JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், டிசம்பர் 19, 2013

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

பார்த்த ஞாபகம் இல்லையோ !!
+Tulsi Gopal
ஏன் இல்லை.. இது எங்கள் அன்பு நண்பர் துளசி மேடம் ஆத்து கோலமும் அதனுள்ளே அவரது பூஜை அறையும்.  

இன்று நாலாம் நாள் திருப்பாவை பாடி பெருமாளை சேவிக்கும்  திரு கோபால் சாருக்காக விசேட பிரார்த்தனை. அவர் முழு நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். பழைய படி துளசி மேடம் உற்சாகமாக பதிவு எழுத துவங்கி இருக்கிறார்.


நான்காவது நாள். விடியற்காலை 5 மணிக்கே ஒரு ஏழெட்டு கலர் கலர் பாவாடை சட்டை போட்டுண்டு சின்னஞ்சிறு சிறுமியர்  கோலாட்டமும் கையுமாக, குதூகலமா  வந்துவிட்டார்கள்.  அவர்களது அம்மாக்கள் கூடவே வந்திருக்கிறார்கள்.


என்ன அமக்களமா இருக்கப்போறது இன்று நினைத்துப்பார்த்தால் அங்கே இன்னும் ஒரு அதிசயம்.


வியந்து போய் நிற்கிறேன். என்ன அற்புதமான பூக்கோலம்.
நாங்க தான் போட்டோம் என்று அந்த குழந்தைகளோட அம்மாக்கள் சொல்லாமே தன முக பாவங்களிலேயே பெருமையாக சொல்கிறார்கள்.

ஒரு விஷயம் துவங்கி விட்டாலே போதும்.
மேற்கொண்டு நடப்பதை பரந்தாமன் பார்த்துக்கொள்கிறான்.
சிகாகோ நகரில் கோலாட்டம் 
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

நாங்கள் எல்லோரும்  திருப்பாவை சொல்லும் கோஷ்டி முன்னாடி  கோலாட்டம் போட்டு கொண்டு வர்றோம் என்கிறது அந்தச் சின்னஞ்சிறுசுகள்.

அந்தக் குழந்தகளோட அம்மாக்கள்  அப்பாமார்களும் எங்கள் திருப்பாவை கோஷ்டிலே சங்கமம். மொத்தம் 30 பேர் துவக்கத்தில்.இருக்கோம்.




+Preethe Sriram அவர்கள் இந்த பாடலை அற்புதமாக பாடி இருக்கிறார்கள். அவருக்கு சுப்பு தாத்தா நன்றி சொல்லவேண்டும்.

மிக்க நன்றி. ப்ரீத்தி ஸ்ரீராம் ..அவர்களே.

சுப்பு தாத்தா காலைலேந்து எழுந்ததிலிருந்து தொண்டை கட்டி இருக்கிறது. எப்படி பாடுவது என்று யோசித்தபோது அந்த பரந்தாமனே இந்த பாட்டினைக் கேள் என்று சொல்லி இருக்கிறார்.

கண்ணதாசன் அற்புத உரை இங்கே.



சத்தமா நாலாவது திருப்பாவை ஆரம்பிக்கிறது.
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல்.

சுப்பு தாத்தா எல்லோருடனும் சேர்ந்து பாடிண்டு வராரே தவிர அவர் நினைவு எல்லாம் ,

இந்தக்குழந்தைகளுக்கு ஊர்வலம் முடிஞ்சப்பறம் என்ன நைவேத்தியம் தருவது என்ற கவலை தான்.

இருந்தாலும் அவன் தானே இதை ஆரம்பிச்சு வச்சான் அவனே பார்த்துப்பான் என்று மனசும் ஒருபக்கம் சொல்ல,

நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ.
சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா வெங்கடேசா கோவிந்தா.
கோவிந்தா கோவிந்தா சீனிவாசா கோவிந்தா

என்று கௌதமன் சார் குரல் கொடுக்க,
திருப்பாவை கோஷ்டி பயணத்தை துவங்குகிறது.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

திரும்பிய உடனே குழந்தைகளுக்கு இந்த கிழவி என்ன பிரசாதம் கொடுப்பா  என யோசிச்சுண்டே வர்றேன்.  





வந்த எல்லா குழந்தைகளுக்கும் அந்த திருப்பதி லட்டு ஒன்று பிரசாதம் இன்னிக்கு. 

வீட்டுக்காரி மீனாட்சி பாட்டி கிட்டே நைசா கேட்கிறேன். 

ஏதுடி இத்தனை லட்டு ?

எனக்கே தெரியாது.  யாரோ ஒருவர் இன்னிக்கு எங்க உபயமா இருக்கட்டும் அப்படின்னு சொல்லி விட்டு கொடுத்துட்டு போறார். 

எப்படிடி இருந்தார் ?

அதை சரியா கவனிக்கலையே...  திருப்பதிலேந்து நேரே இங்கே வர்றேன் என்று மட்டும் சொன்னார்.

ஆஹா.  பெருமாளே வந்தாரா ?
ஆமாம். சொன்னா நம்ப மாட்டேள் அப்படின்னு ஒரு செல்லிலே ஒரு போட்டொ எடுத்து வச்சேன். இத பாருங்க.


கோவிந்தா கோவிந்தா...


யாரு தந்திருப்பா அப்படின்னு என் மனதிலே ஐயம் தோன்றியதும் சரியா ?



Doubt is simply lack of energy. When you are high in energy, where is the doubt? Doubt comes when the energy is low. +Sri Sri Ravi Shankar