சனி, ஜூன் 28, 2008
அவள் அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. "
"பேரக்குழந்தைங்களா ! ஓடியாங்க !
இப்ப ரிச்மன்டு அத்தை ஒரு தேவதை கதை
சொன்னாங்கள் இல்லே ! ஒரு பாட்டும் எழுதியிருக்காங்க இல்லே !
அத இப்ப தாத்தா அடாணா ராகத்திலே மெட்டமைச்சு
இருக்காரு. பாடப்போறாரு. கேளுங்க.. "
" தாத்தா ! உனக்கு ரொம்ப வயசாயிடுச்சு தாத்தா !
நீ ஏன் பாட்டு கீட்டுன்னு ரொம்ப சிரமப்படுறே !
நீ மெட்டு மட்டும் போடு.
பாட்டை அந்த ரிச்மேன்டு ஆண்டி யோட
ஃஃப்ரென்டை ப் பாடச்சொல்லு.
முன்னாடி கூட அவங்க பாடினது தான்
நன்னா இருந்துச்சு."
" நான் பாடறது ?"
" அந்தப் பொறுமை பாட்டிக்குத்தான் தாத்தா இருக்கும் !"
CourtesY: http://kavinaya.blogspot.com
வருவாள்
என் தேவதை வருவாள் –
வருவாள் –
என்றேனும் வருவாள்
– தன்
சிறகி லென்னைத் தாங்கிக் கொள்வாள்
"வருவாள்
என் தேவதை வருவாள் –
கண்ணீரைத் துடைத் தவள் எறிவாள்
கண்ணே என் றணைத்துக் கொள்வாள்
அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள்
பிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள்
கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள்
கண மொன்றும் என்னை விலகா திருப்பாள்
அவள் கால் தூசில்என் கவலைகள் மறையும்
அவள் கண் பட்டாலே ஆனந்தம் நிறையும்
உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே. "
A big THANK U for Madam Kavinaya for her
very nice song.
NEXT SONG A LULLABY TO VALLI
பேரக்குழந்தங்களா !
ரொம்ப கஷ்டப்பட்டு தாத்தா இந்த
வள்ளித்தாலாட்டு பாட்டை
தோடி ராகத்திலே பாடியிருக்காரு.
நீங்களாவது கேளுங்கடா !
எலே ! காசு ஒன்னும் தரவேண்டாம்டா !
சும்மா கேளுங்கடான்னு சொன்னாகூட
ஆடியன்ஸு இல்லையே
என்னது ? யார் பாடினாங்களா ?
இது யாரோ எப்பவோ பாடினாங்களாம்.
கிராமங்களிலே வள்ளித் தாலாட்டுன்னு
சொல்லிப்புட்டு குழந்தயை தாலாட்டற
பாட்டுன்னு சொல்லி ப்போட்டு இருக்காக.
யாரா ?
நம்ம மேடம் கவி நயா ஆன்டி தான்.
Unnoda paattu Romba Suham Thathaa.
அவங்கதானே நமக்கு எல்லாம்
ஃப்ரென்டு அமெரிக்காவிலே.