JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், டிசம்பர் 26, 2013

செல்ல பெண்டாட்டி

செல்ல பெண்டாட்டிக்கு ஜே. 
திருப்பாவை 11 வது பாசுரம். 

Courtesy: www.mykolam.blogspot.com 

அதென்னங்க கோலம் !! நவ ரத்ன பதக்கம் மாதிரி மின்னுது !!

அடியே செல்லப் பெண்டாட்டி !!  மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

அது என்ன செல்ல பெண்டாட்டி !! திடீர்னு எழுபது இருபது ஆவுது !!

உனக்கு இது கூட தெரியாதா !!  இன்னிக்கு திருப்பாவை பதினோராம் பாசுரமே செல்ல பெண்டாட்டி பற்றி தானே !!

ஹா ஹா ஹா ஹா ..  அது செல்ல பெண்டாட்டி இல்லீங்க. செல்வ பெண்டாட்டி ங்க.

அப்ப திரும்பவும் அந்த பாட்டை கேட்டு பார்ப்போம். எம். எல்.வி. அம்மா தான் பாடறாங்க. 



இது என்ன ராகம். ? முகாரியா இல்லை ஹுசைனியா ?

முகாரி தான் அப்படின்னு நினைக்கிறேன். என் தங்கைக்கு போன் போட்டு கேட்கட்டுமா.?

உங்க தங்கைக்கு போன் போடறதுக்கு நான் என்ன பர்மிஷன் தரணுமா என்ன ?  தாராளமா பண்ணுங்க.. வேளுக்குடி வந்து உபன்யாசம் முடியட்டும்.

எஸ். எஸ்.  அது என்ன வாசல்லே புதுசா ஒரு வான் வந்து நிற்கிறது !!

+Balu Sriram +kg gouthaman +Ranjani Narayanan +Geetha Sambasivam +rajalakshmi paramasivam +Priya Baskaran +பார்வதி இராமச்சந்திரன். +Shylaja Narayan +Gomathy Arasu +Mythily kasthuri rengan +Rajeswari Jaghamani +meena kavinaya
ஆகா,,இத பாரு ஸ்ரீராம் சார், கௌதமன் சார், ..அப்பறம் ..

அடடே ! கீதா மாமி , ராஜலக்ஷ்மி மாமி, கோமதி மாமி, ரஞ்சனி மாமி , பார்வதி ராமச்சந்திரன் , பிரியா பாஸ்கரன், மைதிலி கஸ்தூரி ரங்கன் , ஷைலஜா , ராஜேஸ்வரி, கவிநயா எல்லாரும் வராங்க.

வாங்கோ வாங்கோ...

வேளுக்குடி உபன்யாசம் அப்படின்னு கேள்விப்பட்டோம். உடனே வந்துட்டோம். வாசுதேவன் சார் தன காரை அனுப்பினார.

எல்லோரும் வரணும்.   எல்லோரும் பட்டுப்பாயிலே உட்காருங்கோ.

எல்லாருக்கும் ஒண்ணு  சொல்லணும். ஷைலஜா மேடம் பதிவுக்கு தினம் எல்லோரும் போய் படிக்கிறீர்கள் என்று  நினைக்கிறேன். அவர்களது வியாக்கியானம் வியக்கும் அளவுக்கு   இருக்கிறது.எல்லாம் அந்த பெருமாள் கொடுப்பினை. அவர்கள் இன்னிக்கு இங்கே வந்திருப்பது நாங்கள் செய்த கொடுப்பினை.

 பசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களே என்று சொல்லி அந்த ஜீவாத்மாக்கள் பரமனை அடைய தமது துயில் களைதல் வேண்டும் என சொல்லாமல் சொல்லி,  உணர்த்தி விஷிஷ்டாத்வைதத்தின் ஒரு கோடியை காட்டி இருக்கிறீர்கள்.  மிக்க அழகு.

தாங்க்ஸ் தாத்தா.
அதுக்கு முன்னாடி இன்னிக்கு பாசுரத்தை பார்த்து கவிஞர் கண்ணதாசன் உரை என்னவென படிச்சுடலாமா ?




தன்யாசி ராகம் மாதிரி இருக்கே.

என்னது சன்யாசியா ?
பாட்டி, இது தன்யாசி ராகம்.
ஓஹோ... அடடே...

வேளுக்குடி சாரும் வந்தாச்சு.
THIRUPPAAVAI 11 PASURAM

velukkudi krishnan sir also arrived.




உபன்யாசம் முடியற நேரம்.

ஆஹா இன்னிக்கு நைவேத்யம் அண்டா அண்டாவா வரதே !!
எல்லாம் பகவத் சங்கல்பம்.

வெண்பொங்கல், சக்கரை பொங்கல்.  கூடவே யார் வர்றாங்க..

அதுவா.. சுப்பு தாத்தாவுக்கு தொண்டை கட்டின்ன்டு இருக்கு அப்படின்னு கேள்விப்பட்டு, சீனு அவங்க சுடு தண்ணீர் வெந்நீர் போட்டு ஸ்பெசல் ஆ கொண்டு வந்திருக்கார்.

 லேசா மிளகு, மஞ்சப்பொடி போட்டு குடிக்கணும்.





பாருங்கோ. செல்ல பெண்டாட்டி அப்படின்னு பாசுரத்திலே வந்தாலே எங்கே பார்த்தாலும் ச்வீட் தான்.

அதான் சக்கரை பொங்கல் வந்துடுத்து.

அது சரி, இவ்வளவு பேர் வந்திருக்கோம். ஒரு பொங்கலை கொடுத்து எல்லாரையும் அனுப்பிச்சுடலாம் அப்படின்னு பார்க்கறேளா ?

நீங்க சுப்பு தாத்தாவை சிம்பிளா நினைக்க கூடாது அப்படின்னு தான் ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருக்கார்.

போடுங்க தாத்தா.





என்ன சுப்பு தாத்தா பேச்சு மூச்சே காணோம்? எங்கே போயிட்டார் ?

அவர் எங்கேயும் போகல்ல. அந்த ஓரமா உட்கார்ந்து இருக்கார்.
என்ன செஞ்சுண்டு இருக்கார்.
அவரா !!  சக்கரை பொங்கல்லே சங்கமம் ஆயிட்டார்.

சைலண்டா சுகானுபவம் பண்ணிண்டு இருக்கார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு சுகம் தர்றது.

சாதம் ஒத்தருக்கு சுகம்.  அப்படின்னா
நாதம் இன்னொத்தருக்கு 
நூற்றுக்கு ஒத்தருக்கு
ராம நாமம்  சுகம். 

. அந்த ஆண்டாளுக்கோ...

ஆமாம்.
ஆண்டாள் அந்த அரங்கன் நினைப்பிலே சங்கமம்.
ஹரி ச்மரனையிலே மனசிலே நம்மை அறியாம ஒரு அமைதி ஒரு நிசப்தம் வந்துடறது இல்லையா. அதோடு கூடவே ஒரு ஆனந்தம்.

Celebration is the nature of the spirit. Any celebration has to be spiritual. A celebration without spirituality does not have any depth. And silence gives the depth to celebration. +Sri Sri Ravi Shankar