வெள்ளி, செப்டம்பர் 28, 2007
Laugh ..laugh and laugh ..
width="350" height="275">
Sirithu Vazha Vendum...Pirar Sirikka Vazhnthidaathe...
Live with a laugh always..but never live to be laughed at by others..
(Tamil Poet Kannadasan.
சிரித்து வாழ்ந்தால் கோடி நன்மை!
- எஸ்.சரவணன்
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.
அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.
சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.
சிரிப்பின் பலன்கள்
* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.
* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.
* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.
* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.
* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.
* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.
நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.
(மூலம் - வெப்துனியா)