Tuesday, March 17, 2009

நாந் துதிக்க வேணும்!

ஒம் மேல தெனம் நூறு பாட்டெழுத வேணும் ஓயாம ஒம் புகழ நாம் பாட வேணும் எம் பாட்டக் கேட்டதும் நீ ஓடி வர வேணும் மகுடி கேட்ட நாகம் போல மயங்கி வர வேணும் கண் காணும் காட்சியெல்லாம் நீயாக வேணும் செவி கேக்கும் ஒலியிலெல்லாம் ஒங்கொரலே வேணும் ஒன் நெனப்பே நொடிதோறும் எம் மனசில் வேணும் ஒன்னடியே கதி யின்னு நாந் துதிக்க வேணும்! --கவிநயா Please click at the title to log on to Madam Kavinaya's blog.

0 comments: