10 KANAKADHARA STH... |
செவ்வாய், டிசம்பர் 30, 2008
Let All the Best Blessings of The Almighty Be Showered on You during all days in the New Year 2009
Please click below and listen to Sweet music at the dawn of 2009
http://llerrah.com/newyearblessing.htm
http://llerrah.com/newyearwishes.htm
LISTEN TO DR.M.S.SUBBULAKSHMI SINGING KANAKADHARA STOTRAM.
We take immense pleasure in extending OUR HEARTY GREETINGS FOR YOU AND YOUR FAMILY MEMBERS FOR a very happy new year 2009.
You may also click below to listen to the KANAKADHARA STOTRAM
ஞாயிறு, டிசம்பர் 21, 2008
ஓராறு முகம் கொண்ட வேலா
Kindly click at the title to log on to the Author of this Song;
ஓராறு முகம் கொண்ட வேலா
ஓம்காரப் பொருள் சொன்ன பாலா
ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
அடிமைக்கு அருள் செய்ய வாவா!
நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்
பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்
சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை
விட்டுத் தெறித் தோடச் செய்வாய்!
சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
முத்தாக வந்து தித்த உன்னை - என்
சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!
மயில் மீது ஏறியே வருவாய் - என்
மனதிலே கோவில் கொண் டமர்வாய்
பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
பிறவிப் பயன் தந்து அருள்வாய்!
செவ்வாய், டிசம்பர் 16, 2008
MARGHAZHI THINGAL
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
வெள்ளி, டிசம்பர் 12, 2008
nin hiruvadi charanam enru naan nambhi vandhen
திங்கள், டிசம்பர் 08, 2008
Tiruvannamalai Deepam .. You hear M.S. Singing in front of the temple
சனி, டிசம்பர் 06, 2008
Transit of Guru (Jupiter ) from Dhanus to Makara Rasi
GURU 108 STOTRAM.m... |
வெள்ளி, டிசம்பர் 05, 2008
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
. சிவபுராணம்
audio
(திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்புப் பாயிரம்)
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
ஞாயிறு, நவம்பர் 30, 2008
41st Anniversary of my father
1900 - 1967 A lawyer and equally a Tamil Scholar and a puritan of Carnatic Classical Music. We remember him today, his 41st Rememberance Day. Of all composers, he adored Arunachala Kavirayar. Of all Raagas he liked most Bhairavi. Of all musicians of Carnatic music, his idol was none other than Dr.M.S.Subbulakshmi. Here follows, a song from RAMA NATAKAM by Arunachala kavirayar, sung by Dr.M.S.S. in Raag Bhairavi. http://www.musicindiaonline.com/p/x/-qX2d--KYS.As1NMvHdW/?done_detect
சனி, நவம்பர் 29, 2008
un chittum irangaadha.. Sahana .. by Ranjani and Gayathri
alapanai Part I
chitham irangadthennaiya ?
வியாழன், நவம்பர் 27, 2008
கைத்தல நிறைகனி
THIS PRAYER TO LORD GANESA IS SET TO RAAG YADHUKULA KAMBHODHI
.TO LISTEN TO DR.M.S.SUBBULAKSHMI THE SAME PRAYER IN RAAG NAATTAI, PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே
செவ்வாய், நவம்பர் 25, 2008
திங்கள், நவம்பர் 24, 2008
Abhirami Andhathi
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே
My sister advised me to recite this song ( from Abhirami Andhathi ) to rid ourselves of this distressing ailment.
When all the doors are closed, God opens His.
Click below to listen to ABHIRAMI ANDHATHI BY SULAMANGALAM SISTERS
PART I FOLLOWS:
http://www.musicindiaonline.com/p/x/3XK9fztG69.As1NMvHdW/
ஞாயிறு, நவம்பர் 23, 2008
திங்கள், அக்டோபர் 27, 2008
சனி, அக்டோபர் 25, 2008
திங்கள், அக்டோபர் 20, 2008
ஓடறேன்... ஓடறேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன்
ஓடறேன்... ஓடறேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இந்த ஓட்டம் என்று நிற்குமோ என்று
தெரியாமலும் ஓடிக்கொண்டு இருக்கிறேன்
அன்று முதலை வாயிலிருந்து யானையை மீட்ட பரந்தாமா ?
இன்று பங்கு வணிகத்தில் பறி கொடுத்து நிற்கும்
சிறு முதலீட்டாளர்களை
கரடி வாயில் இருந்து மீட்க
நீ எப்போது வருவாய்
picture Courtesy: http://oncommunity.blogspot.com
ONLY GOD CAN SAVE THE WORLD FROM THIS GLOBAL FINANCIAL CRISIS !
let us remember
That Day The Lord saved the elephant from the crocodile ! ************************************************************************************
Will He Come to save investors, for the clutches of Bears today ? *****************************************************************************
Govinda Govinda Govinda Govinda
<
Sarvathra
Govinda Nama Sangeerthanam
GOVINDA GOVINDA
ஞாயிறு, அக்டோபர் 19, 2008
வியாழன், அக்டோபர் 16, 2008
Snapfish:Photo:Shared
Snapfish:Photo:Shared
let us see a golu at my daughter's house at New Jersey USA
http://www.youtube.com/watch?v=VubDkGu79bM
செவ்வாய், அக்டோபர் 07, 2008
நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்
ON THE SARASWATHI POOOJA DAY, MADAM KAVINAYA HAS RECITED A HYMN IN PRAISE OF GODDESS SARASWATHI.
I HAVE SET THE TUNE IN RAAG SHANMUGAPRIYA. AND HAVE SUNG THIS SONG ALSO.
IT IS MY BETTER HALF WHO MANAGES TO LISTEN AS I SING.
PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO THE BLOG OF MADAM KAVINAYA
http://kavinaya.blogspot.com
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்!
நாமணக்க பாடுகின்றேன் நாரணியே மனம் கனிவாய்!
நாதவடி வானவளே ஐந்தவியே அலர்மகளே
பாதமலர் பணிந்துன்னை பாடுகின்றேன் கலைமகளே
சீதள மதி முகத்தை சிந்தையிலே நிறுத்துகின்றேன்
பூதலத்தை ஆளுகின்ற பூவை உன்னை போற்றுகின்றேன்!
வேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே
பேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே
பக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே!
ஞானவடி வானவளே பாமகளே பைரவியே
வானவரும் தானவரும் வணங்கிடும் வசுந்தரியே
கானமழை பொழிந்துன்னை காலமெல்லாம் போற்றிடவே
ஞாலமெல்லாம் விளங்குகின்ற நாயகியே அருள்வாயே!
--கவிநயா
Also please listen to a very good Flute Concert:Venugana Arangetram of Tanya Sukumar Aloysius
May 21st, 2005 - Ajax
Courtesy: thoiya314
Disciple of "Venuganavarithi" Dr. Selvanayagam Thayaparan
Flute: Selvi Tanya Sukumar Aloysius
Violin: Sri B. U. Ganesh Prasad
Mridhangam: Sri Poovalur Srinivasan
Ghatam: Sri R. N. Prakash
Morsing: Sri S. Surenthar
Composition: Kalai Gnyanam Arul Vaaye
Raagam: Hamsadhwani
Thaalam: Adi
Composer: Suntharam Selvanayagam
Our Thanks are due to them.
சனி, அக்டோபர் 04, 2008
kanakadhara Stotram composed by ADHI SANKARA
Kanakadhara stothr... |
புதன், அக்டோபர் 01, 2008
மாயவனே தூயவனே மன்னவன் நீ தானே
Courtesy: Sri Ramesh Sadhasivam.
THE SONG IS RECITED BY SRI RAMESH SADHASIVAM . KINDLY CLICK AT THE TITLE OF THIS POST TO LOG ON TO HIS BLOG.
I HAVE ATTEMPTED TO COMPOSE THIS SONG IN RAAG Anandha bhairavi AND AM NOT SURE HOW FAR I HAVE SUCCEEDED HERE. IT IS FOR SINGERS TO SING THIS SONG IN THIS RAAG, AS YOU KNOW, I AM NOT A GOOD SINGER OF ANY STANDARD.
மாயவனே தூயவனே மன்னவன் நீ தானே
பாற்கடலில் தூக்கம் கொண்ட நாயகன் நீ தானே
காலெடுத்து வானளந்த வாமனன் நீ தானே
தூணுடைத்து போர் தொடுத்த சிம்மமும் நீ தானே
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஆயர் குறை போக்கிடவே குன்றெடுத்து நின்றாயே
மக்கள் குறை தீர்த்திடவே மீண்டும் மீண்டும் வந்தாயே
ஆதியிலே மீனாக நீ தான் தோன்றினாய்
ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் ஆகினாய்
மாற்றம் இல்லா மன்னவனே
குற்றம் இல்லா கோமகனே
கீதை தந்த நாயகனே
ராதையவள் காதலனே
காமனும் நீ தானே
ராமனும் நீ தானே
தர்மம் அதை காத்திடவே துயிலெழுந்து வந்தாயே
திரௌபதியை காத்திடவே துகிலெடுத்து தந்தாயே
அகிலங்கள் எல்லாமே நீ தான் ஆக்கினாய்
அகலிகா பெண்ணின் கல் சாபம் போக்கினாய்
சக்தியவள் மூத்தவனே
சக்தியெல்லாம் வாய்த்தவனே
பக்தர் குறை தீர்ப்பவனே
பக்தி நெறி காப்பவனே
அன்பனும் நீ தானே
உயிர் நண்பனும் நீ தானே
OUR GREETINGS AND BLESSINGS TO SRI RAMESH SADASIVAM AND HIS FAMILY MEMBERS AND HIS FRIENDS ON THE EVE OF THIS NAVARATHRI
செவ்வாய், செப்டம்பர் 30, 2008
jaya jaya devi Durga Devi Charanam
சனி, செப்டம்பர் 27, 2008
Between the Bull and the Bear and now Bush also !!!
வியாழன், செப்டம்பர் 25, 2008
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ ?
Waiting eternally, the poetess appeals to the wind to carry her message to Goddess Thiruverkadu Amman . One more feather in the cap of Madam Kavinaya.
Please click at the title to move on to her blog. But before that, listen to the song, which is set a mix of raag Bhimplas and the raag Jonpuri . (puritans may kindly forgive !!)
காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
காட்டுக்குள்ளே செடியாகி
தழைத்து வளர்ந்திருப்பாள்
கொடியாகி மரத்தின் இடையை
சுற்றிக் கட்டிக்கொண் டிருப்பாள்
சின்னச் சிட்டுக் குருவியாகி
கூட்டுக்குள்ளே ஒளிந்திருப்பாள்
காட்டரசன் சிங்கமாகி
கர்ஜித்து மகிழ்ந்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
காட்டுக்குள்ளே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
மலைமீது மரமாகி
வானம் தொட வளர்ந்திருப்பாள்
அசையாத பாறையாகி
படுத்து ஓய் வெடுத்திருப்பாள்
பாறையிலே பசுந்தளிராய்
துளிர்த்து சிரித்திருப்பாள்
சின்னக் குற்றுப் புதராகி
குனிந்து நிலம் பார்த்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
மலைமேலே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
கடல்மீது அலையாகி
துள்ளிக் குதித்திருப்பாள்
நீர் உவர்க்க உப்பாகி
காதலன்போல் கலந்திருப்பாள்
சின்னச் சின்ன மீனாகி
நீந்திக் களித்திருப்பாள்
கரையினிலே மணலாகி
பார்த்து ரசித்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
கடல்பக்கம் அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
--கவிநயா
சனி, செப்டம்பர் 20, 2008
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம்
Anticipating permission from Mr.Ramesh Sadasivam, who has recited this prayer, I have sung this Bhajan in Raag Hindolam.
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் மந்திரம்
குற்றம் நீக்கி சுத்தம் செய்து மேன்மை தரும் எந்திரம்
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சக்கரை
ஆண்டவனே மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சத்தியம்
மூடம் நீக்கி ஞானம் பெற சொல்ல வேண்டும் நித்தியம்
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் காவலன்
நம் தேவைகளை தேவனுக்கு கொண்டு செல்லும் ஏவலன்
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம்
சொல்ல சொல்ல சொல்லும் உயிர் யோக நிலை பெற்றிடும்
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் தாரகம்
கன்னம் தொட்டு முத்தமிட்டு அன்பு செய்யும் தாயகம்
ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி
ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி
PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE BLOG OF SRI RAMESH SADHASIVAM.
I wish All Rama bhakthas sing this during Nav Rathri days.
வியாழன், செப்டம்பர் 11, 2008
வெள்ளி, செப்டம்பர் 05, 2008
Ganesh Sthuthi
The song composed by Madam Kavinaya is so fine that i thought of singing it as a chorus prefaced by Ganapathy Manthras.
On the eve of Vinayaka Chathurthi Madam Kavinaya has recited a sublime song praying to God Ganesha. http://kavinaya.blogspot.com She is Blessed by God Ganesha, bountifully as is seen by her remarkable fervour and talent in composing prayers in just minutes if not in seconds. I pray to Vigneswara to shower all His Best on Madam Kavinaya and her family for all time to come. முந்தி விநாயகரே எங்கள் முத்தமிழ் காவலரே வந்தனம் செய்தோமய்யா உன்னை எங்கள் சொந்த மாய்க் கொண்டோமய்யா! விக்ன விநாயகரே எங்கள் வினைகளைத் தீர்ப்பவரே சித்தி விநாயகரே உன்னை எங்கள் சிந்தையில் வைத்தோமய்யா! மூஞ்சூறு வாகனரே எங்கள் முக்கண்ணனின் மைந்தரே துஞ்சாமல் காப்பவரே உன்னை எங்கள் நெஞ்சுக்குள் வைத்தோமய்யா! மஞ்சள் விநாயகரே எங்கள் மனம்போல அருள்பவரே தொந்திக் கணபதியே உன்னை எங்கள் புந்தியில் வைத்தோமய்யா! -- இந்தப்பாட்டிற்கு முதலில் ஹம்ஸத்வனியிலும் பிறகு கானடாவிலும் மெட்டமைத்தேன். நன்றாகவே வருகிறது. இருப்பினும் சமீபத்தில் நான் மிகவும் மிகவும் ரசித்த ஒரு சினிமா பாடல் ட்யூன் இதற்கு இன்னமும் பொருத்தமாக இருப்பதாகப் பட்டது.So starting the first line with that tune and then changing to carnatic music.
செவ்வாய், செப்டம்பர் 02, 2008
Today (3rd September 2008) Vinayaka Chathurthi
GOLDEN VINAYAKA WORSHIPPED AT OUR HOUSE ON THIS DAY
THIRTY TWO FORMS OF VINAYAKA
Ganesha Chathurthi manthras in .pdf format below:
GaneshChaturthi.pd... |
Hosted by eSnips |
குட்டி குட்டி கண்ணனாம்
Mr.Ramesh Sadhasivam has recited a wonderful song eulogizing Lord Krishna
(you may click at the title to go to his blog)
Courtesy:
http://iamhanuman.blogspot.com
குட்டி குட்டி கண்ணனாம்
குறும்பு செய்யும் கண்ணனாம்
கண்ணடிக்கும் கண்ணனாம்
கண் கவரும் கண்ணனாம்
முத்துப் பல் கண்ணனாம்
முத்தம் தரும் கண்ணனாம்
குழலூதும் கண்ணனாம்
குஷியாக்கும் கண்ணனாம்
மயிலிறகுக் கண்ணனாம்
மனம் மயக்கும் கண்ணனாம்
கொஞ்சிப் பேசும் கண்ணனாம்
கொட்டம் செய்யும் கண்ணனாம்
வெண்ணை தின்னும் கண்ணனாம்
வெள்ளை உள்ளக் கண்ணனாம்
வீரமுள்ள கண்ணனாம்
வெற்றி பெரும் கண்ணனாம்
ஞானமுள்ள கண்ணனாம்
நன்மை செய்யும் கண்ணனாம்
மாடு மேய்த்த கண்ணனாம்
மாசு போக்கும் கண்ணனாம்
பாட்டுப் பாடும் கண்ணனாம்
பாவம் போக்கும் கண்ணனாம்
ஆட்டம் போடும் கண்ணனாம்
ஆனந்தக் கண்ணனாம்
மனம் மகிழ போற்றுவோம்
மாலைகள் பல சாற்றுவோம்
அவன் புகழை பாடுவோம்
ஆனந்தக் கூத்தாடுவோம்
திங்கள், செப்டம்பர் 01, 2008
PRAY TO LORD HANUMAN TO ACHIEVE THINGS APPARENTLY UNACHIEVABLE !
WHEN ALL DOORS CLOSE, GOD OPENS HIS.
It so happened that yesterday my son in law came under severe stress when Indian Airlines flight from Chennai to Mumbai was very heavily delayed resulting in a near impossible situation of catching an international flight from Mumbai to New York. Time was running out. At Chennai, at call Centres of Indian Airlines, none was able to give first hand information as to when would the flight depart. At Mumbai, a very piquant situation, when even the so-called PAN AMERICAN airways DELTA AIRWAYS would not even lift the telephone at its Airport office to listen to what its customer says. Their offices are open only during day and their flights operate during night.
We kept our fingers crossed, as the indian Airlines plane finally took off, but we were not sure, whether my son in law will have enough time to take out the luggages, get to International airport, check in and also do other formalities at the Immigration counter. All that we could do was to simply pray that he should catch the flight.
I asked my grandkid to sing HANUMAN CHALISA. HANUMANJI IS ASAADHYA SADHAKA. HE IS ONE WHO CAN MAKE WHAT EVERYONE OF US CONSIDER IMPOSSIBLE TO ACHIEVE.
Praying to Him will render all our efforts on going, less anxious and fruitful.
No doubt, my grand kid sang this prayer, and my son in law also was able to board the flight at Mumbai right in time.
Thank you Hanumanji.
"MORE THINGS ARE WROUGHT BY PRAYER THAN THIS WORLD DREAMS OF."...Tennyson
சனி, ஆகஸ்ட் 30, 2008
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008
ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008
Happy Tenth Wedding Anniversary of our son Karthik and Prabha
இன்று எங்கள் மகன்/மருமகள் திருமண பத்தாம் ஆண்டு நிறைவடைகிறது.
எங்களது வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க !!
lion, temple, laugh, grandkid
Wedding anniversary of Karthik prabha
வெள்ளி, ஆகஸ்ட் 15, 2008
ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2008
Hearty Laugh.
My grandkids could not contain their laughter as they see this old man
singing the song " sakthi sahitha ganapathim "
வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008
வியாழன், ஆகஸ்ட் 07, 2008
THE SONG RECITED BY MADAM KAVINAYA IN HER BLOG http://ammanpaaatu.blogspot.com was so impressive that I decided to set the tune in Raag bowli.
Many Thanks to her permission to set the tune for the same.
மாங்காட்டுத் திருத்தலத்தில்
காமாக்ஷி என்றபெயர்
கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா!
பூங்காற்றுபோல நெஞ்சம்
தழுவுகின்ற கருணையினால்
எமைஆட்சி செய்திருக்கும் அம்மா!
அக்கினியின் நடுவினிலே
முக்கண்ணனை வேண்டி
உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!
ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!
பற்றனைத்தும் விட்டுவிட்டு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!
இற்றைக்கும் ஏழேழு
பிறவிக்கும் உன்னடிகள்
போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!
மூவிரண்டு வாரங்கள்
மனமொன்றி வேண்டி நின்றால்
மறுக்காமல் அருள்கின்ற அம்மா!
நாவினிக்க உன்பெயரை
நாள்தோறும் பாடுகின்றேன்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!
This devotional song is set to Raag Bowli
செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008
TODAY (6th August 2008) IS THE HAPPY BIRTHDAY OF MY FIRST SON-IN-LAW SRI S.BALASUBRAMANIAN
B L E S S I N G S F R O M P A R E N T S
TODAY IS THE HAPPY BIRTHDAY OF
MY FIRST SON-IN-LAW SRI S.BALASUBRAMANIAN
(My grand kid is waiting for the birthday cake to be cut now )
WE WISH HIM MANY MANY HAPPY RETURNS AND PRAY TO LORD MURUGA TO BESTOW ON
HIM and HIS FAMILY ALL HIS BEST
On this day, let us have a Dharsan of
(The tallest murugan statue in Malaysia)
உலகத்திலேயே பெரிய வடிவில் முருகப்பெருமான்
மலேசியாவில் அருள் பாலிக்கிறார்.
அங்கு சென்று அவரை இன்று தரிசிப்போமா ?
RM2.5mil statue made of 1,550 cubic metres of concrete, 250 tonnes of steel bars and 300 litres of gold paint brought in from Thailand.
Gazing at the magnificent 42.7m-high statue of Lord Murugan at Batu Caves, Selangor.
We visit a temple where we witness a wonderful Abishekam of Muruga peruaman and Nithya Shree singing Skandha Shasti kavacham. Let us listen and pray to Lord Muruga.
As We celebrate this . we witness
Swami purappadu .. Nadhaswaram .. mallari
We listen to our great singer T.M. Sounderarajan singing
-Unnaiyum Marappathundo-
A Song on Lord Murugan, from this Great singer ~ & a slide-show featuring Jaffna-Nallur
L a d d u s
We return home with hands full of prasadams of Lord Muruga, to give to
our son-law-law Sri S.Balasubramanian and his family.
எனது முதல் மாப்பிள்ளை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் பிறந்த நாள்
கொண்டாடத்திற்கு வந்த அனைவருக்கும் எங்கள் நன்றி.
மறக்காமல் எல்லோரும் லட்டு சாப்பிட்டுவிட்டு செல்லவும்.
All the Best Balu !
செவ்வாய், ஜூலை 29, 2008
Morning Mangala Vaadhyam ..START WITH A PRAYER TO VINAYAKA
LIGHT AND SOUND VINAYAKA
yOU SEE DEEPA ARADHANA RIGHT FROM THE SECOND MINUTE.
CONCENTRATE ON THE DEEPA
CHANT : OM GANESHAYA NAMAHA.
வெள்ளி, ஜூலை 25, 2008
ஆடி வெள்ளிக் கெழமையிலே
Courtesy:
http://prasadbhathey.sulekha.com/mstore/prasadbhathey/albums/Trichirappalli/samayapurammariamman.jpg
A prayer to Mariamman soaked in Raag Chenchuritti recited by a born poetess.
For more information log on to:http://kavinaya.blogspot.com
ALL CREDIT GOES TO MADAM KAVINAYA FOR RENDERING THIS EXCELLENT SONG
GOD BLESS HER AND HER FAMILY
ஆடி வெள்ளிக் கெழமையிலே பாடி உன்னத் துதிக்க வந்தோம்
ஆசையோட பொங்க வச்சு பாசத்தோட படைக்க வந்தோம்
மாவெளக்கு ஏத்தி வச்சோம் மாரியாத்தா மனங் குளிர
மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம் மங்கை உந்தன் மனம் மகிழ
தீராத வெனை யெல்லாம் உன்னக் கண்டா தீருமடி
மாறாத வெனை யெல்லாம் மருண் டோடி மறையுமடி
தேடி வரும் வெனை தெகைச்சு திரும்பி ஓடுமடி
பாடி உன்னச் சரணடைஞ்சா பாவமெல்லாங் கரையுமடி
உன்னடியே கதியின்னு ஓடோடி வந்தோமடி
பொன்னடியே புகலுன்னு பணிஞ்சு நின்னோமடி!
Courtesy: Ms.Kavinaya
புதன், ஜூலை 23, 2008
கண்ணாஉன் முகம் காணவே... கண்ணீரில் தினம் மூழ்கினேன்...
My younger sister an erudite grammarian in Carnatic music offered to sing this song in Raag Sama. She also said that this could as well be sung as a Raga malika combining Raagas sama, mukhari, and similar raagas which are used to express emotions of hope and expections tinged with sorrow and sadness.
The song is composed by our web friend Ms. Kavinaya. More details of this song
are in http://kavinaya.blogspot.com
We owe our courtesies to her.
கண்ணாஉன் முகம் காணவே...
கண்ணீரில் தினம் மூழ்கினேன்...
உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன்
உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன்
பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன்
மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன்
கண்ணன்மனம் கல்லாகுமோ - என்
கண்ணீரும் வீணாகுமோ?
புதன், ஜூலை 16, 2008
செவ்வாய், ஜூலை 15, 2008
மழலை . எழில் அதற்கு .. தோழி ஈடு இணை இல்லைதான்!
கன்னற் சிரிப்பாலே
உள்ளம் கொள்ளை கொள்ளும்
மின்னல் பூவைப் போல்
மனசைக் கவர்ந்து கொள்ளும்
மழலை . எழில் அதற்கு .. தோழி
ஈடு இணை இல்லைதான்! தோழி
ஒன்று கரும்பினடி
திங்கள், ஜூலை 14, 2008
July 2008 Photo for this month .. LEAD KINDLY LIGHT AMIDST THE ENCIRCLING GLOOM
செவ்வாய், ஜூலை 08, 2008
மெலிதாய் ஒரு தென்றல் வந்து
Madam Kavinaya has recited a remakable song in her blog.
By clicking at the title of this post, you may visit her blog.
I have attempted to compose this song in Raag Kanada.
My daughter in law has sung this raag.
For the first 30 seconds my Manasika Guruji Sir Neyveli Santhanagopalakrishnan
gives the dimensions of this raag followed by the violinist. Then follows the
song.
This Raag Kanada belongs to
22 kharaharapriya janya
Arohanam and Avarohanam are:
Aa: S R2 G2 M1 D N2 S
Av: S N2 P M1 G2 M1 R2 S
மெலிதாய் ஒரு தென்றல் வந்து
முடி கலைத்துச் செல்கையிலே
காற்றின் மேல் காதல் கொண்டு
கலைந்து சென்ற தொரு கனவு...
கடற் கரையின் ஓரத்திலே
காத லரின் நேரத்திலே
நினை வலையின் வேகத்திலே
கரை ஒதுங்கிய தொரு கனவு...
வான வில்லின் வர்ணம் கண்டு
விண் வெளியில் ஆசை கொண்டு
தொடு வானம் தொட முயன்று
தொலைந்து விட்ட தொரு கனவு...
பறவை களைப் பார்த்து விட்டு
பறப்ப தற்குப் பயில எண்ணி
சிட்டுக் குருவிச் சிறகினிலே
சிக்கிக் கொண்ட தொரு கனவு...
கனவுகளை எல்லாமே
காணாமல் போக்கிய பின்
கைப்பையின் கட்டுக்குள்
...கசப்பான நிஜம் இப்போது
சனி, ஜூன் 28, 2008
அவள் அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. "
"பேரக்குழந்தைங்களா ! ஓடியாங்க !
இப்ப ரிச்மன்டு அத்தை ஒரு தேவதை கதை
சொன்னாங்கள் இல்லே ! ஒரு பாட்டும் எழுதியிருக்காங்க இல்லே !
அத இப்ப தாத்தா அடாணா ராகத்திலே மெட்டமைச்சு
இருக்காரு. பாடப்போறாரு. கேளுங்க.. "
" தாத்தா ! உனக்கு ரொம்ப வயசாயிடுச்சு தாத்தா !
நீ ஏன் பாட்டு கீட்டுன்னு ரொம்ப சிரமப்படுறே !
நீ மெட்டு மட்டும் போடு.
பாட்டை அந்த ரிச்மேன்டு ஆண்டி யோட
ஃஃப்ரென்டை ப் பாடச்சொல்லு.
முன்னாடி கூட அவங்க பாடினது தான்
நன்னா இருந்துச்சு."
" நான் பாடறது ?"
" அந்தப் பொறுமை பாட்டிக்குத்தான் தாத்தா இருக்கும் !"
CourtesY: http://kavinaya.blogspot.com
வருவாள்
என் தேவதை வருவாள் –
வருவாள் –
என்றேனும் வருவாள்
– தன்
சிறகி லென்னைத் தாங்கிக் கொள்வாள்
"வருவாள்
என் தேவதை வருவாள் –
கண்ணீரைத் துடைத் தவள் எறிவாள்
கண்ணே என் றணைத்துக் கொள்வாள்
அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள்
பிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள்
கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள்
கண மொன்றும் என்னை விலகா திருப்பாள்
அவள் கால் தூசில்என் கவலைகள் மறையும்
அவள் கண் பட்டாலே ஆனந்தம் நிறையும்
உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. "
A big THANK U for Madam Kavinaya for her
very nice song.
NEXT SONG A LULLABY TO VALLI
பேரக்குழந்தங்களா !
ரொம்ப கஷ்டப்பட்டு தாத்தா இந்த
வள்ளித்தாலாட்டு பாட்டை
தோடி ராகத்திலே பாடியிருக்காரு.
நீங்களாவது கேளுங்கடா !
எலே ! காசு ஒன்னும் தரவேண்டாம்டா !
சும்மா கேளுங்கடான்னு சொன்னாகூட
ஆடியன்ஸு இல்லையே
என்னது ? யார் பாடினாங்களா ?
இது யாரோ எப்பவோ பாடினாங்களாம்.
கிராமங்களிலே வள்ளித் தாலாட்டுன்னு
சொல்லிப்புட்டு குழந்தயை தாலாட்டற
பாட்டுன்னு சொல்லி ப்போட்டு இருக்காக.
யாரா ?
நம்ம மேடம் கவி நயா ஆன்டி தான்.
Unnoda paattu Romba Suham Thathaa.
அவங்கதானே நமக்கு எல்லாம்
ஃப்ரென்டு அமெரிக்காவிலே.
ஞாயிறு, ஜூன் 15, 2008
புதன், ஜூன் 11, 2008
ஒரு கல்கண்டு தரவா ?
கண்ணனைப்பாடும் கவியினை
என்ன சொல்லி பாராட்ட ?
ஒரு கல்கண்டு தரவா ?
எனக்குத் தெரிந்த ஒரே வழி
நானே பாடுவதுதான்.
அப்பப்பா ! அம்மம்மா !! என்ன சுகம் ! என்ன சுகம் !
என் அம்மா பாடிக் கேட்கணும் போலத்தோன்றுகிறதே !
ம்...அது அடுத்த ஜன்மத்தில் தான் முடியும்.
PLEASE CLICK AT THE TITLE OF THIS POST TO READ THE LYRIC COMPOSED BY
POETESS Ms.KAVINAYA.
திங்கள், ஜூன் 09, 2008
11th June 2008 is our Second Son-in-law Ganesh birthday. We wish him A VERY HAPPY BIRTHDAY.
KANAKADHARA STOTRAM
We all Pray to Goddess Lakshmi on this happy occassion.
ஞாயிறு, ஜூன் 01, 2008
தூங்குடா பிச்சை ! நீ தூங்கலேன்னா ரிச்மன்ட் ஆன்டி வந்து
புடிச்சுண்டு போயிடுவாங்க..
போ பாட்டி ! நீ பொய் சொல்றே ! ரிச் மன்ட் ஆன்டி பாட்டைத்தான்
இப்ப தாத்தா பாடிட்டு இருக்காங்க ..
thatha voice sahikalle,patti. onnu nee paadu paatti illenna
antha richmond athaiya padachollu
http://www.youtube.com/watch?v=dCtsm9mCg_k
புதன், மே 28, 2008
ஆலேல கிருஷ்ணன்
ஞாயிறு, மே 18, 2008
morning walk around Ceebros Park
A morning walk does wonders really. The perimeter of our ceebros Park is around half a kilometer. I usually do three rounds in the morning and three rounds in the evening, with, of course, my master.
At the end of the brisk walk, my master gives me half a loaf of bread and coffee in the morning. In the evening, she gives me 3 to 5 chapathis and asks me to go again for another couple of rounds.
I don't mind, as
my master always knows better.
CLICK AT THE PHOTO TO GET TO KNOW WHO AM I.
ஞாயிறு, மே 11, 2008
வெள்ளி, ஏப்ரல் 18, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)