This second version was taken first. Both are raga malikas. In the first, one can find jonpuri and bhoopalam in addition to kanada, sahana, atana, hindolam etc. இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை My appreciation for the efforts of Mr.Kumaran not only for this posting of This Ashtagam but also for the in-depth writings on aanmeeka topics in his blog. God Bless him and his family. மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள் தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி)
BUSY BUSINESS .// SENSEX MOVEMENTS ETC.,
- Currency Converter
- Dictionary of Economics
- Know Today's Share Prices at MUMBAI STOCK EXCHANGE
- MARKET DATA ONLINE FROM WALL STREET JOURNAL
- Money Markets at THIS MOMENT IN USA
- MOST ACTIVE SHARES TODAY..THIS MOMENT AT NSE
- NASDAQ ..THE MOST ACTIVE SHARES at this MOMENT !
- NATIONAL STOCK EXCHANGE (INDIA)
- OFFICIAL WEBSITE OF RESERVE BANK OF INDIA
- PATTERNS OF MOVEMENTS OF SHARES - TEC CHARTS
- STOCK PRICES at MumbaiStockExchange
- WORLD MARKETS AT THIS MOMENT
- z..z.. Relax..in case the Market is TOO MUCH tension for YOU ! Click Here !!
Saturday, February 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment