JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஆகஸ்ட் 07, 2008

THE SONG RECITED BY MADAM KAVINAYA IN HER BLOG http://ammanpaaatu.blogspot.com was so impressive that I decided to set the tune in Raag bowli. Many Thanks to her permission to set the tune for the same. மாங்காட்டுத் திருத்தலத்தில் காமாக்ஷி என்றபெயர் கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா! பூங்காற்றுபோல நெஞ்சம் தழுவுகின்ற கருணையினால் எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! அக்கினியின் நடுவினிலே முக்கண்ணனை வேண்டி உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா! ஒற்றைவிரல் ஒன்றுமட்டும் ஊசி முனை தாங்கி நிற்க உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா! பற்றனைத்தும் விட்டுவிட்டு உன்னை மட்டும் பற்றிக் கொள்ள பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா! இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்னடிகள் போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா! மூவிரண்டு வாரங்கள் மனமொன்றி வேண்டி நின்றால் மறுக்காமல் அருள்கின்ற அம்மா! நாவினிக்க உன்பெயரை நாள்தோறும் பாடுகின்றேன் நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா! This devotional song is set to Raag Bowli