JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, செப்டம்பர் 28, 2013

TODAY PURATTASI SANI KIZHAMAI PLEASE SEE MADAM RAJESWARI BLOG.

SMT.RAJESWARI HAS COMPOSED A DIVINE HYMN on the eve of PURATTASI SATURDAY in praise of LORD VENKATESA.

I ACKNOWLEDGE HER DEVOTION AND SING THE SAME AS A TRIBUTE TO HER EVORER LASTING SPIRITUAL MIND

PLEASE CLICK HERE TO MOVE ON TO HER BLOG TO SEE TODAY RIGHT AT THIS MOMENT ALL HEARTENING PICTURES OF THIRUMALAI VASA VENKATESA.




செவ்வாய், செப்டம்பர் 24, 2013

The new Design that Madam Thulasi Gopal may select on Gopal Sir's birthday.


A new saree 
Design by Ranjana craft. 

Wonderful designs are there in this blog . Please click above.

You may visit the blog or face book for further details. 

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

வாடியம்மா



வாடியம்மா 

இது மேடம் கவி நயா அவர்களின் கவிதை. அம்மன் புகழ் பாடி ஒவ்வொரு செவ்வாய் அன்றும் தனது ஆன்மீக பதிவான அம்மன் பாட்டு என்னும் வலையில்
இடுகிறார்.

இதுவரை நான் பார்த்தவரை ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார். அதில் நான் ஒரு எழுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு நான் மெட்டு போட்டு இருக்கிறேன்.

ஆன்மிகம் பற்றி பதிவுகள் எழுதுவோர் ஆயிரமாயிரம் இருப்பினும்
அம்மன் பாத அடிகளில் தன இதயத்தைப் பதித்து கண்ணீரால் அவற்றை நனைத்துக் கவி பாடும் திறன் கொண்ட அவர் ஈடுபாடு வியக்கத்தக்க ஒன்றாம்.

அதுவும் அவர் போற்றி மகிழும் அன்னையின் கிருபையே.

அவர் வலைக்கு செல்லவும். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும். 

திங்கள், செப்டம்பர் 16, 2013

மீனாச்சி பாட்டிக்கு ......இன்னிக்கு happy birthday



மீனாச்சி பாட்டிக்கு இன்னிக்கு 71 வயது முடிஞ்சு, 72 வது வயது பிறக்கிறது.
happy birthday to you..அப்படின்னு சொல்ல கிழவி இருக்கும் ஈஸி சேர் பக்கத்துலே போனேன்.

ஹாப்பி பர்த் டே டு யூ என்றேன்...
இன்னிக்கு திருவோணத்திரு நாள் இல்லையா ? எல்லார் வீட்டிலேயும் பிரதமன் அப்படின்னு ஒரு பால் பாயசம் பண்ணி சாப்பிடுவாங்க. நாம இன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோமா...

திரு ஓணம் சைலஜா வீட்டில் 
பாட்டியோட தங்கச்சி துளசி அம்மாவும் கோபாலும் 


சரி, சரி. என்றார்.

என்னமா நாள் ஓடறது ?

அவர் கிட்டே ஒரு பேச்சுக் கொடுத்தேன் .... எனக்கும் பொழுது போகணும் இல்லையா

என்ன நினைப்பு ?

ஒண்ணுமில்லே.



இந்த 72 வயசுலே கடந்து வந்த காடு, மேடு , பள்ளம் பத்தி.....??????


ஹூம் ....ஹூம்   இல்லை. 

உடம்பைப் பத்தியா ?

இல்லை. 

ஆத்துக்காரர் இந்த வயசுலேயும் கோபக்காரரா இருக்காரே அப்படின்னா?

இல்லை,. அது அவாவா ஸ்வபாவம். நம்ம யாரையும் திருத்த முடியாது. 

குழந்தைகளை பத்தியா ?

இல்லை. அவங்களுக்கு எல்லாமே வயசாயிடுச்சு. 
அவங்க குழந்தைகளை பொறுப்புடனே வளர்க்கும் சக்தியும் புத்தியும் அவர்கள் தனக்குத் தானே தான் டெவலப் பண்ணிக்கணும்.  ..

பேரக்குழந்தைகளைப் பத்தியா ?

எல்லாம் தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம். 

எல்லாம் பகவான் மாந்துரையான் நல்லபடி பார்த்துப்பான். 
 எனக்கு நம்பிக்கை இருக்கு. 

பின்ன எதைப் பத்தி சிந்தனை ?

சொல்லிடுவேன். சத்தம் போடுவேள். அதனால எனக்கு என்ன அப்படின்னு 
பேசாம இருக்கேன்.

இல்ல. சத்தம் போடல்ல. 

நான் நம்பமாட்டேன். உங்க சுபாவம் எனக்கு ஐம்பது வருஷம் தெரியும். 

அம்பது இல்லை. நாப்பத்தி அஞ்சு தான்.

வைச்சுக்கோங்க. அது போதாதா.

அப்ப சொல்லு.  எதைப் பத்தி ....

எதையும் பத்தி சொல்லும்படி  இல்லை. 

அப்ப சொல்லு ..சோகத்துக்கு காரணம் என்ன ? .இது அது எது  ? அப்படின்னு ...
எதாச்சும் சொல்லு.

ஒரே விஷயம் தான் திக் திக் அப்படிங்கறது. 
என்ன இருந்தாலும் இது தப்பு தானே...

எது தப்பு.. நான் ஏதாவது தப்பு ... காபிலே சக்கரை கம்மியா போட்டுட்டேனா?

உங்களை ஒண்ணும் சொல்லலே...

பின்ன யாரை ?  வாடர் காரன் நாலு வாரமா வராம இருக்கானே அதையா 

இல்ல. 

எதித்தாத்து மாமி, காலி பண்ணும்போது சொல்லிண்டு போகலை அதுதானே..

சீ..சீ.. அவங்க ரொம்ப நல்ல மாமி.  அதப்பத்தி சொல்வேனா என்ன.?

அத்வானி இன்னும் சரின்னு சொல்லலையே அதுவா ?

அரசியலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ??

பின்ன என்ன ..?

பின்னே ஒன்னும் இல்ல. முன்னே தான். 

முன்னே என்ன...என் மூஞ்சி தான் இருக்கு. அதுலே என்ன ? மூக்கிலே கொஞ்சம் சளி ஒட்டிண்டு இருக்கு.  அதுவா ?? வெளிலே போறதுக்கு முன்னாடி துடைச்சுண்டு போரேன். நிம்மதி தானே 

உங்களுக்கு எது சொன்னாலுமே இப்படி ஒரு கிண்டல், நையாண்டி தான். ஆர்ப்பாட்டம் தான். 

ஏண்டி, நானா ஆர்ப்பாட்டம்  பண்றேன். பண்ணினதெல்லாம் உங்க.....

அவங்களைப் பத்தி எதுக்கு இப்ப...?

நீ தானே ஆரம்பிச்ச ..

நான் ஒண்ணும் ஆரம்பிக்கல்ல...

அப்ப நான் ஆரம்பிச்சேனா..  நான் நல்லதுக்குத் தானே..சொன்னேன்.

என்ன சொன்னேன் தொன்னேன். 

நாளைக்கு உன் பிறந்த நாளேச்சே.  திருவேற்காடு போய் அம்மனுக்கு ரோஜாப்பூ மாலை போட்டு வேண்டிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கேனே. 



எதுக்கு நீ 
.....இப்ப கவலையா இருக்கே.. நான்தான் உனக்கு அந்த மாணிக்கம்  பதிச்ச மோதிரம் வாங்கித்தர்றேன் அப்படின்னு சொல்லிட்டேனே..



அதுக்கு ஒண்ணும் எனக்கு வருத்தம் இல்ல.  
நான் என்னிக்காவது அது வேணும் இது வேணும் அப்படின்னு கேட்டு இருக்கேனா..

இல்லை.  

இருக்கறது எல்லாத்தையுமே வேண்டாம் அப்படின்னு கொடுத்தாச்சே.

அதான் கேட்கறேன். என்ன வருத்தம் என்ன கவலை...

ஒண்ணுமில்லை.  இந்த சரவணன் இருக்கானே...

யாரு சரவணன்..  ஆனந்தி  புள்ளையா ...அவன் தில்லி லேன்னா இருக்கான். 

அவன் தங்கமான புள்ளையாச்சே..அவனைச் சொல்லல.

பின்ன யாரை...

சத்த சும்மா இருங்க.. என்ன சும்மா இருக்கவிடுங்கா. நானே ஒரு தினுசா 
சமாதானம்  ஆகி விடுவேன். 

என்னது அப்படி உனக்கு.. யாரு அந்த சரவணன் , உனக்கு, என்னது பண்ணினான் , சொல்லித் தொலையேன். 

சொல்லாட்டா       விடமாட்டீகளே..

இப்ப தான் டென்சன் ஜாஸ்தி ஆறது. 

சரி. சொல்லறேன்.

சொல்லு. 

இந்த சரவணன் இருக்கானே...

அதான் ,அது யாரு ? 

அதாங்க...இந்த சரவணன் மீனாட்சி சீரியல் லே வர்றானே...அவன் பண்ணினது ரைட்டா...?  மாமனார் ஐ.சி. யூ இருக்கார் அப்படின்னு கட்டின பொண்டாட்டி சொல்றா.  போய் பார்க்கவேண்டாமோ... 

இப்ப பாருங்க.. என்ன ஆச்சு.


சரவண பவனே ...ஆறுமுகா..
என்னை காப்பாத்து. 

தாத்தா வை  காப்பாத்த என்ன முருகன் என்ன செய்தார்?

இங்கே கிளிக்கவும்.

HAPPY ONAM TO ALL MY KERALA FRIENDS 

ஓணம் 
இந்த ஓணம் கோலம் யார் வீட்டிலே ? தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும். 


ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

Namami VignEswara Paadha Pankajam.

திருமதி அம்பாள் அடியாள் இயற்றிய அருமையான பாடல் இது.
தும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும்.
அவர்கள் வலைப் பதிவுக்கு சென்று முழுப் பாடலையும் கேட்டு மகிழுங்கள்.















Ganesa Pancharathnam by M.S.






natyam.

vinayaka chathurthi அன்று சுப்பு தாத்தா என்ன செய்தார் ?
vinayakar poojai செய்வார்.

அறிந்து கொள்ள காலை 9 மணிக்கு மேல் 10 30 மணிக்குள்
சுப்பு தாத்தா வின் இன்னொரு வலைக்கு சென்று பாருங்கள்.

இங்கே கிளிக்கினாலும் உங்களை விநாயகன் அங்கே அழைத்து செல்வார்.

நினைவு இருக்கட்டும்.  நாளை காலை 9 மணிக்கு.


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

கனி முகம் காண வந்தேன் கற்பகமே...


மேடம் கவிநயா இயற்றிய அழகான பாடல் இது.
கனி முகம் காண வந்தேன் கற்பகமே...எனத்துவங்கும் பாடலின்
முழுமையான வரிகளை, அம்மன் பாட்டு என்னும் அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்.
வழக்கம் போல நான் இதை என் குரலில் ராகம் அடாணா வில் பாடுகிறேன்.