Thursday, July 02, 2009

கிழங்களுக்கு இந்த வயசுலே இப்படி ஒரு ஆசை

அம்மா இந்த வயசிலே பாடமுடியாது அப்படின்னு சொன்னப்போ நான் சொன்னேன்: நானே பாடறேன். உன்னால் முடியும். என்று சொன்னேன். எங்களோட பார்க்காத தமிழ்வலை உலக சினேகிதி அவர்கள் இயற்றிய கவிதை இன்றைக்கு கிடைத்தபோது, அதை நான் மத்யமாவதியிலும் அம்மாவை சாரங்கா ராகத்திலும் பாட முயற்சி செய்தோம். வயசு இரண்டு பேருக்கும் 67 முடிஞ்சு, 68 ஆகிவிட்டது. ஏதோ கர்னாடக சங்கீதம் அப்படி இப்படின்னு, பொழுதைக் கழிச்சிண்டு போகிறோம். அதனாலே, கிழங்களுக்கு இந்த வயசுலே என்ன இப்படி ஒரு ஆசை அப்படின்னு யாரும் கோபப் படவேண்டாம். ஸ்ருதி சரியாக இல்லை. தெரியும். அங்கங்கே ராகம் பிசிரு அடிக்கிறது. அதுவும் தெரியும். இருந்தாலும் பாடறோம். யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், எங்க குழந்தைகள் கேட்கும். அது தெரியும். அப்பறம், யாருக்கு பொறுமை இருக்கோ இல்லையோ எங்க ஃப்ரன்டு கவினயா மேடத்துக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. எங்க பாட்டுக்களை விடாமே கேட்கறது மட்டுமல்ல, நல்லா இருக்குன்னு வேற சொல்லி விடறாங்க. கவிதை கவி நயா மேடம் எழுதியது. Please copy and paste this URL if the above does not work. http://www.youtube.com/watch?v=tYizov--ZNI

Monday, June 22, 2009

ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ

சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய் சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய் குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய் கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் - உள்ளத்தின் உள்ளிருந்து துள்ளித் தெறித்து வந்த இந்த கவிதைத் துளியைத் தவிர... PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG: --கவிநயா Kindly listen to SUDHA RAGHUNATHAN sing KARUNA JALADHE DHASARATHE in the same raag here: http://www.raaga.com/player4/?id=40460&mode=100&rand=0.6172140685438279 My effort to sing the same Raag is just a sand in the seashore.

Wednesday, June 10, 2009

kanna mani vanna

Sunday, June 07, 2009

Aduha Oonjal Aduhave..

Lyric by Madam Kavinaya. Posted in her blog ammanpaattu. Please click at the title to move on to her blog.

Saturday, June 06, 2009

Vaikasi Visakam..Subramanyoham

another attempt here: PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG. TODAY IS VAIKASI VISAKAM

Saturday, May 30, 2009

Muruganai Paduvom

Please click at the title to move on the blog of the author Madam Thangamani. God Muruga Bless Her and her family.

Tuesday, May 26, 2009

தாயே ஒன்னக் காணலியே

MADAM KAVINYA SINGS AGAIN. THIS TIME THE ARDENT DEVOTEE OF GODDESS EARNS FOR HER IMMEDIATE PRESENCE BEFORE HER. SHE DOES NOT KNOW HOW AND WHEN WOULD SHE COME BEFORE HER !

  • ஆத்தான்னு கூப்பிட்டாக்க
  • ஆசையோட வந்திடுவா
  • அம்மான்னு கூப்பிட்டாக்க
  • அன்போட அருள்புரிவா
  • ஆத்திரமாப் பேசினாலும்
  • ஆதரவாக் கேட்டுக்குவா
  • அழுதழுது கெஞ்சினாக்க
  • ஆறுதலத் தந்திடுவா
  • ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
  • ஆனந்தமா வருவாயேன்னு
  • ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
  • ஆத்தா ஒன்னக் காணலியே
  • தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
  • தெய்வமேநீ வருவாயேன்னு
  • தேடித் தவிச்சிருந்தேன்
  • தாயே ஒன்னக் காணலியே
  • கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
  • ஒத்தத்தாயி நீதானேடி
  • ஓடிவந்து என்னப்பாக்க
  • ஒருநொடியும் இல்லையோடி?
--கவிநயா please click at the above title to move to her blog.

Sunday, May 24, 2009

Two hymns on Goddess Saraswathi and Thayaal Nayaki amman

This song is by Kavi Sudhdhanandha Bharathi and was being sung as a prayer song in almost all schools during 1960s and 1970s. People belonging to those generations still recollect this song. Please note Madam Thulasi Gopal's comment in the blog: http://ammanpaattu.blogspot.comFollows another song written by Madam Kavinaya who has just returned from a devotional journey from Pudukottai to Vaitheeswaran Koil. Her song on Thayyal Nayaki is sung in the lines of an old Hindi song. God bless all the viewers.

Saturday, May 16, 2009

zoo

Zoos across the country are adapting new strategies in the recession to keep visitors coming.

Saturday, May 09, 2009

Dhyana Sloka