புதன், அக்டோபர் 01, 2008
மாயவனே தூயவனே மன்னவன் நீ தானே
Courtesy: Sri Ramesh Sadhasivam.
THE SONG IS RECITED BY SRI RAMESH SADHASIVAM . KINDLY CLICK AT THE TITLE OF THIS POST TO LOG ON TO HIS BLOG.
I HAVE ATTEMPTED TO COMPOSE THIS SONG IN RAAG Anandha bhairavi AND AM NOT SURE HOW FAR I HAVE SUCCEEDED HERE. IT IS FOR SINGERS TO SING THIS SONG IN THIS RAAG, AS YOU KNOW, I AM NOT A GOOD SINGER OF ANY STANDARD.
மாயவனே தூயவனே மன்னவன் நீ தானே
பாற்கடலில் தூக்கம் கொண்ட நாயகன் நீ தானே
காலெடுத்து வானளந்த வாமனன் நீ தானே
தூணுடைத்து போர் தொடுத்த சிம்மமும் நீ தானே
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்
ஆயர் குறை போக்கிடவே குன்றெடுத்து நின்றாயே
மக்கள் குறை தீர்த்திடவே மீண்டும் மீண்டும் வந்தாயே
ஆதியிலே மீனாக நீ தான் தோன்றினாய்
ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் ஆகினாய்
மாற்றம் இல்லா மன்னவனே
குற்றம் இல்லா கோமகனே
கீதை தந்த நாயகனே
ராதையவள் காதலனே
காமனும் நீ தானே
ராமனும் நீ தானே
தர்மம் அதை காத்திடவே துயிலெழுந்து வந்தாயே
திரௌபதியை காத்திடவே துகிலெடுத்து தந்தாயே
அகிலங்கள் எல்லாமே நீ தான் ஆக்கினாய்
அகலிகா பெண்ணின் கல் சாபம் போக்கினாய்
சக்தியவள் மூத்தவனே
சக்தியெல்லாம் வாய்த்தவனே
பக்தர் குறை தீர்ப்பவனே
பக்தி நெறி காப்பவனே
அன்பனும் நீ தானே
உயிர் நண்பனும் நீ தானே
OUR GREETINGS AND BLESSINGS TO SRI RAMESH SADASIVAM AND HIS FAMILY MEMBERS AND HIS FRIENDS ON THE EVE OF THIS NAVARATHRI