JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜூலை 02, 2009

கிழங்களுக்கு இந்த வயசுலே இப்படி ஒரு ஆசை

அம்மா இந்த வயசிலே பாடமுடியாது அப்படின்னு சொன்னப்போ நான் சொன்னேன்: நானே பாடறேன். உன்னால் முடியும். என்று சொன்னேன். எங்களோட பார்க்காத தமிழ்வலை உலக சினேகிதி அவர்கள் இயற்றிய கவிதை இன்றைக்கு கிடைத்தபோது, அதை நான் மத்யமாவதியிலும் அம்மாவை சாரங்கா ராகத்திலும் பாட முயற்சி செய்தோம். வயசு இரண்டு பேருக்கும் 67 முடிஞ்சு, 68 ஆகிவிட்டது. ஏதோ கர்னாடக சங்கீதம் அப்படி இப்படின்னு, பொழுதைக் கழிச்சிண்டு போகிறோம். அதனாலே, கிழங்களுக்கு இந்த வயசுலே என்ன இப்படி ஒரு ஆசை அப்படின்னு யாரும் கோபப் படவேண்டாம். ஸ்ருதி சரியாக இல்லை. தெரியும். அங்கங்கே ராகம் பிசிரு அடிக்கிறது. அதுவும் தெரியும். இருந்தாலும் பாடறோம். யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், எங்க குழந்தைகள் கேட்கும். அது தெரியும். அப்பறம், யாருக்கு பொறுமை இருக்கோ இல்லையோ எங்க ஃப்ரன்டு கவினயா மேடத்துக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. எங்க பாட்டுக்களை விடாமே கேட்கறது மட்டுமல்ல, நல்லா இருக்குன்னு வேற சொல்லி விடறாங்க. கவிதை கவி நயா மேடம் எழுதியது. Please copy and paste this URL if the above does not work. http://www.youtube.com/watch?v=tYizov--ZNI