JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜூலை 26, 2013

வாழ்வில் ஒரு பொருள் வேண்டும்

ஷிர்டி சாய் பாபா கோவில் 
இன்று குரு வாரம். மாலை ஐந்து மணி இருக்கும். கடைக்குப் போகத்தான் கிளம்பினோம். அங்கு சென்ற உடன் பக்கத்து கோவிலுக்கு போகலாம் என்று தோன்றியது. எந்த கோவிலுக்கு என்ற உடன் மாப்பிள்ளை இங்கு பக்கத்தில் சுவாமி நாராயண மந்திர் இருப்பதாக சொன்னார்.

என் பெண்ணுக்கு மாப்பிள்ளை செல் போன் போட்டு கேட்டதில் சுவாமி நாராயண மந்திருக்கான விலாசம் தந்தாள். அதை ஜி.பி. எஸ்.ல்  வழி கேட்டபோது அந்த ஜி.பி. எஸ் எங்களை நேரே சர்டி சாயி பாபா கோவிலுக்கு வந்து . சேர்த்து விட்டது..

கோவில் மூடும் நேரம். இன்னமும் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் மூடி இருப்பார்கள்.  ஷிர்டி பாபா தர்சன் எனக்கு ய்தேச்சியாக கிடைத்தை பெரும் பாக்கியமாகத் தான் சொல்லவேண்டும்.

பக்கத்திலே அதே காம்பௌண்டிலே ஒரு ராதா கிருஷ்ணா மந்திர். அங்கு நமது சமூகத்தினர் விநாயகருக்கு எல்லா அபிஷேகங்களும் செய்து கொண்டிருக்கும் காட்சிதனையும் கண்டு மன மகிழ்ந்தோம்.

எல்லாம் வல்ல இறைவன் அருள்.

வீட்டுக்கு வந்து கணினியை திறந்தால், கவிஞர்  கி. பாரதி தாசன் அவர்கள் முருகன் மீது ஒரு அழகான கவிதை எழுதி இருக்கிறார்கள். 

மயிலேறி வருவான் முருகன்

 ..எனத் துவங்கும் கவிதை.

அதை நான் பிருந்தாவன் சாரங்க எனும் ராகத்தில் முதல் முயற்சியிலேயே பாடிவிட்டேன்.

மிக அழகான கவிதை அது. எத்துணை பாராட்டினாலும் தகும்.

அதுவும் அந்த முருகப்பெருமானின் அருளே. அதை எனது கந்தனைத் துதி என்னும் வலையில் நாளை இடுவேன்.


இன்னும் ஒரு அதிசயம். இன்று காலை இட்ரா எனும் அமைப்பு எனக்கு அனுப்பிய ஒரு துதிப்பாடலை நான் மொழி பெயர்த்து எனது வலையில் இட்டு இருந்தேன்.

எல்லாம் வல்ல இறைவன் 
வாழ்வில் ஒரு பொருள் வேண்டும் என்றாலும் தருகிறான்.
வாழ்வின் பொருள் எனக்குப் புரியவேண்டும் எனினும் சொல்லித் தருகிறான்.

இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எனது தஞ்சை நண்பர் திரு துரை செல்வராஜ்  அவர்கள் விளக்கி இருந்தார்கள் தனது பின்னூட்டத்திலே.

வாழ்வில் ஒரு பொருள் வேண்டின் இறைவனைத் துதியுங்கள்.  வாழ்வின் பொருள் தெரியவும் இறைவனைத் துதியுங்கள்.

 அந்த விளக்கத்தின் நுணுக்கமான துல்லியமான உண்மை இன்று அவர் சொல் கேட்டு எனக்கு புரியக்கண்டு வியந்தேன்.

இது எல்லாமே இன்று மதியம் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலையில் குறிப்பிட்ட அம்பாளின் அனுக்ரஹம் தான்.  திருச்சி செல்லும்போது அவர்கள் குறிப்பிட்ட உறையூர் கோவிலுக்கு செல்லவேண்டும்.
Posted by Picasa