JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, செப்டம்பர் 30, 2016

செவ்வாய், செப்டம்பர் 06, 2016

அருள் தருவாய்

திங்கள், செப்டம்பர் 05, 2016

கணபதி திருவடி



திரு. ரமணி அவர்கள் எழுதிய பாடலை நான் யதுகுல காமபோதி ராகத்தில் பாடுகிறேன்.

அதை அருள் கூர்ந்து கணபதி @ விநாயகன் @ கணேசன் @ விக்னேஸ்வரன் கேட்பார் என நினைக்கிறேன்.

இந்த பாடலை இங்கும் கேட்கலாம்.

மங்களம் வாய்ந்த ஸுமுகன்


நன்றி: தமிழ் வேதாஸ் )
(
மங்களம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்
கபில நிறம் வாய்ந்த கபிலன்
யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்
பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்
குள்ளத் தோற்றமுள்ள விகடர்
சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்
தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்
நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது
பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்
யானை முகத்தையுடைய கஜானனன்
வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்
முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்
தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்
கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்
--இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்
கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,
போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்
யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு
எந்த இடையூறும் வராது.
--கந்த புராணம்

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:





vinayakane vinai theerpanavane