JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், செப்டம்பர் 25, 2008

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ ?

Waiting eternally, the poetess appeals to the wind to carry her message to Goddess Thiruverkadu Amman . One more feather in the cap of Madam Kavinaya. Please click at the title to move on to her blog. But before that, listen to the song, which is set a mix of raag Bhimplas and the raag Jonpuri . (puritans may kindly forgive !!) காடு மலை மேடெல்லாமே காலில்லாமலே சுற்றும் காற்றே காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? காட்டுக்குள்ளே செடியாகி தழைத்து வளர்ந்திருப்பாள் கொடியாகி மரத்தின் இடையை சுற்றிக் கட்டிக்கொண் டிருப்பாள் சின்னச் சிட்டுக் குருவியாகி கூட்டுக்குள்ளே ஒளிந்திருப்பாள் காட்டரசன் சிங்கமாகி கர்ஜித்து மகிழ்ந்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? காட்டுக்குள்ளே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? மலைமீது மரமாகி வானம் தொட வளர்ந்திருப்பாள் அசையாத பாறையாகி படுத்து ஓய் வெடுத்திருப்பாள் பாறையிலே பசுந்தளிராய் துளிர்த்து சிரித்திருப்பாள் சின்னக் குற்றுப் புதராகி குனிந்து நிலம் பார்த்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? மலைமேலே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? கடல்மீது அலையாகி துள்ளிக் குதித்திருப்பாள் நீர் உவர்க்க உப்பாகி காதலன்போல் கலந்திருப்பாள் சின்னச் சின்ன மீனாகி நீந்திக் களித்திருப்பாள் கரையினிலே மணலாகி பார்த்து ரசித்திருப்பாள் - காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ? கடல்பக்கம் அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? காடு மலை மேடெல்லாமே காலில்லாமலே சுற்றும் காற்றே காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ? --கவிநயா