JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், பிப்ரவரி 26, 2009

மாதேஸ்வரி

கவிதையை ஒரு ராகமாலிகையில் பாட நினைத்துப் பாடத்துவங்கினேன். முதல் இரண்டு மூன்று சரணங்கள் பாடியிருப்பேன். சாதாரணமாக, முதலில் ஒரு ஒத்திகை போலத்தான் பாடுவேன். அது சரியாக இருந்தால் அல்லது இதற்கு மேல் சரியாக முடியாது என்று தோன்றாத வரை அதை நான் எடிட் செய்து கொண்டே இருப்பேன். ஆனால், மாதேஸ்வரி எனும் வார்த்தை அடங்கிய சரணத்தை நான் பாடும்போது ஒரு அற்புதம் நடந்தது. அதை ஒரு கோயின்ஸிடன்ஸ் என்று சொல்லிவிடலாம். ஆனால், புத்தி சொல்வதை மனம் எப்பொழுதும் ஒப்புவதில்லை அல்லவா ? நான் மாதேஸ்வரி என்று வார்த்தை பாடும்பொழுது, எனது மகளுக்கு ஸ்டாம்போர்டு பிரசவ மருத்துவகத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி ஸெல் ஃபோனில் வருகிறது. அதை என் மனைவி என்னிடம் சொல்கிறாள். என் மனவியின் குரல் கேட்பதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். புவனேஸ்வரியை மாதே என்று அழைக்கும்பொழுது ஒரு மழலை பிறந்த செய்தி எனக்கு ஒரு மிராகில் ஆக த் தெரிந்தது. கேட்பவருக்கு இந்த ராகமாலிகை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. அடாணா, சஹானா, பூபாளம், மோஹனம் போன்ற ராகங்கள் பிரதானமாகத் தெரியவரும். அன்னை அளிப்பது ஒரு புன்னகைதான் எனினும் அதை களிப்பதில் எத்துணை வகை உள்ளது !! அதுவும் அன்னையின் அற்புதமே !! பாட‌லைக் கேட்க‌ இங்கே வாருங்க‌ள் அல்ல‌து யூ ட்யூபில் எனை ஆளும் புவ‌னேஸ்வ‌ரி என்று ஸ்ர‌ச் செய்ய‌வும். சுப்பு ரத்தினம்.