JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்


மயில் போலே பொண்ணு ஒன்னு  என்று பாட ஆரம்பித்தேன்.

மூச் !! மார்கழி மாசம் பகவானைத் தவிர்த்து வேறு எதுவும் மனசுலே கூடாது.


வேற என் மனசுலே ஒண்ணும் இல்லையே.
என் மனசுலே அந்த கோதை ஒத்தி தான் இருந்தா.  பெண்ணாகப் பிறந்த பரமனைப் பாடிய ஒரே ஆழ்வார் கோதை ஆண்டாள் தானே ...

அந்த கோதை ?

 கொஞ்சம் பொறு. இன்னா அவசரம். !! ஒரு அஞ்சு நிமிசத்திலே உன் கண் முன்னாடி நிறுத்தறேன் என்று சத்தமா சபதம் போட்டேன்.

அஞ்சு இல்ல , அரை நிமிஷத்திலே ஆண்டாள் மயிலு போலே  என் முன்னே பிரசன்னம். 

ஆஹா கண்டு கொண்டேன். நான் கண்டு கொண்டேன்.
அங்கேயும் கண்ணன் மயில் இத்யாதி இத்யாதி. 

என்னங்க இது ? கோதை ஆண்டாள் படமில்ல. நிசமாவே கோதை அப்படின்னு ஒரு பக்தை இன்று திருப்பாவை பக்தி மாலையில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருக்கிராளோ என்று நினைத்தேன்.
நன்றி: நாச்சியார் 
போன வருஷம் மார்கழி மாசம் 14 வது பாசுரத்துக்கு பதிவு போட்ட மேடம் நாச்சியார் வல்லி நரசிம்மன் அவர்களின் பதிவு இன்று பார்த்தேன்.
+revathi narasimhan thank u very much Madam.
I saw your latest posting in your blog also.I do not know how to respond.

 என்ன ஒரு அழகிய கோதை அவர் கண்ணுக்கு முன்னாடி அன்னிக்கு வந்திருக்கிறாள் பார்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


அந்த பங்கயக் கண்ணனைப் பாட அவனது பக்தர்கள் காலம் காலமாக 108 திவ்ய க்ஷெத்திரங்களுக்கும் படை  எடுத்துக்கொண்டு  இருக்கி றார்கள்.

 கோதை மட்டும் தான் சரியா  எம்பெருமாள் எங்கே இருப்பார்  இருக்கார் அப்படின்னு புரிஞ்சுண்டு  புவிலே பிறந்திருக்கிறாள்.
அவள் பாடிய 14 வது  .பாசுரத்தைக் கேட்போமா...நெக்ஸ்ட், கவிஞ்ர் கண்ணதாசன் இந்த 14வது பாசுரத்துக்கு என்ன அழகான எளிய உரை எழுதி இருக்கிறார் பாருங்கள்.

Let us listen to the simple meaning of the text of 14th Pasuram.


வேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக , வலை நண்பர் திருவரங்கத்து பரமன் பக்தை திருமதி  ஷைலஜா அவர்கள் பதிவிலே இருக்கும் தத்துவார்த்தையும் விசாரம் செய்வோம்.
velukkudi krishnan sir
அமைதி. அமைதி. வேளுக்குடி சார் பிரசங்கத்தை துவங்கியாச்சு.உபன்யாசம் முடிந்து விட்டது.

நேத்திக்கு ஏகாதசி உபவாசம் முடிஞ்சு போயிடுத்து.

இன்னிக்கு பசி ஏகத்துக்கு, புசி , புசி  என்று வயிறு கூச்சல் போடுகிறது.

என்னடி மீனாச்சி, ப்ரேக்பாஸ்ட் என்னாச்சு !

இதோ அந்த ஹாலுக்கு எல்லாரையும் கூட்டிக்கொண்டு
போங்கோ.
என்றாள் மீனாட்சி பாட்டி.

Courtesy: www.cookatease.com Add caption

அடுத்த ஹாலுக்கு போனா அசந்து போகிற மாதிரி buffe லஞ்ச் மாதிரி, ரைஸ் சேவை, எள்ளு சேவை, எலுமிச்சை சேவை, தயிர் சேவை.
http://www.umakitchen.com/2011/05/curd-sevai.html


எதிர்த்தாப்போல டி.வி. ஸ்க்ரீன் லே ஓடிட்டிருக்கு. திருப்பதி தேவஸ்தானம் டி.வி.
T T D TV லே ..
ஒரு பக்கம் எலுமிச்ச சேவை, தயிர் சேவை. இன்னொரு பக்கம் கேசவன் சேவை,  நாராயணன் சேவை. மாதவன் சேவை,  கோவிந்தன் சேவை. பாலாஜி சேவை.

கோவிந்தம் பரமானந்தம் 
GOVINDHAM PARAMANANDHAM.

ஆஹா..இன்னிக்கு நல்ல சேவை.

பெருமாளே நம்ம வீட்டுக்கு வந்து தரிசனம் தர்றார்.
வந்தவர்கள் எல்லாமே ரொம்ப லக்கி தான்.
+Dindigul Dhanabalan +Vasudevan Tirumurti +divya vg +Tulsi Gopal +Ranjani Narayanan +அம்பாளடியாள் வலைத்தளம் +Gayathri Desigan +Kumaran Malli +Balu Sriram +Rajeswari Jaghamani +Lalitha Mittal +meena kavinaya +Samba Murthy +Geetha Sambasivam +Manjubashini Sampathkumar +Shylaja Narayan

()()()()()()()()()()()()()())())()()()()()()()(​)()()()()()()()()()()()()()()()()()()())())()()()()()()(()(

இன்றைய பொன்மொழி. 

ALLOW YOUR LIFE TO FLOW LIKE A JUNGLE RIVER IN ITS OWN WAY.
ENJOY THE FLOW. 
U WERE NEVER DIRECTING ITS DIRECTION
NOR WILL U EVER BE SO. 

pl click here
****************************************************************************