இந்த கோலத்திலே ஒரு விசேடம் என்ன சொல்லுங்க பார்க்கலாம் ?
என்றாள் மீனாட்சி பாட்டி.
இன்னிக்கு எம்.எல்.வி. அம்மா பாடும்போது எத்தனை பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை செவிக்கப்போரோமோ அத்தனை கோலம் இன்னிக்கு.
அம்மாடியோவ் ! எத்தனை கோவிலுக்கு போகப்போறோம் ?
குளிரக் குளிரக் கோவிந்தனைப் பாடப்போறோம்.
கவனமா பாருங்க..
ஒவ்வொரு கோவிலும் ஒரு திவ்ய ஸ்தலம்.
திருப்பாவை 13 வது பாசுரம் பாடும்போது 13 பெருமாள் கோவில் தர்சனம்.
இப்ப எம். எல். வி. அம்மா பாடறதை கேட்போமா ?
13 stanza raag atana என்றாள் மீனாட்சி பாட்டி.
Add caption |
அம்மாடியோவ் ! எத்தனை கோவிலுக்கு போகப்போறோம் ?
குளிரக் குளிரக் கோவிந்தனைப் பாடப்போறோம்.
கவனமா பாருங்க..
ஒவ்வொரு கோவிலும் ஒரு திவ்ய ஸ்தலம்.
திருப்பாவை 13 வது பாசுரம் பாடும்போது 13 பெருமாள் கோவில் தர்சனம்.
இப்ப எம். எல். வி. அம்மா பாடறதை கேட்போமா ?
mlv
வேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக இந்த பாசுரத்தையும் பாசுரத்தின் சிம்பிள் மீனிங் என்ன என்று எனக்கு புரியறா மாதிரி
கவியரசர் கண்ணதாசன் சொல்வதையும் கவனிப்போம்.
Velukkudi krishnan Arrives .
வாங்கோ வாங்கோ
என்று வந்திருந்தவர் அத்தனை பேரும் எழுந்து நின்று
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறார்கள்.
Welcome Sir.
உபன்யாசம் நடந்துகொண்டு இருக்கும்போதே ஒரு டெம்போ மாதிரி சின்ன வானிலே இரண்டு மூன்று அண்டாக்கள் வந்து இறங்குகின்றன.
சுப்பு தாத்தாவுக்கு ஏகத்துக்கு குஷி.
இங்கே திருப்பாவை தமிழ் இலக்கிய விழா நடக்கும்போது நமது வலை உலக அன்பர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் தினமும் அறுசுவை யுடன் கூடிய அன்னதானம் செய்து, இந்த விழாவை சிறப்பிக்கின்றனர்.
பரந்தாமனின் கருணை தான் என்னே என்னே என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.
+Anandaraja Vijayaraghavan
அங்கிருந்தே அந்த ஆனந்த கண்ணீரைப் பார்த்த ஆனந்த விஜயராகவன் , நெஞ்சு விம்ம விம்ம , தாத்தா பக்கத்தில் வந்து சொல்றார்.
தாத்தா !! இந்த சீனுக்கு மனசாகல்லை.
பாவம் இந்த தாத்தா. தினம் தினம் குளிரக் குளிரக் கோவிந்தனை பாடுகிறாரே. அவருக்கு நம்ம சைடுலேந்து எதுன்னாச்சும் செய்யணும்டா
அப்படின்னு என்கிட்டே, நான் வண்டலூர் ஜூவிலே திரு பாவை பாடிகிட்டு இருந்த போது செல்லடிச்சார் ...
அப்படியா என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டேன்.
லோகத்திலே போல்லுயுடட் வாடர் ஜாஸ்தி ஆகிடுத்து. மார்கழி பஜனைக்கு வந்தவர்களைக் காப்பது நமது பொறுப்பில்லையா அவங்களுக்கு பாடும்போது தொண்டை கட்டிக்கொள்ள கூடாது இல்லையா என்று நினைச்சு...
நினைச்சு .... என நான் நானும் இழுத்தேன்.
+Srinivasan Balakrishnan சீனு தான் சார், அதான் சீனிவாசன் பாலக்ருஷ்ணன் மூணு அண்டாவிலே வெந்நீர் அனுப்பிச் சிருக்கார்.
எதுக்கு, நாங்கள் எல்லாம் குளிக்கவா ? ஏற்கனவே கீசர் போட்டு குளிச்சாச்சே!!
இல்லை சார், குடிக்க, ஒவ்வொரு லிட்டரா போட்டு பாக் பண்ணி இருக்கோம். 100 டிகிரி வரைக்கும் கொதிக்க விட்ட பின் தான் ஆவி வந்தபின் எடுத்து அண்டாவிலே ஊத்தி இருக்கோம் . ப்யூர் வாடர்.
என்று சீனுவும் ஆவியும் தாத்தாவை ஆச்வாசப்படுத்த
ஆமாம். சுப்பு தாத்தா சார். இன்னிக்கு ஏகாதசி இல்லையா.அதினாலே இன்னிக்கு துளசி ஜலம் தான் பிரசாதம். சாப்பாடு, அன்னம் எல்லாமே
ஆஹா.பகவான் இன்னிக்கு ஆவி வழியா சீனு வழியா இன்னிக்கு என்ன அப்படின்னு சொல்லி இருக்கார்.
இருந்தாலும் லேசா பசிக்கிராப்போல இருக்கே என்று மனசு சொல்லித்து.
பேஷ், பேஷ், நேத்திக்கே
நெஸ்லே டீ பவுடர் நான் இரண்டு கிலோ வாங்கி வச்சுருக்கேன் என்றேன்.
அது வேண்டாம். தேவை இல்ல,
இதை நீங்க இத இத பாக்கலையா.. என்றார் ஆவி.
இன்னும் என்ன?
வாட்டர் மட்டும் இல்ல தாத்தா, கூடவே ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு ப்ளாஸ்க் வீதம் பனங்கல்கண்டு பால், மஞ்சள் பொடி , மிளகு போடி, பாதாம் போட்டு. 30 ப்ளாஸ்க் இன்னிக்கு கொண்டு வந்திருக்கோம். இந்தாங்க ஒரு கப் சாப்பிட்டு பாருங்க. என்றார் ஆவி.
+Anandaraja Vijayaraghavan
மனசு உள்ளுக்குள்ளே
இல்லை, அண்டாவிலே ஏதோ புளியஞ்சாதம்,தயிர்சாதம் அப்படின்னு வரது என்று நான் அப்படின்னு நினைச்சதே. ஆனா கல்கண்டு பால் வர்றது.
என் மனசை என் முகத்தைப்பார்த்தே புரிந்துகொண்ட மீனாச்சி பாட்டி,
வந்தவர்களுக்கு பால் மட்டும் தானா அப்படின்னு நீங்க ஒன்னும் கவலைப்படாதீக..
+Gomathy Arasu கோமதி அரசு அம்மா நேத்திக்கே போன் பண்ணி, குக்கர் அல்வா ராதாஸ் கிச்சன் லே தயார் பண்ணி, கரெக்டா 9 மணிக்கு 50 பேருக்கு வந்துடும். உபன்யாசத்துக்கு வந்தவர்களை பொறுமையா உட்கார்ந்து இருக்கச்சொல்லுங்க. இன்று சொல்லி இருக்காங்க..
அப்படியா.. என்று சொல்லும்போதே...
இன்னொரு அம்மா ஆடோவிலே அல்வா வந்து இறங்குகிறது.
உள்ளே வரும்போதே பச்சை கற்பூர வாசனை மனசை அனந்த பத்மனாபனிடமிருந்து
அல்வாவுக்கு இழுக்கிறது.
http://radhaskitchen-1.blogspot.in/2011/09/blog-post_25.html |
கொஞ்சம் லேட் ஆயிடுத்து என்கிறார். கொண்டு வந்தவர்.
அதனாலே என்ன?
இது மார்கழி திங்கள் அல்லவா ?
அதனால் தான் அல்வா வந்து விட்டது
pallandu pallandu
பல்லாண்டு பல்லாண்டு பாடிக்கொண்டே பரமனை நினைத்துக்கொண்டே
பரமனை பாடுங்கள்.
சுகமோ சுகம்.
அல்வாவைச் சாப்பிட்டு பிறகு எல்லோரும் கல்கண்டு பாலையும் சாப்பிட்டு விட்டு, இந்த புள்ளைங்க..
திடங்கொண்ட சீனுவையும்
பயணம் ஆவியையும்
ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க..
தீர்காயுசா இருக்கணும்.
*******************************************************************************
இன்றைய பொன்மொழி.
LOVE IS UNCONDITIONAL.
WHEN U AND I LOVE ANYONE
IT MEANS OUR LOVE IS SANS ANY EXPECTATIONS ANY DEMANDS.
THAT LOVE ALONE TAKES US TO
INNER PEACE AND BLISS.
AND THAT IS PARAMAN.