இன்னிக்கு என்ன பாசுரம்?
சேமியா பாயசம்.
நான் பாசுரத்தைக் கேட்டால், நீங்க பாயசத்தை கொடு என்று சொல்ரீக..
கவிதா கிருஷ்ணமூர்த்தி அவங்க ராம் பஜன் கேளு.
நம்ம இங்கே கண்ணனை கிருஷ்ணனை மாதவனை கோவிந்தனை
மதுசூதனனை பாடத்தானே திருப்பாவை பாடறோம். இங்கே ராம பஜனும் உண்டோ/
அசடு. ராமன் கிருஷ்ணன் என்பதெல்லாமே விஷ்ணுவோட அவதாரம்.
அந்த அந்த யுகத்துக்கு தேவையான சங்கதியை எடுத்து சொல்வதற்கு மக்களை நல வழியில் நடத்துவதற்கு அந்த வேங்கடவன் அனந்தன் ஆகிய கோவிந்தன் எடுத்த அவதாரங்கள்.
முந்தைய ஒரு பாசுரத்திலே இராம அவதார நிகழ்வு பார்த்தோம் இல்லையா.
ஆமாம்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி குரலே அப்படியே உடல் சிலிர்க்குது இல்லே !!
இதுவும் ஒரு தெய்வீக குரல். நம்ம எல்லோருக்குமே உள் இருந்து ஒரு குரல் ஒலிக்குதுல்லே.. அது போல .. அது தான் தெய்வக் குரல். அந்த குரலை கேட்பதற்கு அதன் படி நடப்பதற்கு நாம் மனசை பக்குவப்படுத்திவிட்டால், நாம் எல்லாமே அந்த கோவிந்தனின் அடியார்கள் தான்.
சரி, பிரவசனம் போதும். பாட்டை போடுங்க.
அவங்க குரல் கேட்டாலே பாயசம் சாப்பிட்ட மாதிரி தான் ஒரு
பீல் இருக்குது.
இன்றைய பாசுரமே பாயசம் தான்.
என்ன அப்படி ?
கேட்டுப்பார். சுவைத்துப்பார். உண்டு பார்.
இது மாதிரி சொல்வது சம்பிரதாயம். வைஷ்ணவ கோவில்களில் இது போல சொல்வார்கள்.
எம்.எல்.வி. பாடுகிறார். கேளுங்கள்.
சபா விலே இது மாதிரி பாடுவார்கள்.
திருப்பாவை அத்தனை 30 பாசுரங்களையும் எந்த ராகத்திலே வேணுமானாலும் பாடலாம். ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஒரு பாவம் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் பாடுவது சிறந்தது.
புரியுது. ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒரு டேஸ்ட் . இடத்திற்கு தகுந்தாற்போல இருக்கணும்.
இல்லையா ..
ஆமாம்.
இப்ப கவியரசர் கண்ணதாசன் உரை என்ன என்று பார்ப்போம்.
இன்றைக்கு என்ன நெய்வேத்யம் ?
பாயசம். கேரளா சேமியா பாயசம்.
neyvedehyam semiya payasam kerala style.
அது என்ன கேரளா ஸ்டைல் சேமியா பாயசம்.
அது கீதா மேடம் ஒருவருக்குத்தான் இந்த ரகசியம் தெரியும்.
+Geetha Sambasivam
+Balu Sriram
+kg gouthaman
+Dindigul Dhanabalan
ஒரு வேளை கேசரி பவுடர் கொஞ்சம் கூட போடுவாங்க போல இருக்குது.
கலரா இருக்குது.
sukamo sukam.
சுகமோ சுகம்.
இந்த பாயசம் ஒரு சங்கதி சொல்லுது.
என்ன ?
இந்த பாயசம் போல உலகத்தில் உள்ள எல்லோரது
எதிர்காலம் தித்திக்க அந்த கோவிந்தனை பிரார்த்திப்போம்.
கோவிந்தா கோவிந்தா.
என்னது முனுமுனுக்கிரீக. மனசுக்குள்ளே கோவிந்தன் கிட்டே ஒரு தனி வேண்டுகோளா ?
ஆமாம்.
என்ன ?
கோவிந்தா, சூப்பர் சிங்கர் இன் அப்படிங்கற வலைக்கு போயி, சோனியாவுக்கு ஒரு வோட் போடு அப்படின்னு பிரார்த்திச்சுக்கிட்டேன்.