல்லாம் நனைஞ்சு போயிருக்காமே... எருமை கன்றையே நினைத்து தன பாலையெல்லாம் கீழே சுரந்து அந்த இடமெல்லாம் சேறாகி விட்டதாமே.

சிமிலர் சிசுவேஷன்.  அங்கே எருமை தன் கன்றை நினைத்துக்கொண்டே பாலை சுரந்த கதை.

இங்கே இந்த எருமை தன அருமை கிழவியை நினைத்து ஆவின் பாலை கொட்டிய கதை.

ஆஹா. என் பதிவுக்கு நல்ல ஒரு மையப்புள்ளி ஆயிற்றே.
என்று கண்களை மூடி நினைக்கையிலே

அங்கு மீனாட்சி பாட்டி வருகிறாள்.

பால் கொட்டிடுத்து.. என்கிறேன். அழாத குறை தான்.

எல்லாமே அந்த பரந்தாமன் விளையாட்டு.
அந்த பாசுரத்திலும் அதே கதை தான். கவலை படாதீர்கள். அடுத்த பாக்கெட்டை எடுத்து பத்தே நிமிஷத்தில் உங்களுக்கு காபி ரெடி பண்றேன்.
இந்த பாசுரத்தை கேளுங்கள்.பாட்டு முடியும்போது ஹிந்து பேப்பர் சத்தமாக வாசல் கதவுக்குள் என்டர் ஆகிறது. அதில் இருக்கும் திருப்பாவை பாசுரத்தை ஸ்கான் செய்து பாடி, யூ டூபில் ஏற்றி தாத்தா பாட இருக்கையில், 

ஆஹா, அதற்குள்ளே ஆத்துக்காரி காபி டம்ளரை எடுத்துண்டு வர, 
அந்த கோதை இன்னும் எழுந்துண்டு வரலை. ஆனா எங்க வீட்டுக்காரி வந்துட்டா, நான் என்ன தவம் செய்தேனே என்று நினைத்துக்கொண்டே,
அந்த கவிஞர் கண்ணதாசன் உரையை படிக்கிறேன்.


படிச்சு முடிப்பதற்குள்  முன் ஹாலில் முப்பது பேர் .
இன்னிக்கும் நேத்தி மாதிரி ஸ்பெசல் உண்டோ என்று என் நண்பர் கோபாலகிருஷ்ணன்  கேட்கிறார். அவர் எதைச் சொல்கிறார் என்று  தெரியவில்லை.அவருக்கு நாட்டியமும் பார்க்க  பிடிக்கும்.பொங்கலும்  பொங்கல் என்றால்  க்யூவில் நின்று வாங்கி  சாப்பிடுவார்.

இன்றைய தினம் ப்ரவசனகர்த்தா வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்திற்கு பின்பு , டாக்டர் வேங்கடக்ரிஷ்ணன் அவர்கள் முன்னுரையுடன் ஆண்டாள் தமிழ் சங்க பா மாலை ஒன்று நாட்டிய  நாடகம்.

 இங்கே இன்று.

கடைசியில் தான்  பிரசாதம். என்றேன்.

velukkudi krishnan 12 thiruppavai
முதற்கண் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்.எல்லோருக்கும் ஒரு  செய்தி.அனௌன்சமென்ட் .

இன்னிக்கு நைவேத்யம் கல்கண்டு சாதம். மிகவும் ருசியுடனும் சிரத்தையுடனும் தயார் செய்து கமலாஸ் கார்னர் லிருந்து வந்திருக்கிறது.

அந்த கல்கண்டு சாதம் எல்லோரும் சுவைத்து கொண்டே  அடுத்து வரும்  பரத நாட்டிய கச்சேரியை ரசிக்கவும்.

ஒரு நூறு கப் வந்திருக்கு. எல்லோருக்கும் கிடைக்கும்.
பரந்தாமன் கருணை போல.
வேண்டுபவர் வேண்டியதை வேண்டியது போல பெறுவார்கள்.

***********************************************************************
ஆண்டாள் தமிழ் சங்க பா மாலை.
Dr.Vyjayanthimala Bali  அவர்கள் காம்பியர் .This product,re-created from live video recordings of yore, unveils the creative genius of Dr.Vyjantimala Bali,the celebrated Bharatanatyam artiste of our times.In a solo Bharatanatyam recital-the first of its kind- she takes us through the sublime delights of Sri Aandaal's Thiruppavai which permeates the cool pre-dawn air in the Tamil month of Markazhi.

Much to the dellight of both learners and lovers of Bharatanatyam,Dr.Bali employs all the copybook techniques in Bharatanatyam repertoire to bring alive the 30 hymns of this divine work in an arrestiong and authentic manner.Each lap of the recital is preceded by the artiste's lucid explanation of the scenario,characters, rich imaginary and the profound meaning of Thiruppavi verses.

Another highlights of this product is the introductory speech by Dr M.A.Venkatakrishnan, a renowed scholar & professor of Vaishanavism,University of Madras.

A perfect learning tool and a document on a flawless style.

The philosophy
1.Margazhi Tingal
2.Vaiyathu Vazhvirgal
3.Ongi Ulagalantha Uthaman
4.Aazhi MAzhai Kanna
5.Ongi Ulagalantha Uthaman

Waking up friends
6.Pullum Silambina Kan
7.Kisu Kisu
8.Kizh Vanam
9.Thoomani madam
10.Notru Suvargam
11.Katru Karavai

Waking up the Lord
12.Kannaithu
13.Pullin Vaay Keendaanai
14.Ungal Puzhakkadai
15.Yelle Ilankiliye
16.Naayakan
17.Ambarame
18.Undu Madakalitran
19.Kuttu Vilakku

Singing His Praise
20.Muppattu Muvar.
21.Yetta Kalangal.
22.Angan Ma.
23.Maari Malai.
24.Anrivvulagam.
25.Orutty Maganaay

Seeking His grace
26.Maale Manivannaa
27.Koodaaarai Vellum seer
28.karavaigal
29.Sittamsiru Kaale
30.Vangakkadal Kadainda


இன்றைய பொன்மொழி. 
****************************************************************************
Often people who are sensitive are not sensible, and those who are very sensible are not sensitive. But you have the great ability of combining both, sensibility and sensitivity. That is the skill and meditation is the answer. Meditate! +Sri Sri Ravi Shankar 


வியாழன், டிசம்பர் 26, 2013

செல்ல பெண்டாட்டி

செல்ல பெண்டாட்டிக்கு ஜே. 
திருப்பாவை 11 வது பாசுரம். 

Courtesy: www.mykolam.blogspot.com 

அதென்னங்க கோலம் !! நவ ரத்ன பதக்கம் மாதிரி மின்னுது !!

அடியே செல்லப் பெண்டாட்டி !!  மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

அது என்ன செல்ல பெண்டாட்டி !! திடீர்னு எழுபது இருபது ஆவுது !!

உனக்கு இது கூட தெரியாதா !!  இன்னிக்கு திருப்பாவை பதினோராம் பாசுரமே செல்ல பெண்டாட்டி பற்றி தானே !!

ஹா ஹா ஹா ஹா ..  அது செல்ல பெண்டாட்டி இல்லீங்க. செல்வ பெண்டாட்டி ங்க.

அப்ப திரும்பவும் அந்த பாட்டை கேட்டு பார்ப்போம். எம். எல்.வி. அம்மா தான் பாடறாங்க. இது என்ன ராகம். ? முகாரியா இல்லை ஹுசைனியா ?

முகாரி தான் அப்படின்னு நினைக்கிறேன். என் தங்கைக்கு போன் போட்டு கேட்கட்டுமா.?

உங்க தங்கைக்கு போன் போடறதுக்கு நான் என்ன பர்மிஷன் தரணுமா என்ன ?  தாராளமா பண்ணுங்க.. வேளுக்குடி வந்து உபன்யாசம் முடியட்டும்.

எஸ். எஸ்.  அது என்ன வாசல்லே புதுசா ஒரு வான் வந்து நிற்கிறது !!

+Balu Sriram +kg gouthaman +Ranjani Narayanan +Geetha Sambasivam +rajalakshmi paramasivam +Priya Baskaran +பார்வதி இராமச்சந்திரன். +Shylaja Narayan +Gomathy Arasu +Mythily kasthuri rengan +Rajeswari Jaghamani +meena kavinaya
ஆகா,,இத பாரு ஸ்ரீராம் சார், கௌதமன் சார், ..அப்பறம் ..

அடடே ! கீதா மாமி , ராஜலக்ஷ்மி மாமி, கோமதி மாமி, ரஞ்சனி மாமி , பார்வதி ராமச்சந்திரன் , பிரியா பாஸ்கரன், மைதிலி கஸ்தூரி ரங்கன் , ஷைலஜா , ராஜேஸ்வரி, கவிநயா எல்லாரும் வராங்க.

வாங்கோ வாங்கோ...

வேளுக்குடி உபன்யாசம் அப்படின்னு கேள்விப்பட்டோம். உடனே வந்துட்டோம். வாசுதேவன் சார் தன காரை அனுப்பினார.

எல்லோரும் வரணும்.   எல்லோரும் பட்டுப்பாயிலே உட்காருங்கோ.

எல்லாருக்கும் ஒண்ணு  சொல்லணும். ஷைலஜா மேடம் பதிவுக்கு தினம் எல்லோரும் போய் படிக்கிறீர்கள் என்று  நினைக்கிறேன். அவர்களது வியாக்கியானம் வியக்கும் அளவுக்கு   இருக்கிறது.எல்லாம் அந்த பெருமாள் கொடுப்பினை. அவர்கள் இன்னிக்கு இங்கே வந்திருப்பது நாங்கள் செய்த கொடுப்பினை.

 பசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களே என்று சொல்லி அந்த ஜீவாத்மாக்கள் பரமனை அடைய தமது துயில் களைதல் வேண்டும் என சொல்லாமல் சொல்லி,  உணர்த்தி விஷிஷ்டாத்வைதத்தின் ஒரு கோடியை காட்டி இருக்கிறீர்கள்.  மிக்க அழகு.

தாங்க்ஸ் தாத்தா.
அதுக்கு முன்னாடி இன்னிக்கு பாசுரத்தை பார்த்து கவிஞர் கண்ணதாசன் உரை என்னவென படிச்சுடலாமா ?
தன்யாசி ராகம் மாதிரி இருக்கே.

என்னது சன்யாசியா ?
பாட்டி, இது தன்யாசி ராகம்.
ஓஹோ... அடடே...

வேளுக்குடி சாரும் வந்தாச்சு.
THIRUPPAAVAI 11 PASURAM

velukkudi krishnan sir also arrived.
உபன்யாசம் முடியற நேரம்.

ஆஹா இன்னிக்கு நைவேத்யம் அண்டா அண்டாவா வரதே !!
எல்லாம் பகவத் சங்கல்பம்.

வெண்பொங்கல், சக்கரை பொங்கல்.  கூடவே யார் வர்றாங்க..

அதுவா.. சுப்பு தாத்தாவுக்கு தொண்டை கட்டின்ன்டு இருக்கு அப்படின்னு கேள்விப்பட்டு, சீனு அவங்க சுடு தண்ணீர் வெந்நீர் போட்டு ஸ்பெசல் ஆ கொண்டு வந்திருக்கார்.

 லேசா மிளகு, மஞ்சப்பொடி போட்டு குடிக்கணும்.

பாருங்கோ. செல்ல பெண்டாட்டி அப்படின்னு பாசுரத்திலே வந்தாலே எங்கே பார்த்தாலும் ச்வீட் தான்.

அதான் சக்கரை பொங்கல் வந்துடுத்து.

அது சரி, இவ்வளவு பேர் வந்திருக்கோம். ஒரு பொங்கலை கொடுத்து எல்லாரையும் அனுப்பிச்சுடலாம் அப்படின்னு பார்க்கறேளா ?

நீங்க சுப்பு தாத்தாவை சிம்பிளா நினைக்க கூடாது அப்படின்னு தான் ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருக்கார்.

போடுங்க தாத்தா.

என்ன சுப்பு தாத்தா பேச்சு மூச்சே காணோம்? எங்கே போயிட்டார் ?

அவர் எங்கேயும் போகல்ல. அந்த ஓரமா உட்கார்ந்து இருக்கார்.
என்ன செஞ்சுண்டு இருக்கார்.
அவரா !!  சக்கரை பொங்கல்லே சங்கமம் ஆயிட்டார்.

சைலண்டா சுகானுபவம் பண்ணிண்டு இருக்கார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு சுகம் தர்றது.

சாதம் ஒத்தருக்கு சுகம்.  அப்படின்னா
நாதம் இன்னொத்தருக்கு 
நூற்றுக்கு ஒத்தருக்கு
ராம நாமம்  சுகம். 

. அந்த ஆண்டாளுக்கோ...

ஆமாம்.
ஆண்டாள் அந்த அரங்கன் நினைப்பிலே சங்கமம்.
ஹரி ச்மரனையிலே மனசிலே நம்மை அறியாம ஒரு அமைதி ஒரு நிசப்தம் வந்துடறது இல்லையா. அதோடு கூடவே ஒரு ஆனந்தம்.

Celebration is the nature of the spirit. Any celebration has to be spiritual. A celebration without spirituality does not have any depth. And silence gives the depth to celebration. +Sri Sri Ravi Shankar 

புதன், டிசம்பர் 25, 2013

மெல்ல வந்து கதவைத் திற..

என்னங்க இப்படி தூங்கி தூங்கி வழியறீங்க !!

இன்னிக்கு பாடலே கும்பகர்ணன் தோற்றுப்போய் ஆண்டாளிடம் தன தூக்கத்தை கொடுத்த கதை தானே !!

அது சரி.  முதல்லே நாராயணா என்னும் நாமத்தை சொல்லி எழுந்திருங்கள்.

முதலில் நீ ஒரு வாய் சூடா காபி தா.

இந்தாங்க. புடிங்க. குடிச்சுட்டு எழுந்திருங்க..

அப்பாடி, நேற்றைக்கு கிருஸ்துமஸ் கேக் ரொம்ப சாப்பிட்டு விட்டேன் போல இருக்கு. தூக்கம் அப்படி கண்ணை சுற்றி வருது.

அதெல்லாம் அப்பறம். இன்னிக்கு முதல்லே இந்த கோலத்தை பாருங்க.


இந்த கோலம் கோலா லம்பூர் லேந்து வந்ததாக்கும்.
2010 drawn before a plaza at Kuala Lumpur.
அங்கன ஒரு பிளாசா விலே அங்கே வேலை பார்க்கும் இந்தியர் கலாசாரத்தை ஒட்டி நடத்தப்படும் தீபாவளி திருநாளன்று போட்ட கோலம் இது.

இன்னிக்கு என்ன காலை சிற்றுண்டி ?  யார் உபயம் ?பின்னே

அத முதல்லே .கேளுங்க.
 என்ன தான் சொன்னாலும் மனசு  அந்த பெருமாள் மேல திருவரங்கத்தான் பக்கம் திரும்பல்லையே....

முதல்லே  பாடல்,பின்னே   பிரவசனம்.அப்பறம் தான்  பிரசாதம்.

சரி, சீக்கிரமா பாட்டை  போடு.

இன்று திருப்பாவை யிலே
பத்தாவது பாசுரத்தை பாடுபவர் எம்.எல்.வி. அவர்கள்.

தோடி ராகத்துலே எம்.எல்.வி. அம்மா பாடி இருக்காங்க. 
கண்ணதாசன் உரை என்ன தெளிவா இருக்கு. அத ஒரு தரம்  படிச்சு,கோதை அம்மா என்ன தான் எழுதியிருக்கா அப்படின்னு .புரிஞ்சுக்கங்க.

படிக்கிறேன்.பாடவும் போறேன். ஆனா இது கொஞ்சம் ஸ்லைட்டா ஹிந்தி மெட்டு.  நீயும் கேட்கறையா ?

கேட்கிறேன்.ஆனா அதே சமயம் கேட்டுண்டே 
+Shylaja Narayan 
நான் அந்த ஸ்ரீரங்கம் ஷைலஜா வின் இலக்கிய கட்டுரையை இன் த மீன் டைம் படிக்கிறேன்.  அந்த அரங்கத்தான் அபார அருள் அவங்களுக்கு இருக்கு. இல்லைன்னா இது மாதிரி எழுத முடியாது. 

அடடே..வேளுக்குடி சார் வந்தாச்சு.
வாங்கோ. வாங்கோ. (உங்க டைரி இன்னும் வல்லையே சார் !!)
+velukkudi krishnan 
VELUKKUDI KRISHNAN ON THE SECOND DAY

DISCOURSE ON THIRUPPAVAI.

கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.
அத்தனையும் பாற்கடல் லே கிடைக்கிற திவ்யாம்ருதம்.

மெல்ல வந்து கதவைத் திற..

என்ன விஷயம் ?

இன்னிக்கு ஏதோ புது தினுசா ஒரு டிபன் வந்து இருக்கு.

யாரு கொண்டு வந்திருக்காங்க ?

ஆதி வெங்கட் அவங்க அனுப்பியதா  சொல்றாங்க. 

நம்ம வேங்கட நாகராஜ் இல்ல, டெல்லிக்காரர். அவரது தர்மபத்னி. 

என்ன அடை மாதிரி இருக்கு ?

ஆமாம். இது தவலை அடை .  தவலைப் பானை போல வயிறு இருந்து பசி உயிர் போனாலும் ,  ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுடும். அதுக்குன்னு நாலைஞ்சு சாப்பிட்டு வயிறு காஸ் ஜாஸ்தியா போயி,
ஜெலூசில் டாப்லெட் பத்து சாப்பிடாதீங்க.


எனக்குத் தெரியாதா என்ன ?
ரொம்ப டேஸ்டா இருக்கறது எல்லாமே கொஞ்சமாத்தான் சாப்பிடனும். அது சரி, தொட்டுக்க என்ன ?

கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, சில பேர் இட்லி மிளகாய் பொடி போட்டு இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க

ஆஹா. ரொம்ப டேஸ்டா இருக்கே...  அந்தக் காலத்துலே எங்க அம்மா பண்ணுவாங்க..  ஹூம்.. நினைச்சுப்பார்க்கவே முடியாது இப்ப எல்லாம்..

+Geetha Sambasivam சொல்லிக்கொடுத்தாங்களாம். 

அப்ப யாருக்கு தாங்க்ஸ் சொல்லுவது ?

எப்பொருள் யார் யார் தயார் செய்யினும்
அப்பொருள் முதற்கண் உண்பது அறிவு.
+Adhi Venkat
ஆதி வெங்கட் அவர்களுக்கும் நன்றி.

*******************************************************************************


If there is love, then there is no fear, and if there is fear then there is no love. See, fear, love and hatred are all made up of the same energy. When there is hatred in a person, he is not afraid of anything. When there is deep love in a person, then also there is no fear. It is one energy that manifests in these three forms - love, hatred and fear.  +Sri Sri Ravi Shankar 

செவ்வாய், டிசம்பர் 24, 2013

MLV sings and Velukkudi Lectures. What a Divine Mix on the 9th Day of Margazhi.


இன்று மார்கழி மாதம் ஒன்பதாவது நாள்.

தூமணி மாடத்திலே சுற்றும் விளக்கு எரிகிறது அப்படின்னா என்ன தெரியறது ?

அந்தக் காலத்துலே பவர் கட் ஏதும் கிடையாது  அப்படின்னு தெரியறது.

கொஞ்சம் கூட யோசிக்காம உடனே பதில் சொல்ரதுல்லே உங்களை மிஞ்ச உலகத்துலே வேற யாரும் இருக்கமாட்டா..  இந்த கோலம் போடனும் அப்படின்னு காலைலே 4.30 மணிக்கே வந்து லைட் போட்டுண்டு கோலம்.

அதுதான் சுற்றும் விளக்கெரிய ..அப்படின்னு பாடறா போல இருக்கு.

பாசுரத்தை சரியா கேளுங்கோ. அப்பத்தான் அர்த்தம் புரியும்.

சரி. சத்தமா வை. 

 சித்தத்தை சிவன் மேல் வைத்தால் வெளிச் சத்தம் உட்சத்தம் எல்லாமே நல்லா கேட்கும்.இன்னிக்கு பஜனைக்கு இன்னுமே ஒரு பத்து பேரு கூட யாரும் வல்லையே !!

கவலை  வேண்டாம்.பனி ரொம்ப ஜாஸ்தி

+Balu Sriram
நேத்திக்கே ஸ்ரீராம் சார் மூக்கை உறிஞ்சுண்டு  இருந்தார்.
அவாத்துலே  ஒரு வேளை இன்னிக்கு லீவ் போடுங்கோ அப்படின்னு சொல்லி  இருக்கலாம்.


அப்ப என்ன செய்யறது ? பஜனை postponed  அப்படின்னு வாசல்லே ஒரு போர்டு வச்சுடலாமே. 

அதெல்லாம் வேண்டாம். இந்த பணியை விடக்கூடாது. பனியும் ஜாஸ்தி.அத முன்னாடியே யோசனை  செஞ்சு தான் ஒரு காரியம் செஞ்சு இருக்கேன்.

இன்னிலேந்து உபன்யாசம் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.

யார் வரப்போறார் ?

வேளுக்குடி கிருஷ்ணன்

தன்யனானேன்.  அவர் வருவதற்கு முன்னாடி நான் பாடி கண்ணதாசன் சொன்ன உரையையும் படித்து விடட்டுமா ?

என்ன ராகத்துலே பாடரதாக உத்தேசம் ? தொண்டை சரியில்லையே..

இந்த பாசுரம் சாதரணமா அமீர் கல்யாணி லே தான் பாடுவா. 
நான் ஒரு டிபரண்டா டிரை பண்ணப்போறேன்.
கேட்கறையா ?

சரி, சரி, என்னை விட்டா உங்களுக்கும் யாரு லிசனர் இருக்கா ?ஆஹா. வேளுக்குடி சார் வந்தாச்சு.
வரணும் வரணும். 
அவதாரிகை. இன்னிக்கு தமிழ்லே முன்னுரை


t
டிபன் ?

ஒரு மணி நேரத்துக்கு மேலே பிரவசனம் பண்றார்.  பொறுமையா கடைசி வரைக்கும் கேட்கரவாளுக்கு மட்டும் ...

என்ன ?

சரவணா பவன் லேந்து மினி டிபின் கொண்டு வரச் சொல்லி இருக்கேன். 

ஆஹா ...பொறுத்தார் பூமி ஆழ்வார்.

அது ஆள்வார் . மார்கழி மாசத்திலே பேசப்படுவது ஆழ்வார். 
பெண்ணாக பிறந்து தன இள வயதிலேயே அரங்கனைப் பாடுவது அந்த தாயாரே அவதரித்து இருந்தால் தான் சாத்தியம். 

ரைட்டு.  டிப்பின் லே என்னென இருக்கும் ?

நீங்களே பாருங்க. சூப்பர் ஆ இருக்கே...

*******************************************************************************8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
********************************************************************************If people engage themselves in doing service activities, and practise  ujjayi breath and meditation, then the same energy which one experiences as fear, anxiety and tension, flips over and becomes love and compassion for all. +Sri Sri Ravi Shankar 


திங்கள், டிசம்பர் 23, 2013

எருமைகள் புறப்பட்டு விட்டன


 ஆஹா இன்னிக்கு மயில் கோலம் !! என்ன அழகு...
இதையே இப்படி சொன்னா இங்கு போனா பிரமிச்சு போயி, அங்கேயே இருந்து விடுவீர்கள். 


இங்கே பாருங்க.. பெருமாள் பவனி வரார்.
பின்னே வரும் வேத விற்பன்னர் யாவரும் திருப்பாவை எட்டாம் பாசுரத்தை பாடி வருகின்றனர்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு ..எனத் துவங்குகிறது எட்டாம் திருப்பாவை
எருமைகள் புறப்பட்டு விட்டனவாமே.

வாங்கோ வாங்கோ.  இன்னிக்கு ஒரு உபன்யாச கர்த்தா இந்த திருப்பாவையின் மகிமையை எடுத்து சொல்லுகிறார். அதை கேட்டு பயன் பெறுங்கள்.  முக்கியமான அஞ்சு பேர் மட்டும் இன்று ஊர்வலம் போயிட்டு வரலாம் 
என்று வந்தவர்களிடம் நாங்கள் பணிக்கிறோம். இல்லை பணிந்து சொல்கிறோம்.

சிலர் கவனம் சற்று நேரத்திற்குப் பின்னே சிதறுகிறது.
என்ன என்று பார்த்தால் அங்கே நெய் உப்புமா கம கமக்கிறது.
ஆஹா இதுவல்லவா இன்றைய பிரசாதம் !!

சித்ரா அம்மாஸ் கிச்சன் லேந்து தயார் செய்து கொண்டு வந்து இருக்கிரார்கள். என்ன விசேஷம் இதில் இப்படி ஒரு அபார வாசனை  என்று நைசா வந்தவர்களிடம் கேட்டேன்.
வழக்கமா சீசேம் ஆயில்,இன்று ப்யூர் நெய்யில் செய்து இருக்கிறோம். என்றார்கள்.

நான் கேடரிங் பீபிள் கிட்டே பேசுவதை கவனித்து விட்ட பார்யாள்,

அது என்ன சோறு தான் சொர்க்கம் என்று அலைகிறீர்கள் என்று அலுத்துக்கொண்டாள் பார்யாள்.

அன்னம் ச பிரம்மா என்று போட்டு இருக்கில்லையா என்றேன்.

அந்த அபார கருணா மூர்த்தியான அநந்த பத்மநாபனிடம் மனசை செலுத்தி
போகிற வழிக்கு புண்யத்தை தேடி  தெரிந்து கொள்ளலாம் இல்லையா , இன்னும் ஒரு ஹாப் ஆன் அவருக்கு உபன்யாசத்தை கேளுங்கள்.என்றாள் இவள்.

மனசோ, உபன்யாசம் முடியறதுக்கு முன்னாடி உப்புமா முடிஞ்சுடும் போல இருக்கே என்கிறது

 இன்னர் இண்டூயிஷன் இஸ் த ஒன் ஒன் மஸ்ட் லுக் இண்டு வென் எவரிதிங் கோஸ் அஸ்ட்றே ..மெனேஜ்மெண்ட் ப்ரின்சிபிலும் ஞாபகத்துக்கு வர்றது.

உபன்யாச கர்த்தா மனசை பெருமாளிடம் எப்படி செலுத்தி அதை நிலைத்து இருக்கச் செய்யவேண்டும் எனச் சொல்கிறார்.

சரிதான். அதற்குள் உப்புமா சூடு ஆறிடும்போல இருக்கே...!!!

ஆறு மனமே ஆறு.


*****************************************************************************
For every decision, it is essential that you are in touch with that inner source of intuition, then you will seldom go wrong. +Sri Sri Ravi Shankar
ஞாயிறு, டிசம்பர் 22, 2013

தயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயார் ஞாபகம் எப்படி


விடியற்  காலைலே எழுந்திருக்கும்போதே மணி ஐந்து அடித்தாகி விட்டது.

அடடா... ரொம்ப நேரமாயிடுத்தே...
திருப்பாவை ஊர்வலம் கிளம்பற நேரம் வந்துடுத்தே என்ற ஆங்க்சைடி கலந்த வேகத்துடன் எழுந்து கொள்ளும்பொழுதே
பெட்டர் ஹால்ப் வந்து be quiet. go and watch at the door என்றாள்.

அங்கே எனது பேத்தி மாதிரி ஒருவர் என்னமா ஒரு கோலம் வரைகிறாள்.

என்னோட பேத்தி அமெரிக்காவிலே படிக்கிறா இவளுக்கு என்ன தமிழ் கலாசாரம் தெரிந்திருக்கும் என்ற நினைத்தது தான் தப்பு. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஐம்பது முதல் நூறு இந்தியக்குடும்பங்கள் அவர்களது குழந்தைகளைச் சந்தித்தேன்.  நம்ம எது எல்லாம் fear காரணமா செய்கின்றோமோ அதை எல்லாம் அவர்கள் faith ஐ பிரதானமாக வைத்து செய்கிரார்கள்.  எப்போதுமே நம்ம நாட்டை விட்டு வெகு தூரம் செல்லும்போதுதான் நம் நாட்டு பண்பு, கலாசாரம் இவற்றைப்பற்றிய உணர்வு நமக்கு ஏற்படுகிறதோ !!!


கவனமாக பார்த்தேன்.

ஒரு பத்து நிமிஷத்துலே வித் ஆல் த அக்யுரசி அண்ட் க்ரியேடிவிடி.
please do not go away without watching it fully.
 

தாத்தா ..
என்னை பார்த்தபின் அந்த பெண் சொல்கிறாள்.
This is Rangoli devoted to Goddess Lakshmi
சாக்ஷாத் அந்த லக்ஷ்மி தேவியே வந்து கோலம் போட்டதோ என்று தான் வியந்து போய்விட்டேன். 
உன் பேரு என்னம்மா என்றேன். ஜண்டால் ஜூமெல் என்றாள். இவளது வலைக்கு சென்று இவர் செய்யும் அற்புத ஓவியங்கள், கோலங்கள் கண்டு மகிழுங்கள். 

திருப்பாவை பஜனை கோஷ்டி எம்.எல்.வி. அம்மா பாடி இருக்கும் பதிகத்தை சிரத்தையா சொல்லி செல்கிறது.
கீசு கீசு

tஉங்களுக்கு லேசா பீவர் இருக்கா மாதிரி இருக்கு. நீங்க வீட்டிலேயே இன்னிக்கு திருப்பாவை பாடிட்டு இருங்க என்று வீட்டுக்காரி 144 போட்டு விட்டாள். இருந்தாலும் இந்த பாட்டை பாசுரத்தை நாராயணனை, கேசவனை பாடாத நாவென்ன நாவோ என்று

சுப்பு தாத்தா சாரங்க ராகத்தில் பாடினால் எப்படி இருக்கும் என்று தனக்குள்ளே  பாடிப்பார்க்கிறார். ஆஹா அருமையாக இருக்கிறது.

அவர் பாடினது காதில் விழுந்தது போல் இருக்கிறது.  பாட்டி அங்கே வருகிறாள். ஏதோ சங்கர் மகாதேவன் என்று மனசுக்குள்ளே நினைப்பு என்று முணுமுணுக்கிறாள்.

அடியே பகவனை எம்பெருமாளைப் பாட குரலா முக்கியம், பக்தி முக்கியம், அந்த பெருமாள் காலடியிலே என்னிக்கு சான்னித்யம் ஆகப்போறேன் அப்படிங்கற சிந்தனை தான் முக்கியம் என்று தத்துவம் பேச ஆரம்பித்தபோது,

மூக்கு என்னவோ குறுகுறு என்றது.
என்ன விஷயம் என்று பார்த்தேன்.

வாசல்லே ஒரு ஆடோ நிற்கிறது. அதில் இருந்து இரண்டு அண்டாக்கள் கொண்டு வந்து வைத்து விட்டு போகிறார்கள்.

அதில் ஒன்றைத் திறந்து பார்ப்போம் என்று பக்கத்தில் போனேன்.

பஜனைக்கு போனவர்கள் இன்னும் வரவில்லை. அதற்குள் உங்களுக்கு மட்டும் என்ன அவசரம்  அவங்க வரவரைக்கும் பொறுக்க முடியாதா..
பெருமாள் பெருமாள் என்று சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.
அதற்குள் புளியோதரை ஈர்த்து விட்டதா. .புளியோதரை செய்யும் முறை இங்கு  பார்க்கவும்.
புளியோதரை செய்யும் விதம் எப்படி என்று இங்கே பார்க்கும்போது பார்யாள்
திரும்பவும்  வந்தாள்.ரொம்ப சாப்பிடாதீக. அளவுக்கு மிஞ்சினா அமிருதமும் விஷம் .
தயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடுங்க என்றாள்.
மீனாச்சி, இது தயிர் சாதம் இல்ல. தயிர் சேமியா பாத். அமக்களமா இருக்கு.
இன்னிக்கு உபய தாரர்கள்
 http://malar-n.blogspot.in/2010/04/puliyotharaitamarind-rice.html
 http://rnirmal.com/
தயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது
தாயார் ஞாபகம் எப்படி இருக்கும் ?
என்றாள் இவள்.

முறைத்துப் பார்த்தேன். 
நீ யும் தான் இருக்கே .
ஐம்பது வர்சத்துலே ஒரு நாளாச்சும் இந்த தயிர் சேமியா பண்ணி இருக்கியா என்று நினைத்துக்கொண்டேன்.
சொல்ல முடியுமா என்ன?

**********************************************************************************

 Whenever you are happy and peaceful, your mind is in touch with your being. When you are disturbed because of thoughts and emotions, then you are unable to see the peace which is always there. +Sri Sri Ravi Shankar

சனி, டிசம்பர் 21, 2013

வாசலிலே பூ விளக்கு கோலம்.

திருப்பாவை ஆறாம் நாளான இன்று

வாசலிலே பூ விளக்கு கோலம்.
+Shylaja Narayan
புள்ளும் சிலம்பின காள் என்று துவங்கும் பாசுரம். திருமதி. ஷைலஜா அவர்கள் அற்புதமாக இந்த பாசுரம் உருவான பின் புலத்தை சொல்கிறார்கள் இங்கே சென்று படியுங்கள்.


இன்றைக்கு தாத்தா திருப்பாவை பஜனை கோஷ்டியில் நாட் கோயிங்.
சென்னையில் இரண்டு நாட்களாக அடிக்கும் பனி காரணமாக , ஜல்ப் பிடித்துக்கொண்டு விட்டது.

தாத்தா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நாங்க போயிட்டு வந்துடறோம். என்று
தாத்தாவின் சிஷ்ய கோடிகள். வாலண்டியர் பண்ண, அவர்
சரி என்றார்.


இன்றைக்கு பிரசாதம் சாம்பார் இட்லி ( நெய் கலந்த சாம்பார்)  ஒரு அம்பது ப்ளேட் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது.

எப்படி செய்வது என்று கேட்டேன். முதல்லே சாப்பிடுங்க என்றார்கள்.


saambar idli
தாத்தா ஒரு மூணு ப்ளேட் போதும் என்று நினைத்தார். இருந்தாலும் அரை ப்ளேட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

ஜலதோஷம் லேசா பீவர் இல்லை மாதிரியும் இருக்கு. இருக்கிற மாதிரியும் இருக்கிறது. 

அதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருந்தால், கண்ணுக்கு நேரே இருக்கும் சாம்பார் இட்லி காணாமல் போயிடும் என்ற கவலை வேற.

இப்ப என்ன பண்ணுவது என்று சக தர்மிணியைக் கேட்டேன்.

பேசாம கண்ணை மூடிண்டு ராம ராம அப்படின்னு சொல்லிண்டு ஜபம் பண்ணுங்க அப்படின்னாள்.

த எண்ட் 
***********************************************************************************************************************************************************************************************************************************************


இராம நின்னே நீ ப்ரோவரா..
இன்னிக்கு சனிக்கிழமை. அனுமார் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றேன். ஒவ்வொரு நாளும் மாருதி பகவானை பிரார்த்தனை பண்ணும்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள் இருக்கின்றன. 


Meditate. A few minutes of deep meditation will connect you with the ocean of intuition deep within you. +Sri Sri Ravi Shankar 

வெள்ளி, டிசம்பர் 20, 2013

அது யாரு அந்த மாயன் ?


அது யாரு அந்த மாயன் ?

என்ன கேட்கற ?

யாரு அந்த மாயன் ?

மாயனா யாரை கேட்கராய் !  எனக்கு எந்த மாமனையும் தெரியாது.

நாராயணா நாராயானா !!
மாயனைச் சொன்னேன்.
நேத்திக்கு அந்த குழந்தைகள் போட்ட கோலாட்டமே  மனசுலே நின்னுண்டு இருந்தது இல்லையா.
இராத்திரி லே ஒரு கனவு.

என்ன .. உனக்கு ஒரு ரூபி வச்ச மோதிரம் வாங்கற மாதிரியா ?

அதெல்லாம் பிஸ்தா.
இங்கே இந்த கனவிலே அந்த குழந்தகள் அத்தனையும் வித விதமா கலர் புல்லா டிரஸ் பண்ணிண்டு வந்து
திருப்பாவை அஞ்சாம் பாசுரத்துக்கு நாட்டியம் ஆடறா பாருங்கோ..

நான் எங்கே பார்த்தேன்.?
 நீ மட்டும் தானே கனவிலே பார்த்தேன் அப்படின்னு சொல்ற.  பாத்த உடனே என்னை எழுப்பக்கூடாதோ...

கனவு கலைஞ்சு போடும் இல்ல.
அதனாலே தான்.
இப்ப பாருங்க...
கண்ணன் நினைச்சான் கனவுலே வந்துட்டான்.

கையைக் கிள்ளிப் பார்த்தேன். நான் தூங்கிக்கொண்டு இல்லை.
கிழவி கனவில் கண்டதை உடனே டவுன்லோடு பண்ணி வச்சு இருக்கிறாள்.

காலை விடிந்து விட்டது. எனக்கு முன்னமேயே வீட்டுக்காரி எழுந்து
இந்த எழுபத்தி இரண்டு வயசுலே வாசல்லே என்னமா ஒரு அழகா கோலம் போட்டு இருக்கிறாள் .

மீனாச்சி என்று அன்பொழுக அழைத்தேன்.

என்ன ?

என்று அந்த  சரவணன் மீனாச்சி சீரியல் ஹீரோயின் குரலில் ரிடார்ட் செய்ய...
நான் தொடர்ந்தேன்.

ரொம்ப அழகா...

ஆகிற வயசுக்கு, இந்த கமேண்டாலாம் தேவையா ?

உன்னை சொல்லலீடி .. கோலத்தை சொன்னேன்.

அதுவா. வாணி முத்துகிருஷ்ணனுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.
இப்ப இந்த நாட்டியத்தை பாருங்க. என்று டி.வி.டி ஐ. ஆன் பண்ண, 
என்ன ஒரு சிரத்தை? என்ன ஒரு பக்தி.

அதுக்கு இந்த குழந்தைகளுக்கு அந்த ஆண்டாளே அனுகிரஹம் பண்ணி இருக்கணும்.

மீனாச்சி, ஏண்டி அந்த அனுகிரஹத்துலே ஒரு அஞ்சு பர்சென்ட் கூட உனக்கு கிடைக்கலையா ?

ஆண்டாள் பெயரைச் சொல்வதற்கும் அந்த திருப்பாவை தனை தினம் தினம் காலை எழுந்தவுடன் பாடவேண்டும் என்று மனசு கொடுத்ததே அந்த தாயார் தானே. !!

ஆமாம். ஆமாம்.

என்ன ஆமாம் என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீரங்கம் வந்தார்.

இந்த உரை பளிச் அப்படின்னு செந்தமிழ் லே அழகா இருக்கிறது இல்லையா.
என்னோட உரையையும் பாருங்க.. என்றார்.

இன்றைய பஜனை கோஷ்டி ஊர்வலத்தைத் துவங்கியது.

தாத்தாவுக்கு மூட்டு வலி பயங்கரமா. நெற்றிக்கு சாலிகிராமம் பாபா கோவிலுக்கு போயிட்டு வந்தார். வாழ்க்கையிலே எத்தனை மேடு பள்ளம் இருக்கும் என்பதை விருகம்பாக்கம் ரோடுகளே ஆட்டோவில் போகும்போதும் சொல்லுகின்றன.

 இருந்தாலும் தத்தக்கா தத்தக்கா என்று அவரும் நடந்தார்.
பாட்டை கேட்டுண்டே தாத்தாவும் போகிறார் ஊர்வலத்துடன்.
 மனசு சொல்றது:
என்னமா அந்த அம்மா பாடறாங்க..

அந்த நாராயணன் நாமத்தை  கேட்டுகிட்டே இருக்கணும். 
நாராயணன் நம்மை அறியாம கூட்டிண்டு போகனும் தாத்தா நீங்க உட்காருங்கோ. நாங்க இன்னிக்கு பிரசாதம் எல்லாம் தந்துடரோம் என்று +Balu Sriram வாய்ஸ் தர்றார்.

இன்னிக்கு என்ன பிரசாதம் என்று கேட்பதற்குள் வாசனை மூக்கைத் துளைத்து விட்டது.

இவ்வளவு டேஸ்டா எங்க கிடைக்கிறது என்று கொண்டு வந்தவரை கேட்டேன்.

ஒரு ரோஜா கொத்துடன் பிரசன்னமான அவர்,  கடவுள் காட்டும் பிரத்யேக அன்பு தான் நாம் நம்ம பிரண்ட்ஸ் வழியாக உணரும் நட்பு என்று புள்ளி வைத்த கோலம் போல சிக் என்று ஒரே செண்டன்ஸில் ஒரு உண்மையை புரிய வைக்கிறார்.
+Ramalakshmi Rajan

பத்மா ரிசைப்ஸ் என்று பெங்களூர் ல் இருக்கிறது. ஸ்பெசல் ஆக நிவேத்தியம் என்று சொல்லி வாங்கிண்டு வந்தேன் அவர்களும் சொல்ல வலை நண்பர் எல்லோருமே எஸ். எஸ். என்றார்கள்.

தாங்க்ஸ் .

நண்பர் திரு வெங்கடராமன் பெங்களூரில் தான் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஒரு கூடை நிறையா வாங்கிண்டு வந்திடுவார்.

நாராயணா !!

ப்ளீஸ் டிலே யுவர் விசிட் டில் ஐ ஹாவ் ஹார்ட் புல் ஆப் கேசரி.

த எண்டு
தொடரும்.  நாளைக்கு ஆறாவது பாசுரம் திருப்பாவை

************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
மனசு இருக்கே அது சஞ்சலம் என்பதற்கு ஒரு உதாரணம். 
ரவி சங்கர் அவர்கள் சொல்லுவார்.

The most unreliable thing in your life is your own mind. One minute, it likes s omething, another minute it likes something else. So, your mind goes all over the place. So, you cannot rely on your own mind. Once you know this, you will laugh, you will smile. Never mind: why should I control someone else’s mind when my mind itself is not under my control? Isn’t it? +Sri Sri Ravi Shankar