JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

தயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயார் ஞாபகம் எப்படி


விடியற்  காலைலே எழுந்திருக்கும்போதே மணி ஐந்து அடித்தாகி விட்டது.

அடடா... ரொம்ப நேரமாயிடுத்தே...
திருப்பாவை ஊர்வலம் கிளம்பற நேரம் வந்துடுத்தே என்ற ஆங்க்சைடி கலந்த வேகத்துடன் எழுந்து கொள்ளும்பொழுதே
பெட்டர் ஹால்ப் வந்து be quiet. go and watch at the door என்றாள்.

அங்கே எனது பேத்தி மாதிரி ஒருவர் என்னமா ஒரு கோலம் வரைகிறாள்.

என்னோட பேத்தி அமெரிக்காவிலே படிக்கிறா இவளுக்கு என்ன தமிழ் கலாசாரம் தெரிந்திருக்கும் என்ற நினைத்தது தான் தப்பு. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஐம்பது முதல் நூறு இந்தியக்குடும்பங்கள் அவர்களது குழந்தைகளைச் சந்தித்தேன்.  நம்ம எது எல்லாம் fear காரணமா செய்கின்றோமோ அதை எல்லாம் அவர்கள் faith ஐ பிரதானமாக வைத்து செய்கிரார்கள்.  எப்போதுமே நம்ம நாட்டை விட்டு வெகு தூரம் செல்லும்போதுதான் நம் நாட்டு பண்பு, கலாசாரம் இவற்றைப்பற்றிய உணர்வு நமக்கு ஏற்படுகிறதோ !!!


கவனமாக பார்த்தேன்.

ஒரு பத்து நிமிஷத்துலே வித் ஆல் த அக்யுரசி அண்ட் க்ரியேடிவிடி.
please do not go away without watching it fully.
 

தாத்தா ..
என்னை பார்த்தபின் அந்த பெண் சொல்கிறாள்.
This is Rangoli devoted to Goddess Lakshmi
சாக்ஷாத் அந்த லக்ஷ்மி தேவியே வந்து கோலம் போட்டதோ என்று தான் வியந்து போய்விட்டேன். 
உன் பேரு என்னம்மா என்றேன். ஜண்டால் ஜூமெல் என்றாள். இவளது வலைக்கு சென்று இவர் செய்யும் அற்புத ஓவியங்கள், கோலங்கள் கண்டு மகிழுங்கள். 

திருப்பாவை பஜனை கோஷ்டி எம்.எல்.வி. அம்மா பாடி இருக்கும் பதிகத்தை சிரத்தையா சொல்லி செல்கிறது.
கீசு கீசு

t



உங்களுக்கு லேசா பீவர் இருக்கா மாதிரி இருக்கு. நீங்க வீட்டிலேயே இன்னிக்கு திருப்பாவை பாடிட்டு இருங்க என்று வீட்டுக்காரி 144 போட்டு விட்டாள். இருந்தாலும் இந்த பாட்டை பாசுரத்தை நாராயணனை, கேசவனை பாடாத நாவென்ன நாவோ என்று

சுப்பு தாத்தா சாரங்க ராகத்தில் பாடினால் எப்படி இருக்கும் என்று தனக்குள்ளே  பாடிப்பார்க்கிறார். ஆஹா அருமையாக இருக்கிறது.

அவர் பாடினது காதில் விழுந்தது போல் இருக்கிறது.  பாட்டி அங்கே வருகிறாள். ஏதோ சங்கர் மகாதேவன் என்று மனசுக்குள்ளே நினைப்பு என்று முணுமுணுக்கிறாள்.

அடியே பகவனை எம்பெருமாளைப் பாட குரலா முக்கியம், பக்தி முக்கியம், அந்த பெருமாள் காலடியிலே என்னிக்கு சான்னித்யம் ஆகப்போறேன் அப்படிங்கற சிந்தனை தான் முக்கியம் என்று தத்துவம் பேச ஆரம்பித்தபோது,

மூக்கு என்னவோ குறுகுறு என்றது.
என்ன விஷயம் என்று பார்த்தேன்.

வாசல்லே ஒரு ஆடோ நிற்கிறது. அதில் இருந்து இரண்டு அண்டாக்கள் கொண்டு வந்து வைத்து விட்டு போகிறார்கள்.

அதில் ஒன்றைத் திறந்து பார்ப்போம் என்று பக்கத்தில் போனேன்.

பஜனைக்கு போனவர்கள் இன்னும் வரவில்லை. அதற்குள் உங்களுக்கு மட்டும் என்ன அவசரம்  அவங்க வரவரைக்கும் பொறுக்க முடியாதா..
பெருமாள் பெருமாள் என்று சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.
அதற்குள் புளியோதரை ஈர்த்து விட்டதா. .



புளியோதரை செய்யும் முறை இங்கு  பார்க்கவும்.
புளியோதரை செய்யும் விதம் எப்படி என்று இங்கே பார்க்கும்போது பார்யாள்
திரும்பவும்  வந்தாள்.ரொம்ப சாப்பிடாதீக. அளவுக்கு மிஞ்சினா அமிருதமும் விஷம் .
தயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடுங்க என்றாள்.
மீனாச்சி, இது தயிர் சாதம் இல்ல. தயிர் சேமியா பாத். அமக்களமா இருக்கு.
இன்னிக்கு உபய தாரர்கள்
 http://malar-n.blogspot.in/2010/04/puliyotharaitamarind-rice.html
 http://rnirmal.com/
தயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது
தாயார் ஞாபகம் எப்படி இருக்கும் ?
என்றாள் இவள்.

முறைத்துப் பார்த்தேன். 
நீ யும் தான் இருக்கே .
ஐம்பது வர்சத்துலே ஒரு நாளாச்சும் இந்த தயிர் சேமியா பண்ணி இருக்கியா என்று நினைத்துக்கொண்டேன்.
சொல்ல முடியுமா என்ன?

**********************************************************************************

 Whenever you are happy and peaceful, your mind is in touch with your being. When you are disturbed because of thoughts and emotions, then you are unable to see the peace which is always there. +Sri Sri Ravi Shankar