JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஏப்ரல் 29, 2010

மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!

அப்பொழுது தான் வானலிலே இருந்து எடுத்த‌
      ஆவி பறக்கும்
      சூடான எட்டு  இட்டிலியும் இரண்டு உளுந்து வடையும்
      தெவிட்டாத‌
      தேங்காய் சட்டினியும் ,
      கொஞ்சமா உரைப்பு போட்ட கொத்துமல்லி சட்னியும்
      வேக வைக்காத வெங்காயத்தை நறுக்கி  பக்குவமாய்  பச்ச மிளகாய் கலந்து ஒரு சட்னி,
      இதமான இட்லி மிளகாய் பொடி, இதயம் நல்லெண்னை கலந்து,
      கதம்ப சாம்பாரும் கண்ணெதிரிலே வைத்து விட்டால்,
      ஆஹா...ஆஹா...ஆஹா...

      மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
          
      பின்னே ஒரு  டிக்ரி காப்பி ( சக்கரை கொஞ்சமா போட்டாதான் டேஸ்ட் அபாரம் !!!)
                                    அம்சமாய் அரை கப் கண்டால்
                                    இதுவல்லவோ சொர்க்கம், என
                                    எகிறிக்குதித்திடுவேன்.

      சுப்பு தாத்தா சாப்பிட்ட இட்லி எங்கே கிடைக்கும் என்ற கேட்கிறீர்கள் ?
     இதோ.. 
தாத்தா அனுபவித்து சாப்பிட்ட இட்லி வடை சட்னி சாம்பார் காண இந்த பதிவின்
தலைப்பை கிளிக்குங்கள்.


ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

Akshaya Wins a Cup in Drawing Competition.



      இந்த ஊர் ( தோஹா, கடார்) இந்தியன் பள்ளிகளில் படிக்கும் மாணவருக்காக ,  FRIENDS OF THRISSUR    எனும் ஒரு அமைப்பு ஒரு சித்திர வரையும் போட்டி நடத்தியது   அதில் பரிசு பெற்றவருக்கு   பற்பல பரிசுகளும் வழங்கியது.   சுமார் 2000 குழந்தைகளுக்கு மேல் போட்டிகளில் கலந்து   கொண்ட இப்போட்டியிலே பிர்லா பப்ளிக் ஸ்கூலில் படிக்கும்  எனது பேத்தி அக்ஷயாவும் ஒரு கப் வாங்கியிருக்கிறாள்.
     இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிக்கை பெநின்சுலாவில் போடோவுடன் 
வந்திருக்கிறது.( Please click here to know more.)

தோஹா செய்தி தாளில் அவளது படம் கண்டு தாத்தா பூரித்து போய்விட்டார் என சொல்லவும் வேண்டுமோ.  !!
      அக்ஷயாவுக்கு தாத்தா பாட்டி வாழ்த்துக்கள்.

P


     


வெள்ளி, ஏப்ரல் 23, 2010

ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல்.

 


  ஆதிபராசக்தி மேல் ஒரு அற்புதமான பாடல். திரு V.S.K. அவர்கள் பாடியது. அவர்கள் வலைக்கு செல்ல இங்கு கிளிக்குங்கள்.

   
    சுப்பு தாத்தாவுக்கு பல் எல்லாம் இல்லை. உச்சரிப்பு சரியாக இல்லை. இருந்தாலும் பாட்டின் மெட்டை மனதில் பதித்து கொண்டு பக்தர் எல்லோரும் பாடிடவேண்டும்.


ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

Volcanish Ash Spread in Europe


இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்கள் தொடரும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலும் முன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் . பயணிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.  நடு வழியில் நிற்கும் பயணிகளின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.    சீக்கிரம் இந்த சாம்பல் புகை மண்டலம் அகன்று விமான போக்குவரத்து மீண்டும் செயல்பட ஆண்டவன் அருள்வாராக. 

மேலும் இது பற்றிய செய்தி படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்கிடுங்கள். 





சனி, ஏப்ரல் 17, 2010

புதன், ஏப்ரல் 07, 2010

" சிந்தையில் நீ ஆட "




 
 இமயத்தில் உறைந்து இனியவன் சிவனுடன் இணைந்து 
அர்த்தனரீச்வரன் அவனில் தானுமொருபக்கம் நின்று 
பனி மழை பெய்யும் மலையில் அருள் மழை தாரையாக 
பொழியும் அவள் கருணையும் ஓர்  காவியமன்றோ

பதிவுலகின் இணையற்ற கவிஞர் கவிநயா அவர்களின் 
" சிந்தையில் நீ ஆட " எனும் கவிதை அதை வழக்கம் போல் சுப்பு தாத்தா
பிருந்தாவன சாரங்க எனும் ராகத்தில் பாட எத்தனிக்கிறார்.

கவிதை நயத்தினைக் காண இப்பதிவின் தலைப்பினைச் சொடுக்கிடுவிர்.








திங்கள், ஏப்ரல் 05, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே...



கவிஞர் தங்கமணி அவர்கள் குன்றத்தூர் சிவபெருமான் மீது ஒரு அற்புதமான
கவிதை எழுதி உள்ளார்கள்.  குன்றத்தூர் அமர்ந்த கோவே என்று துவங்கும் அப்பாடலை
நான் மோகன ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன்.  அப்பாடல் வரிகளைக் காண 
இப்பதிவின் தலைப்பைக் கிளிக்கவும். 






வியாழன், ஏப்ரல் 01, 2010

April 1 .. All Fools Day

First I thought of writing something today, which is universally celebrated as APRIL FOOLS' DAY. .

Soon, I remembered my boss, telling me one day, that a picture  tells a story  at one single glance what you would like to convey in one thousand ways..

Yes. i decided  that my picture will just do what I wanted to do..

All the Best to everyone who visits this page.  

To be a fool, in this Fools' Paradise, Is itself a paradise.

நிற்க. ஏப்ரல் மாதம் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடும் 
வழக்கம் எப்போதிலிருந்து எப்படி வந்தது என்று அறிய இப்பதிவின் தலைப்பை
கிளிக்குங்கள்.