MADAM KAVINYA SINGS AGAIN. THIS TIME THE ARDENT DEVOTEE OF GODDESS EARNS FOR HER IMMEDIATE PRESENCE BEFORE HER. SHE DOES NOT KNOW HOW AND WHEN WOULD SHE COME BEFORE HER !
- ஆத்தான்னு கூப்பிட்டாக்க
- ஆசையோட வந்திடுவா
- அம்மான்னு கூப்பிட்டாக்க
- அன்போட அருள்புரிவா
- ஆத்திரமாப் பேசினாலும்
- ஆதரவாக் கேட்டுக்குவா
- அழுதழுது கெஞ்சினாக்க
- ஆறுதலத் தந்திடுவா
- ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
- ஆனந்தமா வருவாயேன்னு
- ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
- ஆத்தா ஒன்னக் காணலியே
- தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
- தெய்வமேநீ வருவாயேன்னு
- தேடித் தவிச்சிருந்தேன்
- தாயே ஒன்னக் காணலியே
- கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
- ஒத்தத்தாயி நீதானேடி
- ஓடிவந்து என்னப்பாக்க
- ஒருநொடியும் இல்லையோடி?


0 comments:
Post a Comment