JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 30, 2013

இளங்கிளியே .எழுந்திருச்சு வாயேன்.

வேங்கடவனை உனக்குத் தெரியுமா ?
யாரு உங்க பிரண்டு வெங்கடராமன்!
இல்லை .
பழைய ஜனாதிபதி வெங்கடராமன் ?
அதுவும் இல்லை.
அப்ப நடுக்கடலிலே நாகத்தின் மேலே படுத்திருக்கும் ஆதி சேஷனா ?
கொஞ்சம் சரி. அந்த ஆதி சேஷன் மேலே படுத்திருக்கும் வேங்கடவனா?
எக்சாக்ட்லி .
அவர் வூட்டின் வாசலிலே ஒரு அழகு கோலம். அத அப்படியே போட்டொ புடிச்சு, லாமினேட் பண்ணி, ஸ்டிக்கர் ஒட்டி ,

இப்ப நம்ம வீட்டு வாசல்லே ஒட்டி வச்சிருக்கேன்.

இது என்னோடது அப்படின்னு கேசு போட்டுடப்போறாக..!!

இல்ல, இந்த வேங்கட நாகராஜ் நல்லவங்க.  ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வரப்போறாங்க. பாரேன்.


திருப்பாவை பதினைந்தாவது பாசுரம் ஒலிக்கிறது.
 கோவில் மணி ஓசை மாதிரி இல்ல இருக்குது ?
 பாட்டு ஒன்று  வருது.கேளடியம்மா , எழுந்திருச்சு வாயேன்.

எல்லே இளங்கிளியே ...


கவியரசர் கண்ணதாசன் அவர்களின் திருப்பாவை மொழிபெயர்ப்பு.
நன்றி. த ஹிந்து தினசரி.
படிப்பது.
வேற யார் படிப்பாங்க.. சுப்பு தாத்தா தான்.
பாட இல்ல செய்யறாரு ?
முதல்லே ஆரபி ராகத்துலே பாடுவாரு. பின்னே படிப்பாரு.
எனக்கு என்னவோ இரண்டுமே ஒன்னத்தான் கேட்குது.




இந்த திருப்பாவையின் தத்துவார்த்தத்தை அறிய இங்கு செல்லுங்கள்.

ஒரு அற்புதமான் பரதம் .
இந்த கலை கொஞ்சம் வித்யாசமானது.  கோதை வைபவம்.
மேடம் அனிதா ரத்னம்




ots uppuma
ஓட்ஸ் உப்புமா வா ? என்னவோ நான் வெஜ் சமாசாரம் போல இருக்கு ?
நோ..நோ...பயப்படாமே சாப்பிடு.


ஓட்ஸ் உப்புமாவா ?
ஆமாம். ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது.
அப்படியா..
ஆமாம். உனக்கு வேணும்னா கீதா மேடத்தை கேட்டுப்பார்.

ரொம்ப காரமா இருந்தா சரிப்படாது.
ஒரு அரை மிளகாய் குறைச்சு பண்ணு. நல்லா இருக்கும்.

அதான் இப்ப எல்லாம் ஹார்லிக்ஸ் ஓட்ஸ் வித் மசாலா வருதே.
ஆமாம். அத ஜஸ்ட் கொதிக்கிற தன்னிலே போட்டு இரண்டு நிமிஷம் வச்சாலே போதுமே.

இது அந்த சீனு, ஆவி, பால கணேஷ் அவங்க கிட்ட சொல்லு. அவங்க தான் தண்ணிய சுட வச்சு தயாரா இருக்காங்க.


சரி, முதல்லே எல்லோருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க.
**************************************************************************

இன்றைய பொன்மொழி.