JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், பிப்ரவரி 26, 2009

மாதேஸ்வரி

கவிதையை ஒரு ராகமாலிகையில் பாட நினைத்துப் பாடத்துவங்கினேன். முதல் இரண்டு மூன்று சரணங்கள் பாடியிருப்பேன். சாதாரணமாக, முதலில் ஒரு ஒத்திகை போலத்தான் பாடுவேன். அது சரியாக இருந்தால் அல்லது இதற்கு மேல் சரியாக முடியாது என்று தோன்றாத வரை அதை நான் எடிட் செய்து கொண்டே இருப்பேன். ஆனால், மாதேஸ்வரி எனும் வார்த்தை அடங்கிய சரணத்தை நான் பாடும்போது ஒரு அற்புதம் நடந்தது. அதை ஒரு கோயின்ஸிடன்ஸ் என்று சொல்லிவிடலாம். ஆனால், புத்தி சொல்வதை மனம் எப்பொழுதும் ஒப்புவதில்லை அல்லவா ? நான் மாதேஸ்வரி என்று வார்த்தை பாடும்பொழுது, எனது மகளுக்கு ஸ்டாம்போர்டு பிரசவ மருத்துவகத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி ஸெல் ஃபோனில் வருகிறது. அதை என் மனைவி என்னிடம் சொல்கிறாள். என் மனவியின் குரல் கேட்பதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். புவனேஸ்வரியை மாதே என்று அழைக்கும்பொழுது ஒரு மழலை பிறந்த செய்தி எனக்கு ஒரு மிராகில் ஆக த் தெரிந்தது. கேட்பவருக்கு இந்த ராகமாலிகை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. அடாணா, சஹானா, பூபாளம், மோஹனம் போன்ற ராகங்கள் பிரதானமாகத் தெரியவரும். அன்னை அளிப்பது ஒரு புன்னகைதான் எனினும் அதை களிப்பதில் எத்துணை வகை உள்ளது !! அதுவும் அன்னையின் அற்புதமே !! பாட‌லைக் கேட்க‌ இங்கே வாருங்க‌ள் அல்ல‌து யூ ட்யூபில் எனை ஆளும் புவ‌னேஸ்வ‌ரி என்று ஸ்ர‌ச் செய்ய‌வும். சுப்பு ரத்தினம்.

புதன், பிப்ரவரி 25, 2009

See the Elephant !

Courtesy: MADAM KAVINAYA

திங்கள், பிப்ரவரி 23, 2009

கருணைக்கு ஏது எல்லை!

ON THE EVE OF MAHA SHIV RATHRI DAY, MADAM SHYLAJA HAS COMPOSED AN INVOCATION SONG ON LORD SHIVA. THIS IS SUNG (OR PERHAPS ATTEMPTED TO BE SUNG ) IN RAAG MUKARI. First Song PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE BLOG WHERE YOU FIND THE CONTEXT OF THIS SONG BY MADAM SHYALAJA COURTESY: SHYALAJA MADAM. நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! வாசமாய் வாழ்க்கை மாறிட வணங்குவோம் சிவனின் பாதம் சிவம் என்று சொல்லும்போதே சிந்தையது தெளிவு பெறும் அவன் கருணைகங்கை ஆறாகப் பாய்ந்துவரும் நினைவெலாம் சிவமயம் நித்தியமென்றாகிவிட்டால் கனவிலும் எமபயமில்லை கருத்தினில் இதனைக்கொள்வோம்! அன்பிற்குமறுபெயராய் அகிலத்தை ஆளுபவன் என்புக்கு உள்கடந்துமனத்தில் ஏகாந்தமாய் இருக்கின்றவன் உருவமாய் உள்ளவனே உள்ளத்தில் உறைவதை உணர்ந்தபின் தாழ்வில்லை உமாமகேசுவரனின் கருணைக்கு ஏது எல்லை!

புதன், பிப்ரவரி 18, 2009

Let Goddess Visalakshi Bless Kavinaya and her family

Madurai Meenakshi, Kasi Visalakshi, Kanchi Kamakshi, Chamundeswari, Abhirami all represent the One Goddess who showers all Her Best Blessings on all who worship Her with purity of heart.

சனி, பிப்ரவரி 14, 2009

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை

This second version was taken first. Both are raga malikas. In the first, one can find jonpuri and bhoopalam in addition to kanada, sahana, atana, hindolam etc. இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை My appreciation for the efforts of Mr.Kumaran not only for this posting of This Ashtagam but also for the in-depth writings on aanmeeka topics in his blog. God Bless him and his family. மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள் தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி)

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

Saravana Bhavan in Edison

அமெரிக்காவுக்கு வ‌ ந்து இன்றுட‌ன் 15 நாட்க‌ளாகிவிட்ட‌ன‌. ந்யூ ஜெர்ஸியில் அம‌க்க‌ள‌மா ஒரு காஃபி சாப்பிட்டேன். பேஷ் பேஷ் என்று சொல்லும்ப‌டியாக‌ இரு ந்த‌து என்று சொன்னாலும் ந‌ம்ம‌ த‌ஞ்சாவூர் காஃபிக்கு இணையாக‌ச் சொல்ல‌ முடியாது. இங்கு எல்லோரும் காஃபி என்றாலே ஒரு பெரிய‌ ட‌ம்ள‌ரில் முக்காலே மூணு வீச‌ம் ப‌ங்கு டிகாஷ‌னை (அதுவும் த‌ண்ணியாக‌ ) த‌ருகிறார்க‌ள். பக்க‌த்திலே போனால் அங்கு ஹாஃப், ஹாஃப் என்று ஒரு பால் ஒரு ஃப்ளாஸ்கில் இருக்கிற‌து. அது ஜில் பால். அதை ச‌ற்று ஊத்திக் கல ந்தாலே காஃபி ஜில்லிட்டுப் போய்விடுகிற‌து. அதைத் திரும்பிக் கொண்டுபோய் மைக்ரோ ஓவ‌னில் ஒரு 20 செக‌ன்டுக்கு சூடு செய்து விட்டு சாப்பிட‌வேண்டும். சில‌ பேர் அதில் பாதியை சாப்பிட்டு விட்டு, மிச்ச‌த்தை அப்ப‌டியே பாக் செய்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்க‌ள். ந‌ல்ல‌ காஃபியாக‌ இரு ந்தால், மிச்ச‌ம் இருக்குமோ ? . இவ‌ர்க‌ளுக்கு ஒரு த‌ஞ்சாவூர் காஃபி என்றால் அத‌ன் சுக‌ம் தெரியுமா என்ன‌?இன்ன‌மும் 111 நாட்க‌ள் இங்கே இருக்க‌வேண்டும். பிற‌கு சென்னைக்கு போய் அம்ப‌த்தூர் க்ருஷ்ணா காஃபி க‌டைலே பிளான்டேஷ‌ன் ஏ சிக்க‌ரி க‌ல‌க்காமே வாங்கி அதில் முத‌ல் டிகாஷ‌ன் ஸ்ட்ராங்கா எடுத்து திக் பாலோட‌ க‌ல‌ ந்து சாப்பிட‌வேண்டும். அத‌ன் சுக‌மே சுக‌ம். ந்யூ ஜெர்சிக்குப்போகும் வ‌ழியிலே த‌ஞ்சாவூர் ரெஸ்டார‌ன்ட் ஒன்று இருக்கிற‌து. 1980 லே இங்கு வ‌ ந்த‌ ஒரு த‌ஞ்சாவூர் கார‌ர் இங்கே ஹோட்ட‌ல் ஒன்று அதே மாதிரி நெய் ர‌வா வெங்காய‌ ஸ்பெஷ‌ல் ம‌சாலா தோசை, ஊத்த‌ப்ப‌ம், வெங்காய‌ ச‌ட்னி, கொத்த‌ம‌ல்லி ச‌ட்னி, தேங்காய் ச‌ட்னி அம‌க்க‌ள‌மாக‌ த‌ருகிறாராம். விலை 30 டால‌ராம். ( ந‌ம்ம‌ ஊர் ம‌திப்பிலே 1500 ரூபாய். ) தோசை ஸ்பெஷ‌லிஸ்ட் என்ற‌ போதிலும் இட்லி வ‌டை, பூரி, எல்லாமும் கிடைக்குமாம். பிரிட்ஜ் வாட‌ட‌ருக்குப்போய் அங்கு வெங்க‌டாஜ‌ல‌ப‌தி கோவிலுக்கு சென்ற‌போது இர‌வு ம‌ணி 8.30 . ஜோ ஜோ பாடி ப‌க‌வானை தூங்க‌ வைக்கிறார்க‌ள். கோவில் சுத்த‌மாக‌ இருக்கிற‌து. ப‌க்த‌ர்க‌ள் நிதான‌மாக‌ அமைதியாக‌ க்யூவில் நின்று த‌ரிசிக்கிறார்க‌ள். ப‌ட்ட‌ர் க‌ர்ப‌க்ருக‌த்தில் காலில் ஸாக்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார்க‌ள். பாவ‌ம். பாலாஜி ப‌க‌வான் ம‌ட்டும் அப்ப‌டியே பீதாம்ப‌ர‌த்தில் ந‌ம்ம‌ ஊர் டிர‌ஸ்ஸிலே இருக்கிறார்.அபிஷேகம் செய்த பால் தீர்த்தம், சடாரி எல்லாம் நம்ம பெருமாள் கோவில்கள் மாதிரியே ச்ம்பிரதாயம். அக்ஷதை, குங்குமம் , துளசி பிரசாதம். அதை வாங்கிக்கொண்டு இந்தப்பக்கத்தில் நவக்ரகம் . அதையும் வேயுறு தோளி பங்கன் சொல்லிக்கொண்டே மூன்று சுற்று சுற்றி வந்து சரி, திரும்புவோம் என்று வந்தால், அங்கு கான்டீன். பொங்கல் 3 டாலர். காஃபி 1 டாலர்.டீ ஒரு டாலர்.லட்டு 3 டாலர். காஃபி மட்டும் சொல்லக்கூடாது. காஃபி மாதிரி இல்லை. டீ சாப்பிடவேண்டியதுதானே என்று என் துணைவி என்னை இடிக்கிறாள். அதில் ஒரு வாய் ஸிப் பண்ணிப்பார்த்தேன். அது தேவலை. கோவிலுக்கு உள்ளே வெளியே போகும்போது சூடான் காற்று ந‌ம் மேல் விழ் இத‌மாக‌ இருக்கிற‌து.ம‌ன‌சுக்கும் ஒரு இத‌ம். பெருமாள் எங்கேயும் இருக்கார். அவ‌ர் ந‌ம்மை ர‌க்ஷிப்பார் என்று நினைத்துக்கொண்டேன். நம்ம ஊர் ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியார் கள் தக்ஷிணை டிமான்ட் செய்வது ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.இவ‌ர்க‌ள் வாய் திற‌ப்ப‌தில்லை. ஆனால் டால‌ர் டால‌ராக‌ அவ‌ர்க‌ள் த‌ட்டில் விழுகிற‌து. எல்லாம் பெருமாள் அனுக்ர‌ஹ‌ம். திரும்ப‌வும் ந்யூ ஜெர்ஸியிலிருன்து ஸ்டாம்ஃபோர்டு வ‌ரும்போது எடிஸ‌ன் வ‌ழியாக‌ வ‌ ந்தோம். அங்கு ஓக் ட்ரீ என்னும் வீதியில் இந்திய நாட்டு க்க்டைகள் ஏராளம். நம்ம டி. நகர் அமைதியாக இருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ ? இந்தியர்கள் அதுவும் சென்னைவாசிகள் நிறைய போக்குவரத்து இருப்பதால், சாலையிலும் சென்னைபோலவே டிராஃபிக் கொஞ்சம் அதிகம். அதே சமயம் சாலை டிஸிப்ளினும் குறைவு. ந‌ம்ம‌ ஊர் ச‌ர‌வ‌ண் ப‌வ‌ன், த‌மிழில் போர்டு போட்டு இருக்கிறார்க‌ள்.ரவா தோசைக்கு மோர்க்குழ்ம்பு ஸைட் டிஷ் உண்டு என்றார். ஒரு சபலம். உள்ளே போய் ஒரு வெட்டு வெட்ட‌லாமா என்று என் மாப்பிள்ளை கேட்டார். இப்ப வேண்டாம், ஊருக்குத் திரும்பும்போது பார்த்துக்கொள்ள‌லாம் என்று சொன்னேன்.

சனி, பிப்ரவரி 07, 2009

முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்

முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன் முத்து மாரி யம்மா - நா முன்ன செஞ்ச வெனையெல்லாம் முழுக வெப்பா யம்மா கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன் கோட்டை மாரி யம்மா - நா கொண்டு வந்த வெனையெல்லாம் கருக வெப்பா யம்மா சித்தங் கலங்குதடி சமயபுரத் தம்மா - நீ சித்த வந்து கண்ணு தொறக்க வேணுமடி யம்மா பித்துப் புடிக்குதடி பாளையத்து அம்மா - நீ பெத்த புள்ள கலங்குறத பார்ப்பதென்னடி சும்மா? --கவிநயா Please click at the title to log on to poetess' blog