JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஏப்ரல் 28, 2007

What is Called Typical THANJAVUR MEALS ?

தஞ்சாவூர் தலை வாழை இலை போட்டு சாப்பாடு என்று சொன்னால் போதும் . மெனு எப்படி இருக்கும்னு சொல்லணும்னு தேவையே இல்லை. விருந்தோம்பலுக்கு பேர் போன இடம் தஞ்சாவூர் என்று சொல்லத்தேவைஇல்லை. வீட்டுக்கு வந்தவரை வாங்கோ வாங்கோ என்று முக மலர அழைத்து அமரச்செய்து நல்ல சுத்தமான மண் பானை குளிர் நீர் கொடுத்தபின்பு தான், பேசவே துவங்குவார்கள். ந‌ம‌து வீட்டுக்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ளை உப‌ச‌ரிப்ப‌து சிவ‌பெருமானை வ‌ண‌ங்குவ‌த‌ற்கு ஒப்பாகும் இய‌ல்புடைய‌ மூவ‌ர் யார் ? ப்ரும்ம‌சாரி (bachelor) (கல்வி க‌ற்ப‌தே நோக்காக‌க் கொண்டு, ம‌ற்ற‌ யாவ‌ற்றையும் மறந்து, ஆசிரிய‌ன்சொல்ப‌டி ஒழுக்க‌முள்ள‌ வாழ்க்கை ந‌ட‌த்துப‌வ‌ன்..) இர‌ண்டாவ‌து, வான‌ப்ர‌ஸ்த‌ன் (அதாவ‌து, இல்ல‌ற‌ம் நீத்து, துற‌வ‌ற‌ம் போக‌ காத்திருப்ப‌வ‌ன், சொல்ல‌ப்போனால், வாழ்க்கைத‌னை, தாம‌ரை இலை த‌ண்ணீர் போன்று , சாட்சி போன்று உள்ள‌வ‌ன். ) மூன்றாவ‌து துற‌வி,(இக்கால‌த்தில் இவ‌ர்க‌ளைப் பார்ப்ப‌து அரிது). இல்வாழ்வான் என்பான் இய‌ல்புடைய‌ மூவ‌ர்க்கும் ந‌ல்லாற்றின் நின்ற‌ துணை...வ‌ள்ளுவ‌ர். தஞ்சாவூர் வாழை இலை போட்டு சாப்பாடு அதில் என்ன அப்படி விசேஷம் என்றால், அதை சாப்பிட்டவர்களுக்குத்தான் தெரியும். மெனு என்ன என்று சொல்லி விடுவோம். பச்சடி...தக்காளி காரட் (பச்ச மிளகாய் பெருங்காயப்பவுடர், கடுகு தாளித்தது.) ஆப்பிள் பச்சடி. கோசும‌ல்லி..பாசிப்ப‌ருப்பு. க‌ட‌லைப்ப‌ருப்பு அவியல்...(பீன்ஸ், முருங்கை, அவ‌ரை, ப‌ட்டாணி, சேனை, கார‌ட்) உருளைக்கிழ‌ங்கு கார‌க்க‌றி. பீன்ஸ், முட்டைகோஸ், உசிலி. கலத்துக்கு பருப்பு, நெய்.சாதம். வெங்காய சாம்பார். மோர்க்குழம்பு (வெண்டைக்காய் அல்லது சேப்பங்கிழஙகு அல்லது பூசணி) வெத்தக்குழம்பு,(சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி) எலுமிச்சை ர‌ச‌ம், த‌க்காளி. அப்பளம் வடகம். நேந்திரங்காய் வருவல் போளி (தேங்காய் வெல்லம், ஏலக்காய்,கற்பூரம் நெய் பூரணம் செய்து மைதாமாவு (இதயம் நல்லெண்ணை கொஞ்சம் கலந்து.) ஆமை வடை ஜாங்கிரி க‌ட‌லைப்பருப்பு, பாசிப்ப‌ருப்பு பாய‌ச‌ம். தேஙகாய் சாதம். எலுமிச்சை பழ சாதம். புளியோத‌ரை. க‌ல‌ந்த‌ சாத‌ம். ஆவக்காய் ஊறுகாய். த‌யிர் உப்பு க‌ல‌ந்த‌ மோர். வெற்றிலை பாக்கு தாம்பூல‌ம், ர‌சிக்லால் பாக்கு, பீடா. வாழைப்ப‌ழ‌ம்.