JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

நாளென் செயும்வினை தானென்

  • நாளென் செயும்வினை தானென் செயுமெனை 
  • நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
  • தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ்
  • சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
நமக்கு இன்னல்கள் தோன்றும் காலத்தெல்லாம் ஜோதிடத்தை நாடி, ஒன்பது கோள்கள் அவற்றால் நமக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி அறிய முற்படுவோம்.
நமக்கு கந்தன் அருள் இருப்பின் அந்த ஆறுமுகனின் விழி நம் வழியிலே வீழ்வின் நம் கோள்களைப் பற்றி என் கவலை யுர வேண்டும் ?
அந்த ஷண்முகன், கந்தன், குகன், ஆறுமுகன், வேலன் நம்மை கோள்களிலிருந்து என்றுமே காப்பான். இது திண்ணம்.

கந்தர் அலங்காரத்தில் இது முப்பத்தி எட்டாவது பாடல்.   அருணகிரிநாதர் அருளிச் செய்தது.
தினமும் பாடி முருகனின் அருள் பெறுக.