திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் வீட்டுக்கோலத்தைப் பார்த்தேன்.
பிரமித்துப்போனேன். பார்த்துக்கொண்டே அவர்கள் வாசலிலே நின்று கொண்டே இருந்தேன்.
யாரேனும், யோவ் பெரிசு !! யாருய்யா நீ ? எங்க இந்த காலைலே பனிலே நின்னுகிட்டு இருக்கே ? வீட்டுக்கு பத்திரமா போய் சேருய்யா . நடு ரோட்டு வழிலே நின்னுகிட்டு இருந்தா காலைலே பைக் ரேஸ் , கார் ரேஸ் அப்படின்னு யாருன்னாச்சும் நீ யாருன்னே தெரியாதபடி செஞ்சுடுவாங்க..
அப்படின்னு கொஞ்ச நேரம் கொஞ்சி பேசுவார்களோ என்று தோன்றியது.
அந்த நேரம் , கோலத்தின் வரைவாளர் வந்தார்.
தாத்தா ..என்ன வேணும் ? என்றார்.
எங்காத்து வாசலிலும் அந்தக்கோலத்தை ஒரு நாள் போட்டுக் கட்டுமா என்று கேட்டேன்.
ஓ. எஸ். என்று இங்க்ளிஷில் அவர்கள் சொல்ல, அனுமதி கிடைத்து விட்டதால் இங்கே மேலே நீங்கள் பார்க்கிறீர்கள்.
தாங்க்ஸ்
+Mythily kasthuri rengan
இன்னிக்கு பஜனை திருப்பாவை
மூன்றாவது பாடல்.
பாடும்போதே ஸ்ரீரங்கம் +Shylaja Narayan அவர்கள் மிகவும் நன்றாக விளக்கம் தருகிறார்கள் தனது பதிவிலே அதையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,
நாமும் நம் பாவைக்கு சாற்று நீராடினால்
நீங்கள் கேட்பது அடானா ராகம். கவிஞர் கண்ணதாசன் உரை.
தமிழ் ஹிந்துவில் கண்ட உரை. அவர்களுக்கு நன்றி.
நேற்று திருப்பாவை பாடல் பாடும்போது +Balu Sriram அவர்கள் எங்கள் வீட்டில் இன்று சக்கரை பொங்கல் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
அடியே நாளைக்கு சக்கரை பொங்கல் என்று சகதர்மணியிடம் சொல்ல, அவளோ,
நாளைப்பாட்டுக்கு நாராயணன் இருக்கான் என்றாள்.
நாளைப்பாட்டுக்கு இல்ல,
இந்த மார்கழி மாதம் முழுக்கவே நாராயணனே நமக்கு பறை தருவான். ஆனா, என்னிக்கு எனக்கு நீ சக்கரை பொங்கல் தரப்போறே அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிப்புட்டேன்.
சரி, வெல்லம் , பாசிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிபருப்பு, நெய், திராட்சை, எல்லாம் வாங்கிண்டு வாங்க அப்படின்னு உத்தரவு போட,
நானும் அம்பிகா அப்பளம் ஸ்டோருக்கு சென்று,
எல்லாத்துலேயும் ஒரு கிலோ போட்டு பில் போடுங்க அப்படின்னு சொன்னா
அவன் என்னைப் பார்த்து,
சார் ஏலக்காய், முந்திரி எல்லாம் ஒரு கிலோவா வேணும் சிரிக்கிறான்.கேட்கிறான்
பின்னே என்ன பத்து கிலோ வா வாங்க முடியும் என்றேன்.
சார் எதற்கும் வீட்டுக்கு ஒரு செல் லுலே கேளுங்கள். என்கிறான்.
சரி என்று செல் அடித்தால், இவள் செல் எடுத்தாள் பேசினாள் என்றால் தானே. ரிங் போயிகிட்டே இருக்குது. எடுக்கிற வழியை காணோம்.
என்ன சார், கோவிச்சுக்காம நான் சொல்வதை கேளுங்க. என்றார்.
நான் வீடுலேயே கோவிச்சுப்பது கிடையாது.செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் என்று தெரியாதா என்ன எனக்கு,என்றேன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்றார் முதலாளி.
அப்ப என்ன தெரியும் ?
முந்திரி இருக்கும் இடம் தெரியல்லையா ?
சார், நீங்க வீட்டுக்கு போய், நிதானமாய் மாமி கிட்டே பேசி அப்பறம் எனக்கு போன் பண்ணுங்க. நான் கொண்டு வந்து தர்றேன். என்கிறார் ப்ரோப்ரைடர்.
எனக்கு வேண்டியவர்.
வீட்டுக்கு போய், அவளிடம் கேட்கலாம் . ஓட்டமும் நடையுமாக சென்றேன்.
அவளோ, அப்பத்தான் கருத்தம்மா வை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கப்பறம், மண் வாசனை, சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் , ஆபீஸ் என்று போனால், மணி 11 ஆகிவிடும். அம்பிகா அப்பளம் ஸ்டோர்ஸ் கடையை சாத்தி விடுவார்கள்.
அப்பறம் நாளைக்கு சக்கரை பொங்கல் அம்பேல் ஆகிவிடும் என்ற பயம்.
ஒரு பவ்யமாக அவள் பக்கத்தில் நின்றேன்.
ஒரு இடைவேளை போது என்னை கவனித்த பார்யாள் என்ன விசேஷம் என்று கண்களால் கேட்க, நான் நடந்ததை நடந்தபடி, உள்ளத்தை உள்ளவாறே சொல்ல, அவள் திரும்பவும்,
நாராயணா, நாராயணா என்றாள்.
ஏன் நாராயணனைக் கூப்பிடற ? அவர் இப்போதே வந்துட்டா சக்கரை பொங்கல் எந்த ஜன்மத்திலே நான் சாப்பிடறது ?
சக்கரை பொங்கல் முதல்லே சாப்பிட்டு விட்டு பிறகு அவர் வந்தா நல்லதா இருக்குமே , என்று நான் சொல்ல,
நான் போன் போட்டு சொல்லிவிடுகிறேன் என்று செல்லை பிடுங்கினாள் .
யாருக்கு ? நாராயணனுக்கா ? என்றேன் திரும்பவும் பதட்டத்துடன்.
இல்ல, உங்க மாமியாருக்கு , என்றவள் செல்லில் கவனம் செலுத்தினாள்.
யாரு, அம்பிகா ஸ்டோர்ஸ் ஆ ... உடனே அரை கிலோ பாசிப்பருப்பு, ஆவின் நெய் 200 கிராம், முந்திரி பருப்பு 200 கிராம், ஏலக்காய் 50 கிராம் அச்சு வெள்ளம் ஒரு அரை கிலோ அனுப்புங்கோ என்றாள்.
அங்கிருந்து என்ன சொன்னாரோ அவர் ..
நல்ல வேளை . நான் பிழைத்துக்கொண்டேன் என்றாள்.
இவ கிடக்கா, சக்கரை பொங்கல் எப்படி செய்யணும் அப்படின்னு நம்ம தெரிஞ்சு வச்சுப்போம் என்று நானும் இன் த மீன் டைம் நெட்டிலே பார்த்தேன்.
இந்த சக்கரை பொங்கல் இருக்கிறதே...
அத வைஷ்ணவர்கள் அக்கார வடிசல் அப்படின்னு ஒரு கரஸ்பாண்டிங்க் டிஷ் a little different. அவர்களோட டிஷ் தனி சுவை.
ஆனா இதெல்லாமே சேர்ந்து ஒரு பத்து பேரோட சாப்பிடுவது தனி சுகம்.
இன்றைக்கு ஒரு ஸ்ட்ராங் காபி. இதோ இங்கே.
We need to develop the habit of sharing our joy with others. If you are happy, infect others with your happiness; don't just keep it to yourself. Any action done with this idea is service and the best form of service is uplifting someone's state of mind. +Sri Sri Ravi Shankar
நாளைக்கும் மறக்காம வாங்க...