JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், ஜனவரி 13, 2014

பாடு பரமனைத் துதி. பின்னே சாப்பாடு.

மார்கழி மாதம் இன்றுடன் முடிகிறது.
திருப்பாவை திருவிழா இன்று தான் கடைசி.
இன்று மட்டும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்கள் .
தோரணங்கள் வீதிகள் முழுவதும் பரிணமிக்க,
அரங்கன் வருகிறான். அவனை பணிவோம்.

ஆனா, எங்க அம்மாவை காணோம்  எங்கே போயிருக்காங்க.

உனக்குத் தெரியாதா !!

கோவில் வாசல் தெரு முழுக்க கோலம் போடறதுக்கு அம்மா தான் இன் சார்ஜ்.

இன்னிக்கு தேர் இல்ல. அதனால ஊர் கூடி தேர் இழுத்து
எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தானும் சாப்பிட்டு விட்டு தான்
வருவாங்க.

வா நாமும் சாப்பிட போவோம்.

முதல் லே பாடு  பரமனைத் துதி.
பின்னே சாப்பாடு.

ஒரு
முதலிலே பாசுரம் 29 30 இரண்டையும்  பாடுவோம்.
பிறகு பெருமாளை துதிப்போம்.
பிறகு
இருக்கவே இருக்கு
சாப்பாடு.
ஈரேழு பிறவிக்கும் அவன் தானே நமக்குத் துணை.
அவன் அருள் இருக்கையிலே
அவனியிலே எதற்கு கவலை

pasuram 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.






pasuram 30
திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
உரைக்கு நன்றி. https://www.facebook.com/kumarakoddam.gnanavairavar.aalayam/posts/315644138553778


pasuram 30

இன்றுடன் திருப்பாவை ஆண்டாள் பாசுரங்கள் முடிவு அடைகின்றன.

எங்களுடன் கூடி கோதை நாச்சியாரின் பக்தி பெருவெள்ளத்தில் நீந்திய
அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி.

அனைவரும் கூடி ஆரத்தி எடுத்து மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்.

கோதை கல்யாணம் நிறைவு பெறுகிறது.

மங்களம் பாடுபவர் பெயரும் கோதை.


mangalam paadi makizhnthiduvom




வாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு போகலாம்.



இன்று போகி பண்டிகை.
நாளை பொங்கல் திருவிழா.


எல்லோருக்கும் எங்கள்
சக்கரை பொங்கல் வாழ்த்துக்கள்.