JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா

Kindly click at the title to log on to the Author of this Song; ஓராறு முகம் கொண்ட வேலா ஓம்காரப் பொருள் சொன்ன பாலா ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ் அடிமைக்கு அருள் செய்ய வாவா! நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப் பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய் சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை விட்டுத் தெறித் தோடச் செய்வாய்! சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை பக்திகொண் டேத்து கின்றேன் குமரா முத்தாக வந்து தித்த உன்னை - என் சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா! மயில் மீது ஏறியே வருவாய் - என் மனதிலே கோவில் கொண் டமர்வாய் பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய் பிறவிப் பயன் தந்து அருள்வாய்!