என்ன
என்ன ஒன்னுமே தெரியாதமாதிரி மூஞ்சியை வச்சுண்டு இருக்கீக ,,
உங்களுக்குத் .தெரியாதா....கோதை இந்த வழியா தான் க்ருஷ்ணனை பார்க்க போரா அப்படின்னு பேச்சு அடிபடறது. நேத்திக்கு ராத்திரி நாலு மாட வீதியிலும் ஒரே கொண்டாட்டம்.
.ஓஹோ. நேத்தி ராத்திரி அம்மா.. தூக்கம் போச்சுதே அம்மா. அந்த கேசா !!
நான் ஜனவரி 1 ம் தேதி. அதுக்காக அப்படின்னு நினைச்சேன்.
நீங்க மனசுலே என்ன வேணா நினைப்பேள் ,
ஆனா,
என்ன ஆனா , ஈ நா ?
நீங்க எல்லோரும் திருவெல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலுக்கு முன்னாடி போய் பார்க்கணும்.
அங்கே என்ன அதிசயம்.
அதிசயம் தான். கோவில் பக்கத்துலே முன்னாடி ஒரு வீட்டு முன்னாடி ஒரு பொண்ணு கோலம் போட்டுண்டு இருக்கு...
அதிலே என்ன அதிசயம் ?
அத பார்க்கறதுக்கு கோதையே வந்து நின்னுட்டு இருக்கா. என்னோட கூட வாங்கோ. அங்கே போய் பார்க்கலாம்.
நீங்களே பாருங்கோ.
ஆஹா. அந்த யுகத்திலே ஆண்டாளாப்பிறந்த கோதை நாச்சியார் பெருமானைக் காண வந்து வாசல்லே நிற்கிற போல அல்லவா காட்சி இருக்கிறது !!
அன்னிக்கு பிரவசனத்திலே வேளுக்குடி சொன்னமாதிரி சாக்ஷாத் கோதை நாச்சியாரே வந்து இருக்கிறா போல அல்லவா இருக்கிறது.
தெய்வம் மனுஷ்ய ரூபேண...
சாக்ஷாத் மகா லக்ஷ்மி கடாக்ஷம் இன்னிக்கு 18 வது பாசுரம் இல்லையா.
சில சமயம் நம்ம எதிர்பாராத நிகழ்வுகள் நம்ம மனசுக்கு ஒரு மகிழ்ச்சியும்
சுகத்தையும் தரது இல்லையா !!
என்ன அப்படி நடந்தது !!
நேத்திக்கு மேடம் துளசி கோபால் தம்பதிகள் எங்க வீட்டுக்கு வந்தது சாக்ஷாத் அந்த பெருமாளும் தாயாரும் வந்தாபோல்
புத்தாண்டு தினம் வந்து எங்களுக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட் கொடுக்கறா !!
நேத்திக்கு எடுத்த படம் மேடம் துளசி அனுப்புவாங்க.அதுவரைக்கும் இத பார்க்கணும் |
யார் யாருக்கு எப்படி எப்படி வர்றார் அப்படி எல்லாம் சொல்ல முடியாது.
அது அவர்கள் அவர்கள் பாக்கியம்.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!
மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள் வாழி திருநாமம்!
சரி.
டி.வி.டி. போடுங்கோ. கேட்கலாம்.
இப்ப கண்ணதாசன் இந்த பாசுரத்துக்கு எழுதிய உரை பார்க்கப்போறோம்.
சுப்பு தாத்தா பாடறார்.
உயிரைன்னா எடுக்கிறார்.
மூச் ! சும்மா இருங்க.. உங்களுக்கு பிரசாதம் வேணுமா வேண்டாமா.
வேணும்.
அப்ப பொறுமையா சுப்பு தாத்தா பாடறதை கேட்கணும்.
சரி.
வேளுக்குடி சார் இன்னிக்கு வந்தாச்சு.
எல்லோரும் அமைதியா ப்ரவசனம் கேட்கணும்.
நைவேத்யம் என்ன அப்படின்னு சொல்லுங்கோ ..முதல்லே.
சுவாமி, பகவத் சந்நிதானம். அங்கே
ஸ்ரவணம் பர்ஸ்ட். அதுவரைக்கும் fast.
.
காலங்கார்த்தாலே இன்னிக்கு அகோர பசி.
அங்க நந்தகோபாலனும் வாசற்கதவை திறக்கல்ல.
இங்கன வேளுக்குடியும் பிரசங்கத்தை முடிக்கல்ல.
அதுக்கென்ன ! நிதானமா கேளும்.என்ன அழகா சொல்றார் !
ஆஹா. ஆஹா.
என்ன ஆஹா
வண்டி வண்டியா , அண்டாக்கள் வர்றதே !!
வாசனை புடிச்சாலே சுவர்க்க சம்பந்தம் இருக்கு.
முதல்லே ப்ரவசனம் முடியட்டும்.
எல்லாரும் திவ்ய நாமம் சொல்லுங்கோ.
..கோவிந்தா. .கோவிந்தா.
கோவிந்தா..
இங்கே யே ப்ரவசனம் கேட்டுண்டு இருந்தா அன்னம் கோவிந்தா ஆயிடுத்து அப்படின்னு அங்கே சொல்லிட்டா...
எல்லாருக்கும் கிடைக்கும். நீங்க பேசாம இருங்கோ.
www.asvatham.blogspot.com thank u madam. |
diabetes டயாபெடிஸ் காரா மட்டும் தனியா வாங்கோ. அங்க ஒரு குரல்.
அவர்களுக்கு என்ன ?
இத்தனை sweet சக்கரை அவர்களுக்கு ஒத்துக்காது. அதுனாலே அவர்களுக்கு நெய் கார கொழுக்கட்டை.. இட்லி ,மிளகாய் போடி, கதம்ப சாம்பார். கொத்தமல்லி சட்னி.
சார்
எனக்கு டயாபெடிஸ் கொஞ்சம் தான்.
அதுனாலே க்ஷீரன்னம் , கொழுக்கட்டை இரண்டும் உண்டு
அப்படின்னு நீங்க பெரிய மனசு பண்ணி ரெகமெண்ட் செய்யணும்.
ஓகே. ஆதார் கார்டு இருக்கா ?
ஆதார் கார்டா...இதுக்கு எதுக்கு ?
முதல்லே உமக்கு சுகர் இருக்கா அப்படின்னு செக் பண்ணின பிறகு தான்
மத்த தெல்லாம். லபராடறி லே ஆதார் கார்டு கேட்பா.
உமக்கு, சொல்லக்கூடாது. எனக்கு சக்கரை இருக்கோ இல்லையோ .. உமக்கு கொலஸ்ட்ரால் நிறையாவே இருக்கு.
கோவிந்தா...கோவிந்தா.
எல்லாரும் தீபாராதனை பாருங்கோ.
கோவிந்தா.கோவிந்தா.
சாற்று முறை வேதம். ஹெச்.ஹெச். அழகிய சிங்கர் ஸ்வாமிகள் முன்னிலையில்