என்னது.. ஒன்னுமே தெரியாது மாதிரி கேட்டாரது..
பெருமாள் வந்துண்டு இருக்கார் பாருங்கோ.
திருப்பாவை 20 வது பாசுரம் கேட்கறதே !!
எங்கே ?
காது மெஷின் வச்சுக்கோங்கொ அப்படின்னு நான் கரடியா கத்தியாச்சு,
கேட்டாதானே....
என்ன கேட்டாதானே ??
நான் உன்னை காப்பி கேட்கவில்லையே..
சிவா சிவா.. சாரி,
நாராயணா
பெருமாள் இன்னிக்கு வீதி ஊர்வலம். தாயார் என்னமா ஜ்வெல்லிகரா பாருங்கோ.
என்ன அட்டிகை அது !! அத்தனை பிரகாசமா !!
நான் எப்பவோ உங்களை ஒரு அட்டிகை கேட்டாச்சு. தாயார் தான் உங்களுக்கு புத்தி சொல்லி வாங்கிக்கொடுக்க சொல்லணும்.
அடியே !! தாயாரைப் பார்த்து சேவிச்சுக்கோ .
பெருமாள் ஊர்வலத்தோட வேளுக்குடி கிருஷ்ணனும் வரார்.
கண்ணதாசன் உரை இன்னிக்கு படிக்கட்டுமா ?
அந்த அட்டிகையை நீங்க பார்த்தேளோ! அதே மாதிரி ஆண்டிகிவிடி அட்டிகை பிரின்ஸ் ஜிவேல்லறி லே பார்த்தோமே..நினைவு இருக்கா ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி....
பார்த்தோம். அன்னிக்கு 75 ஆயிரம் சொன்னாங்க. இன்னிக்கு கேட்டா 7 லட்சத்து 50 ஆயிரமாம்.
இன்னிக்கு கடை உண்டா...!!
ஏண்டி !! தாயார் காலைப் பிடிச்சுண்டு கெஞ்சி அந்த பெருமாள் காலிலே என்னை கொண்டு போய் விட்டுடுங்கோ அப்படின்னு சொல்வே ன்னு நினைச்சா,
நீ தாயார் கழுத்தை பார்த்துட்டு, அதே மாதிரி எனக்கு ஒரு அட்டிகை வாங்கித் தாங்கோ அப்படிங்கரையே...
பெருமாள் உன்னை பார்த்து என்ன நினைச்சுபார் ! நீ நினைச்சு பார் !!
சரி. சரி.. எதுன்னாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுடுவேளே !! அந்த பெருமாளே பாருங்கோ, தாயார் சொற்படி தான் கேட்கறார்.
கண்ணதாசன் வசன உரை படிக்கறேன். கேள்.
ப்ரவசனம் முடியும் நேரம் மூக்கு என்னவோ புதுசா வாசனை வர்றதே அப்படின்னு சொல்றது...
இன்னிக்கு நைவேத்யம் புளி அவல் , உசிலி அவல் , தயிர் அவல் .
எதுக்கு மூணு ஐடம் ?
சொல்றேன். அதுக்கு முன்னாடி நீங்க மட்டும் ஷைலஜா மேடம் வலைக்குச் சென்று இன்றைய பாசுரத்துக்கு என்ன விளக்கம் என்று தெரிந்து கொண்டு வாருங்கள்.
அதுக்குள்ளே இதெல்லாம் தீர்ந்து போயிடுத்துன்னா ?
எல்லாத்துலேயும் ஒரு கரண்டி தான். உங்களுக்கு இருக்கறது என்னிக்குமே கிடைக்கும். பெருமாள் மேலே நம்பிக்கை இருக்கா இல்லையா..
பெருமாள் மேல இருக்கு.
உசிலி தான் கன ஜோர்.
*******************************************************************************