JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

Saravana Bhavan in Edison

அமெரிக்காவுக்கு வ‌ ந்து இன்றுட‌ன் 15 நாட்க‌ளாகிவிட்ட‌ன‌. ந்யூ ஜெர்ஸியில் அம‌க்க‌ள‌மா ஒரு காஃபி சாப்பிட்டேன். பேஷ் பேஷ் என்று சொல்லும்ப‌டியாக‌ இரு ந்த‌து என்று சொன்னாலும் ந‌ம்ம‌ த‌ஞ்சாவூர் காஃபிக்கு இணையாக‌ச் சொல்ல‌ முடியாது. இங்கு எல்லோரும் காஃபி என்றாலே ஒரு பெரிய‌ ட‌ம்ள‌ரில் முக்காலே மூணு வீச‌ம் ப‌ங்கு டிகாஷ‌னை (அதுவும் த‌ண்ணியாக‌ ) த‌ருகிறார்க‌ள். பக்க‌த்திலே போனால் அங்கு ஹாஃப், ஹாஃப் என்று ஒரு பால் ஒரு ஃப்ளாஸ்கில் இருக்கிற‌து. அது ஜில் பால். அதை ச‌ற்று ஊத்திக் கல ந்தாலே காஃபி ஜில்லிட்டுப் போய்விடுகிற‌து. அதைத் திரும்பிக் கொண்டுபோய் மைக்ரோ ஓவ‌னில் ஒரு 20 செக‌ன்டுக்கு சூடு செய்து விட்டு சாப்பிட‌வேண்டும். சில‌ பேர் அதில் பாதியை சாப்பிட்டு விட்டு, மிச்ச‌த்தை அப்ப‌டியே பாக் செய்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்க‌ள். ந‌ல்ல‌ காஃபியாக‌ இரு ந்தால், மிச்ச‌ம் இருக்குமோ ? . இவ‌ர்க‌ளுக்கு ஒரு த‌ஞ்சாவூர் காஃபி என்றால் அத‌ன் சுக‌ம் தெரியுமா என்ன‌?இன்ன‌மும் 111 நாட்க‌ள் இங்கே இருக்க‌வேண்டும். பிற‌கு சென்னைக்கு போய் அம்ப‌த்தூர் க்ருஷ்ணா காஃபி க‌டைலே பிளான்டேஷ‌ன் ஏ சிக்க‌ரி க‌ல‌க்காமே வாங்கி அதில் முத‌ல் டிகாஷ‌ன் ஸ்ட்ராங்கா எடுத்து திக் பாலோட‌ க‌ல‌ ந்து சாப்பிட‌வேண்டும். அத‌ன் சுக‌மே சுக‌ம். ந்யூ ஜெர்சிக்குப்போகும் வ‌ழியிலே த‌ஞ்சாவூர் ரெஸ்டார‌ன்ட் ஒன்று இருக்கிற‌து. 1980 லே இங்கு வ‌ ந்த‌ ஒரு த‌ஞ்சாவூர் கார‌ர் இங்கே ஹோட்ட‌ல் ஒன்று அதே மாதிரி நெய் ர‌வா வெங்காய‌ ஸ்பெஷ‌ல் ம‌சாலா தோசை, ஊத்த‌ப்ப‌ம், வெங்காய‌ ச‌ட்னி, கொத்த‌ம‌ல்லி ச‌ட்னி, தேங்காய் ச‌ட்னி அம‌க்க‌ள‌மாக‌ த‌ருகிறாராம். விலை 30 டால‌ராம். ( ந‌ம்ம‌ ஊர் ம‌திப்பிலே 1500 ரூபாய். ) தோசை ஸ்பெஷ‌லிஸ்ட் என்ற‌ போதிலும் இட்லி வ‌டை, பூரி, எல்லாமும் கிடைக்குமாம். பிரிட்ஜ் வாட‌ட‌ருக்குப்போய் அங்கு வெங்க‌டாஜ‌ல‌ப‌தி கோவிலுக்கு சென்ற‌போது இர‌வு ம‌ணி 8.30 . ஜோ ஜோ பாடி ப‌க‌வானை தூங்க‌ வைக்கிறார்க‌ள். கோவில் சுத்த‌மாக‌ இருக்கிற‌து. ப‌க்த‌ர்க‌ள் நிதான‌மாக‌ அமைதியாக‌ க்யூவில் நின்று த‌ரிசிக்கிறார்க‌ள். ப‌ட்ட‌ர் க‌ர்ப‌க்ருக‌த்தில் காலில் ஸாக்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார்க‌ள். பாவ‌ம். பாலாஜி ப‌க‌வான் ம‌ட்டும் அப்ப‌டியே பீதாம்ப‌ர‌த்தில் ந‌ம்ம‌ ஊர் டிர‌ஸ்ஸிலே இருக்கிறார்.அபிஷேகம் செய்த பால் தீர்த்தம், சடாரி எல்லாம் நம்ம பெருமாள் கோவில்கள் மாதிரியே ச்ம்பிரதாயம். அக்ஷதை, குங்குமம் , துளசி பிரசாதம். அதை வாங்கிக்கொண்டு இந்தப்பக்கத்தில் நவக்ரகம் . அதையும் வேயுறு தோளி பங்கன் சொல்லிக்கொண்டே மூன்று சுற்று சுற்றி வந்து சரி, திரும்புவோம் என்று வந்தால், அங்கு கான்டீன். பொங்கல் 3 டாலர். காஃபி 1 டாலர்.டீ ஒரு டாலர்.லட்டு 3 டாலர். காஃபி மட்டும் சொல்லக்கூடாது. காஃபி மாதிரி இல்லை. டீ சாப்பிடவேண்டியதுதானே என்று என் துணைவி என்னை இடிக்கிறாள். அதில் ஒரு வாய் ஸிப் பண்ணிப்பார்த்தேன். அது தேவலை. கோவிலுக்கு உள்ளே வெளியே போகும்போது சூடான் காற்று ந‌ம் மேல் விழ் இத‌மாக‌ இருக்கிற‌து.ம‌ன‌சுக்கும் ஒரு இத‌ம். பெருமாள் எங்கேயும் இருக்கார். அவ‌ர் ந‌ம்மை ர‌க்ஷிப்பார் என்று நினைத்துக்கொண்டேன். நம்ம ஊர் ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியார் கள் தக்ஷிணை டிமான்ட் செய்வது ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.இவ‌ர்க‌ள் வாய் திற‌ப்ப‌தில்லை. ஆனால் டால‌ர் டால‌ராக‌ அவ‌ர்க‌ள் த‌ட்டில் விழுகிற‌து. எல்லாம் பெருமாள் அனுக்ர‌ஹ‌ம். திரும்ப‌வும் ந்யூ ஜெர்ஸியிலிருன்து ஸ்டாம்ஃபோர்டு வ‌ரும்போது எடிஸ‌ன் வ‌ழியாக‌ வ‌ ந்தோம். அங்கு ஓக் ட்ரீ என்னும் வீதியில் இந்திய நாட்டு க்க்டைகள் ஏராளம். நம்ம டி. நகர் அமைதியாக இருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ ? இந்தியர்கள் அதுவும் சென்னைவாசிகள் நிறைய போக்குவரத்து இருப்பதால், சாலையிலும் சென்னைபோலவே டிராஃபிக் கொஞ்சம் அதிகம். அதே சமயம் சாலை டிஸிப்ளினும் குறைவு. ந‌ம்ம‌ ஊர் ச‌ர‌வ‌ண் ப‌வ‌ன், த‌மிழில் போர்டு போட்டு இருக்கிறார்க‌ள்.ரவா தோசைக்கு மோர்க்குழ்ம்பு ஸைட் டிஷ் உண்டு என்றார். ஒரு சபலம். உள்ளே போய் ஒரு வெட்டு வெட்ட‌லாமா என்று என் மாப்பிள்ளை கேட்டார். இப்ப வேண்டாம், ஊருக்குத் திரும்பும்போது பார்த்துக்கொள்ள‌லாம் என்று சொன்னேன்.