JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜனவரி 10, 2014

மாலே மணிவண்ணா !! இன்னிக்கு மோஹினி ஆட்டமாமே !!

www.mykolam.blogspot.com
மோதகமா ? இல்லை மோஹினி ஆட்டமா ?

இரண்டும் இல்ல. இன்னிக்கு மாலே மணி வண்ணா ?

அது என்ன மாலே !  அந்த காலத்துலே யே மால் எல்லாம் இருந்ததா ?

மால் என்றால் திருமால்.

அப்பறம் என்ன மோஹினி ஆட்டம். ! அவதாரம் அப்படின்னு சொல்லணும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் தான் மோஹினி அவதாரம்.

அது தனி. இன்னிக்கு நைவேத்யம் ஆகும்போதே எல்லாரும்
கிருஷ்ண கானத்திலே லயிச்ச மோகினி ஆட்டம் தாஸ்ய பாவம் பார்க்கப்போறோம். கூடவே மோதகம் நைவேத்யம்.

பலே !! பலே !!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதில் பங்கு ஏற்கின்றனர்.
மோதகம் சாப்பிடுவது கூட நம்ம மட்டும் போதாதா ?



எம்.எல். வி.அம்மா பாடுகிற பாடகி   ஒருவர் கூட இன்றைய காலத்தில் கிடைக்கவில்லையே என்று வருந்தும் படியாக  இருக்கிறது.

இந்த கம்பீரம் குரலில் இன்றைய பாடகிகளில் யாருக்கு இருக்கிறது ?
விஜய் டி.வி. லே போகஸ் வேற ரூட்டிலே இருக்குமோ ? புரியல்லே !!





வேளுக்குடி
கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம்



கண்ணதாசன் அவர்கள் பாசுரத்திற்கான தெளிவுரை இங்கே வழங்குகிறார்.

]
இன்னிக்கு நைவேத்யம் பகவத் பிரசாதம் மோதகம்.
கொழுக்கட்டை.
வெஜிடபிள் கொழுக்கட்டை.

mohini aattam thasya bhava










***************************************************************************************************************************************************************************************************************************************




வியாழன், ஜனவரி 09, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

வாசலிலே பெருமாள் வரார்.
வரவா என்று ஒரு ஓசை.
என்ன என்று உன்னிப்பா கேட்டேன்.
ரவா தோசை செய்ய வந்திருப்பவர்
வ ரவா என்று கேட்டு இருக்கிறார்.

#####################################################################


பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

என்று துவங்கும் பதிகத்தை தனது வலையில் எனது நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் அழகுறப் பதித்து இருப்பதை யாம் காண முடிகிறது.

அதை நீங்கள் கீழே காண்கிறீர்கள். சைவமும் வைணவமும் ஒருங்கே இணைந்து வலையத்தில் வளைய வரும் வலைப்பதிவு இதுவே. இங்கே சென்று வாருங்கள். 
சிலருக்கு வானத்தில் ஒன்றல்ல, இரு கதிவரன்கள் காட்சி அளித்துள்ளனர். வானிலே இரண்டு ஆதித்யர்கள் பிரகாசமாகி இருப்பது, எனக்கு த்வைதமும் அத்வைதமும் காட்சி அளித்ததோ என்று நினைத்தேன்.
இரண்டு அல்ல, ஒன்று தான்.
ஒன்று உண்மை. அடுத்தது பிரமை.
அவன் இருக்கிறான் என்பது உள்ளே பகலவன் காட்டிய பிரகாசம்.

அவன் அருளாலே அவன் தாள் போற்றி.எனச்சொல்லுவது தேவாரம்.

மேற்கொண்டு திருப்பாவை பார்ப்போம்.





வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கவனித்து பார்க்கவேண்டும்.



கவிஞ்ர் கண்ணதாசன் தரும் உரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கிறது.

ஒரு மாறுதலுக்கு மூவாயிரப்படி வியாக்கியானம் செய்த பரமகாருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்செய்த புத்தகத்தில் இருந்து படிப்போமா என்று நினைத்தேன்.

அந்த உரைக்கு  ஒரு வியாக்யானம் சொல்ல எனது விசிஷ்டாத்வைத நண்பர் திரு சக்ரபாணி அய்யங்கார் அவர்களால் தான் இயலும். அவரோ  அட்லாண்டாவில் இருக்கிறார்.
+chakrapany sourirajan
அவர் பாவம் மைனஸ் ஆறு டிகிரி குளிரில் தவிக்கிறார்.
நான் இந்த உரைக்கு சரியான பொருள்  புரியவில்லையே என்று தவிக்கிறேன். அவர் வந்து சொல்வார். அதை அடுத்த வருஷம் தருகிறேன்./
பெருமாள் அனுக்ரஹம் செய்தால்.


அதை இன்னும் நான் சற்று படித்து வெளியிடுகிறேன்.
ஆண்டாள் கல்யாணம் ஒரு அற்புத நிகழ்ச்சி இன்னிக்கு.

மிகவும் நல்லா இருக்கு.

கடைசி வரைக்கும் பார்த்துட்டு பிறகு
ப்ரேக் பாஸ்ட் சாப்பிட செல்லவும்.







இன்னிக்கு இன்ஸ்டன்ட் தோசா.
நெய் ரோஸ்ட்  .மாவு தோசை ரோஸ்ட்.
+Geetha Sambasivam
கீதா  சாம்பசிவம் வலைலே தோசை வேனுமா அப்படின்னு கேட்டு .இருக்காங்க. அங்கென போனா எப்படி பண்றது அப்படின்னு  மட்டும் தான் சொல்லி  இருக்கிறது.அப்ப இங்கே கோதுமை தோசை கிடைக்காதா ...என்று
சுப்பு தாத்தா கேட்டார்.

இது ஒன்னும் ஹோட்டல் இல்ல. இது கேடரிங் ஸ்கூல். இங்கே கற்று கொடுப்போம். எப்படி தோசை பண்றது ? அதை தெரிஞ்சுண்டு நீங்க உங்க வீட்டிலே போய் செய்து  சாப்பிடனும். அப்படின்னு சொல்றாக.

இது நமக்கு சரிப்பட்டு வராது அப்படின்னு ச்ருதிஸ் கிச்சன் போனோம்.
அங்கே வாங்கோ வாங்கோ அப்படின்னு  கூப்பிட்டு,உங்களுக்கு 100, 1000 வேணுமா
நாங்களே அங்கு பஜனை பண்ற ஹாலுக்கு வந்து தோசை பண்ணி ஹாட் ஆ சர்வ் செய்யறோம் என்று சொல்ல உடனே ஆர்டர் பண்ணிட்டு வந்தேன்.

நெய் ரவா ரோஸ்ட் வேணும் அப்படின்னு பிரியப்படுபவர்கள் அடுத்த ஹாலுக்கு செல்லவும். அங்கே இன்ஸ்டன்ட் ரவா தோசை கிடைக்கும்.
+Dindigul Dhanabalan +Balu Sriram





*******************************************************************************************************************************************************************************************************************************************

இந்த மாதம் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி.
அன்றைய சிறப்பினை நாம் ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே அன்றோ அதற்கு முதல் நாளோ பார்க்கலாம்.

கோவிந்தன் அந்த ஸ்ரீநிவாசன், பரந்தாமன்,ரங்கன், கண்ணன், வாசுதேவன்
என்று நாம் பல விதமாக வர்ணிக்கும்
மாதவன் செய்த மிராகிள்
எனது இன்னொரு வலையில் வெளியாகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++










புதன், ஜனவரி 08, 2014

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம். எதுக்காக

இது புதன் கோலம்.

அப்படின்னா திங்கள் கோலம், செவ்வாய் கோலம் அப்படின்னு எல்லாம் இருக்கா?

குறுக்கே கேள்வி கேட்க கூடாது. சொன்னா சரி அப்படின்னு சொல்லணும்.

சரி.

இன்னிக்கு எத்தனையாவது பாசுரம் ?

சரி.

என்ன சரி ?

நீ தானே என்ன சொன்னாலும் சரி அப்படின்னு சொல்லணும் சொல்லிருக்க..

ராகவா..

இது மார்கழி மாசம். ஒண்னு நாராயணா இல்ல கோவிந்தா சொல்லணும்.
Courtesy: www.thanjavur14.blogspot.com

சரி. இன்னிக்கு 24 வது பாசுரம் இல்லையா ?

முதல்லே பாட்டை போடுங்க...  வந்த எல்லோரும் முதலிலே மேடம் ஷைலஜா அவங்க வலைக்கு சென்று அவங்க எழுதியிருக்கும் இந்த அழகான பாசுரத்துக்கான  பொருளை படித்து வருவோமா

வாருங்கள். நாம் அங்கே போவோம். 

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம்.
எதுக்காக ?

நீ முதல்லே காபியை போடு.

இன்னிக்கு திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் நம்ம அகத்துளே வந்து நாலு பாசுரம் பாடப்போறாங்க.



இந்த பாசுரத்திலே சொல்லப்பட்ட அத்தனை இதிகாச புரானங்களுக்கான விளக்கமும் அழகான படங்களும் எங்கள் வலை நண்பர்
                கோவர்த்தனம் கொற்றக்குடை என்ற தலைப்பிலே
       மேடம் ராஜராஜேஸ்வரி  அவர்கள் வலையிலே 

சும்மா சொல்லல்லே.. அங்கே ஒரு தரம் போயிட்டு அதுலே என்ன சொல்லி இருக்கு அப்படின்னு படிச்சுட்டு வாங்க. ஜன்ம சாபல்யம்.

கண்ணதாசன் பாடலும் உறையும் இப்போ.


உரை , இடையினம். நீங்க வல்லினம் உச்சரிக்கறேள்.


சரி சரி.  இன்னிக்கு உரை யை விட இன்னொன்னு முக்கியம்.

Madam ராஜி அப்படின்னு பதிவர் மா நாட்டுக்கு பங்களூர் லேந்து வந்தவங்க.

அவங்க இன்னிக்கு பஜனை முடிந்த உடன் வந்தவர்களுக்கு வினியோகம் செய்ய
1000 மசாலா வடை அனுப்பி இருக்காங்க.

அடே !!  1000 வடையா !!
நம்ம என்ன அனுமாருக்கு வடை மாலையா சாத்தப்போறோம்.
நன்றி: ராஜி .(பெங்களூர் வலைப்பதிவர்.)

இருந்தாலும் இந்த வடையை பார்த்தாலே ஆளுக்கு 5 , 10 சாப்பிடுவாங்க. அந்த மாங்காய் தொக்கு நல்லா இருக்குமா ? இல்ல ஆச்சி மசாலா செய்யற கொத்தமல்லி தொக்கு சூட் ஆகுமா ?

முதலிலே வருகை தந்த விருந்தினரை உபசரிப்போம்.
+Dindigul Dhanabalan
+Balu Sriram +kg gouthaman +S. P. Raghunathan +
+Venkatasubramanian Ramamurthy
+Venkataraman Nagarajan

+Rajeswari Jaghamani

எல்லோரும் மேடம் ராஜிக்கு  தேங்க்ஸ் சொல்லுவோம்.

சூடா ஒரு காபி இந்தாங்க.

காபி சாபிட்டு கிட்டே ஆண்டாள் கோவிலே தர்சனம் பாருங்க.




YOU ARE BLESSED. 

அண்ட் தட் இஸ் த ரீசன் 
யூ  ஆர் ஹியர் டுடே. 

செவ்வாய், ஜனவரி 07, 2014

த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம்

சொர்கத்திலிருந்து பூ மாரி சொரிந்தார் போல்.....!!!!

இன்னிக்கு திருப்பாவை 23 வது பாசுரம்.  அதை சிறப்பிக்க இன்னும் ஒரு நிகழ்வும். 

வலைச்சரத்தில் ஆதி வெங்கட் அவர்கள் இன்று ஆசிரியர் பதவி ஏற்பதை முன்னிட்டு அவர்கள் வலையிலிருந்து ஒரு திருக்கோலம். 
+Adhi Venkat 
நன்றி.ஆதி வெங்கட். அவர்கள்.


எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு  கோவில் லே ஒரு படம் புடிச்சுண்டு வந்தேன். அத அப்படியே நம்மாத்து வாசல் லே போடணும். 

இன்றைக்கு பாசுரத்திலே 23 என்று ஹிந்து தினசரி கொடுப்பதும் 23 ஆக திருப்பாவை புத்தகத்தில் இருப்பதும் மாறி இருக்கிறது. இல்லை. எனக்குத் தான் பிரமையோ.

கண்ணன் இப்போது தான் கண்களைத் திறக்கின்ற காட்சி.

ஜஸ்ட் ஒரு மாறுதல் பொருட்டு, இன்று நித்ய ஸ்ரீ அவர்கள் பாடுகின்ற ஒன்றல்ல நான்கு பாசுரங்களை இன்று தருவோம்.

TODAY
first you are listening to NITHYASHREE MAHADEVAN

அந்த பூக்கோலத்தை இன்னிக்கு ஹால் லே போடுங்கோ.
என்ன விசேஷம் !!
போக போகத் தெரியும்.

இன்று சிங்கப்பெருமாள்  கோவிலே வீற்றிருக்கும் சிங்கம் தன் கண்களை விழிப்பது போல் ஒரு உணர்வு.
ஆகவே, இன்று ஒரு வித்தியாசமாக, இன்னொரு உரை தனை முதலில் யாம் படிப்போம்.
+revathi narasimhan


நாச்சியாரின் கருணை மிகு குரலைக் கேட்ட கண்ணன் எங்கள் பரமன் பரந்தாமன், வாசுதேவன், பிருந்தாவன சாரங்கன், மணி வண்ணன், தனது மலர்ப் படுக்கையில் இருந்து,
உடல் சிலிர்த்துக்கொண்டு, ஒரு முறை கர்ஜித்து, பின் ராஜ நடை போட்டு சிங்கம் போல் வருகிறான்.

வந்து அந்த சிம்மாசனத்திலே உட்காரப்போகிறான் .

அந்த சிம்மாசனம் இந்த வலை நண்பர் திருமதி ஆதி வெங்கட் வைப் ஆப் வேங்கட நாகராஜ் அவர்கள் போட்ட பூக்கோலத்தில் மேலே இருக்கிறது.

ஓ !! அப்படியா சமாசாரம் !!

சிம்மாசனத்திலே உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார். எங்களுக்கு அருள் செய் என்று கோதை பிரார்த்திக்கிராளாம்.

வேளுக்குடி உபன்யாசம் நாளைக்கு  வரும்.



கண்ணதாசன் இந்த பாட்டுக்கு எழுதிய உரை இப்போ.
இன்னும் கொஞ்ச நேரத்தில் கூகிள் வெளியீடு ஆகும்.
அதற்கு முன்னே எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் வலைப்படம் அவருக்கு எமது நன்றி.




ரொம்ப டயர்டா ஆயிடுத்து. சூரி சார்.

பொறுமை . பொறுமை.

இன்னிக்கு மாஹிஸ் கிச்சன் லேந்து ஸ்பெசலா நெய் ஊத்தப்பம் இங்கேயே சுடச்சுட போட்டு தருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கு


.ஏன் சூரி சார், அந்த த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம் எல்லாம் இருந்திருக்காதோ ?
+Venkatasubramanian Ramamurthy
+Balu Sriram
என்ன திடீர் அப்படின்னு ஒரு சந்தேஹம்.?

இந்த கோதை இப்படி மாத்தி மாத்தி அப்பீல் பண்றா. பகவான் கண்ணை துறந்து பார்க்கலையே... நானா இருந்தா..

நீரா இருந்தா என்ன செஞ்சு இருப்பீர்.

ஒரு பத்து நெய் ஊத்தாப்பத்தை அவர் முன்னாடி வச்சு .
நீ கண்ணைத் தொற . இல்லாட்டி, அத்தனையும் காணாம போயிடும் அப்படின்னு சொல்வேன்.


கண்ணன் பக்தாளுக்கு அடிமை இல்லையோ..

சரி. சரி.

நெய் ஊத்தப்பம் ஜோர். ஸ்பெசல் நெய்யோ !



இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன் கூட போடுங்கோ. இதயம் நல்ல எண்ணை தாராளமா சாதிங்கோ..

ஆஹா.எத்தனை ஒருவருக்கு அப்படின்னு இருக்கா ?

மேக்சிமம் 10 வரைக்கும் சாப்பிடலாம். ப்ரீ. ஆனா, 11 சாப்பிட்டா, மொத்தம் 11 க்கும் ரூபாய் 45 வீதம் பில் கட்டனும்.

அது என்ன கஜ்ரிவால் டெல்லி லே கணக்கு போட்டு தண்ணி விடரா மாதிரி இருக்கு.
http://mahikitchen.blogspot.in/2013/12/blog-post_24.html
தோ பாருங்கோ !!
என்ன ?
ஊத்தப்பம் ரொம்ப நன்னா இருக்காம்.
ஆமாம். அதுக்கென்ன ?
உங்க ப்ரெண்ட் விஜயராகவன் அவர் ஆத்துக்காரிக்கு ஒரு அஞ்சு பார்சல் எடுத்துண்டு போலாமா அப்படின்னு கேட்கறார்.
+Anandaraja Vijayaraghavan
+Ranjani Narayanan
+ilayanila ilamathy
+Madhan Nagasubramaniam
அஞ்சு என்ன பத்து எடுத்துக்கட்டும். ஆவி பறக்க  ஹாட் பாக் லே வச்சு அனுப்பு.



இது என்ன இந்த சின்ன பொண்ணுங்கல்லாம் குதிச்சுண்டு வர்றது ? என்ன விசேஷம் ?

கோதை ஆண்டாள் திருமண வைபவம். குழந்தைகள் டான்ஸ் ப்ரோக்ராம்.

வந்தவர்கள் எல்லாம் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுகிண்டே இந்த டான்ஸ் ப்ரோக்ராம் பார்க்கலாம்.



***********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
இன்றைய பொன்மொழி.

Even if it seems to be lost, think that it is not gone away but is there and just hidden.

 +Sri Sri Ravi Shankar


திங்கள், ஜனவரி 06, 2014

அவ உசிரையே வச்சுட்டா.

                                                        இது என்ன கோலம் !!
P L A S T I C   R A N G O L I


இருபத்தி ஒரு நாட்களாக கொட்டற பனியிலே கோலம் போட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு
எங்கள் பெண் நியூ ஜெர்சி லேந்து

 " ஏ ம் மா
கோலம் கோலம் இப்படின்னு கஷ்டப்பட்டிருண்டு இருக்கே..என்று கேட்டாள்.

கோல மாவு, காவி, கலர் கோலப்பொடி,

 இதெல்லாமே இப்ப கிடையாது. இப்ப எல்லாமே பிளாஸ்டிக் லே வந்துடுத்து. ஜஸ்ட் உனக்கு வேண்டியபடி வாங்கி அட்ஜஸ்ட் செஞ்சு போட்டுக்க வேண்டியது தான்.

பழைய சம்பிரதாயம், எங்களோட குடும்ப நம்பிக்கைகள், எங்கள் ஊரு கட்டுப்பாடு, அப்படின்னு எல்லாம் வச்சுண்டு இருக்கோமே, அதெல்லாம் என்ன ஆவுறது ?

அம்மா, இன்னிக்கு 2014லே நம்ம லைப் லே எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது தான் முக்கியம். இப்படித்தான் நடக்கணும் அப்படின்னு வீம்பு புடிச்சுண்டு இருக்கக்கூடாது.

அவ சொல்றதும் ஒரு விதத்துலே பார்த்தா சரிதான்.

நீ எப்பவுமே உன் பொண்ணு கட்சி .

சர்டன்லி. நீங்களே பாருங்க.  நீங்க சொல்ற கோதை சரித்ரத்துலே பாருங்கோ.
கட்டிண்டா அந்த கண்ணனைத் தான் கட்டிப்பேன் என்று அந்த காலத்திலேயே கோதை சொல்லி இருக்கிறாள். இதை பிடிவாதம் அப்படின்னு சொல்வேளா?

மாட்டேன். அது பகவான் மேல அவ உசிரையே வச்சுட்டா.

அவரவர்களுக்கு பகவான் என்று யாரைத் தோன்றதோ அவர் மேலே உயிரை வச்சுடலாமா ? என்ன சொல்றேன் ? அது சரின்னா இதுவும் சரிதான்.


 கோதையோட அப்பா SAYEE matrimonial  லே இல்ல ஒரு தமிழ் மாட்ரிமோனி லே ஒரு ad கொடுக்கல்ல.  ஏன் அப்படின்னா,

அவருக்கு, கோதை பிறக்கும்போதே , இவ  தாயார் அவதாரம்.
நடந்தது எல்லாமே தெய்வ நிச்சிதம் ஈச்வர சங்கல்பம் அப்படின்னு தெரிஞ்சது.

அந்த கோதை ஆகப்பட்டவள்  பெருமாளே அவதரித்த பெண் வடிவத்தில் பிறந்த ஒரே ஆழ்வார் என்று பெரியவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.


paasuram 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்க்  கீழே 
சங்கம் இருப்பார்ப்போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போல 
செங்கண்சிறுத் சிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும்  எழுந்தால்போல்  
அங்கண் இரண்டுங் கொண்டெங்கள்மேல்  
நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் 


என்ன இது ! நீங்களே பிரவசனத்தை ஆரம்பிச்சுட்டேள். இது என்ன உங்க காலேஜ் ஆ ? நாங்கள் எல்லாம் என்ன உங்க ஸ்டூடெண்ட்ஸ் அப்படின்னு நினைப்பா ?

 முதல்லே எம்.எல்.வி. அம்மா டி.வி.டி போடுங்கோ. என்கிறாள். சக தர்மினி.





வேளுக்குடி  வந்துட்டார். அவரது உபன்யாசத்தை கேட்போம்.
velukkudi krishnan 22 pasuram. upanyasam.



அடுத்து கண்ணதாசன் உரை இந்த பாசுரத்துக்கு



வேளுக்குடி சார்  சொல்றது எதுவுமே மூளைக்கு எட்டுவதற்கு முன்னாடி, பசி பசி அப்படின்னு இடும்பை கூர் என் வயிறு ஒன்றின் வைப்ரேஷ்னஸ் மட்டும் தான் மூளைக்கு புரியறது.

அவசரப்படாதே வயிறே. பொறு.
இன்னிக்கு நைவேத்யம் பூரி சென்னா படோரா .
யதா சௌகர்யம் துஷத்வம்

சத்தமா சொல்லாதீங்கோ..இன்னிக்கு உபவாசம் இருக்கிறவா கூட வ்ரதத்தை நாளைக்கு போஸ்ட்போன் பண்ணிடுவா..

+Balu Sriram +kg gouthaman +Anandaraja Vijayaraghavan
இதிலே பூண்டு இருக்கா வெங்காயம் இருக்கா அப்படின்னு சந்தேஹம் இருந்தா

நீங்க நினைக்கிறவா பக்தர்ஸ் எல்லாம் இன்னிக்கு வலைச்சரம் போயிருக்காங்க. அங்க ஆதி வெங்கட் அவங்களோட பிரவசனம். உபன்யாசம். சொற்பொழிவு.
சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆடோ புடிச்சுண்டு நாமும் போய் கேட்கணும். ஸ்ரீரங்கத்துலேந்து, அவர்கள் இந்தப் பனிலே வந்து இருக்காங்க.
+Geetha Sambasivam
+Ananya Mahadevan +Adhi Venkat

 அவங்களுக்கு மட்டும் வெறும் பூரி மசாலா, சாஸ்த்ரோக்தமா பண்ணியது.
  சுத்தமான கிணற்று ஜலம் . RO மூலம் பரிசுத்தப்படுத்தியது.


இதுவும் சரியா படலே அப்படின்னா,
இந்தாங்கோ துளசி தீர்த்தம்.
+Vasudevan Tirumurti
+Venkata Ramani
+Venkataraman Nagarajan
ஓம் ஹரிஹி

இன்னிக்கு இது போதுமா.

இருங்கோ.

செவிக்கு உணவு வேண்டாமா ?
சாப்பிட்டது ஜீரணம் ஆகவேண்டாமா !!



கோபிகாதி ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா.



***********************************************************************************************************************************************************************************************************************************************.
இன்னிக்கு நீங்க படிக்கவேண்டியது.

LEARN TO FLOW WITH LIFE.
மேலே கிளிக்குங்கள்.

ஞாயிறு, ஜனவரி 05, 2014

நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக

என்னங்க..

என்ன என்னங்க.

நம்ம வீட்டிலே 

என்ன நம்ம வீட்டுலே 

அட ..என்னக திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ..
வாசலை பாருங்க. என்ன இம்புட்டு மாடு.
 இம்புட்டு பேரு பால் கறந்துட்டு இருக்கராக..
என்ன விசேஷம்..



அடியே.. 
நம்ம தான் வீட்டை மாத்திகிட்டு வந்துட்டோம்டி. 
sangu chakra kolam 

ஆமாண்டி, அந்த யாதவ குல கோகுலத்துக்கே வந்துட்டோம் டி. 

அப்ப இனிமே ஆவின் பால் வேண்டாம் 
அப்படின்னு நம்ம பால் வெங்கடேசனுக்கு செல் அடிச்சட்டுமா..

கொஞ்சம் பொறுடி. இது எப்பவும் நீடிக்குமா அப்படின்னு தெரியல்லையே 
இரண்டு நிமிஷம் கழிச்சு ஜரகண்டி, ஜரகண்டி அப்படின்னு சொல்லிடுவாக இல்ல. 

அப்படியா..அப்ப கனவு முடிஞ்ச உடனே காட்சியும் மாறுமோ. 

திருப்பாவை பாசுரம் 21

ஏற்ற கலன்கள்  எதிர்பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளற்ப் பெரும்பசுக்கள் 
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
  ஏற்றமுடையாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்க்கண் 
ஆற்றாது வந்துன் அடிபணியுமாப்போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்  


விளக்கம் 

பாத்திரங்களில் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பால் சொரியும் 
பசுக்களுக்கு சொந்தக்காரனான நந்தகோபனின் மைந்தனே 
கண்ணனே எழுவாயாக 
அடியாரைக் காப்பதில் அக்கறை கொண்டவனே 
வேதங்களாலும் அறியமுடியாதபெரியவனே 
இவ்வுலகில் அவதரித்த ஒளி  பொருந்திய முகம் கொண்ட
நாராயணனே துயிலெழாய் உன்னை வெல்ல முடியாத பகைவர்கள் உன் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்க வந்துள்ளதுபோல் நாங்களும் உன் புகழ் பாடிக்கொண்டு உன்னை அடைய வந்துள்ளோம்.  
விளக்கம் தந்த திரு.பட்டாபிராமன் அவர்கள் வலைக்குச் செல்ல இங்கே கில்லிடவும் 


எம்.எல். வி. அம்மா 21வதுபாசுரம் பாடுகின்ற அதே வேளையில் பெருமாளை சேவியுங்கள்.


ஒரு பக்கம் பசும்பால் குடம் குடமா கொட்டுது.
இன்னொரு பக்கம் சிசுக்கள் அதுக்காக ஏங்கி நிற்கும் காட்சி.

கண்ணதாசன் என்ன சொல்றாரு. கேட்போமா. !

இதை சுப்பு தாத்தா பாடி இருக்காரு தன்யாசி ராகத்துலே.
பாடுறாரா படிக்கிறாரா நீங்களே கேளுங்க.
கொஞ்ச நேரத்துலே
கூகிள்லே 


இன்னிக்கு ஒரு ஸ்பெசல் நிவேதனம்.

வட  இந்தியாவிலே இருந்து ஒரு பஜனை கோஷ்டி வந்திருக்கு.
அவங்க இப்ப ராதா கிருஷ்ண பஜனை பண்ண போராங்க.

பஜனை முடிஞ்சப்பறம் , அவங்க சம்ப்ரதாயத்து படி உணவு அளிக்கப்படும்.


அமைதியா கேட்கணும்.



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ணா.
+Balu Sriram
எல்லோரும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்து  பாடணும்.

பாடி முடிச்சாச்சு.

அவசரப்படக்கூடாது. ரொம்ப அவசரம் அப்படின்னா
இந்த மெனு லிஸ்டை பார்த்துகினே இருங்க.
+Balu Sriram
ஏன் பார்த்தா பசி தீருமா.?

பகவானை பார்த்தாலே ஏன் நினைச்சாலே பசி வராது.

 சுவாமி,நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக..   இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஒப்ளைஜ் பண்ணுங்க.  பசி கண்ணை மறைக்குது.

கொஞ்சம் பொறுத்துக்கணும். பகவானே துயில் களைய வில்லை. அதற்குத்தான் பஜனை .
அவர்கள் முடிக்கும்போது தான் எல்லோரும் சாப்பிட முடியும்.

அவர்களுக்கு பசிக்குமா தெரியல்லையே...

வரும்போதே செமத்தியா ஒரு புடி புடிச்சுட்டு வந்திருப்பாகளோ ?
பஜனை லே எழுந்திருக்கிறா மாதிரியே தெரியலையே...

அப்ப அதுக்குள்ளே மேடம் ஷைலஜா உரை என்ன என்று பார்த்துவிட்டு வருவோம்.
+Shylaja Narayan
அப்பாடி !!  ஒரு தினுசா கடைசி யா ஹரே கிருஷ்ணா சொல்லிட்டார்.

என்ன நைவேத்யம்.

பாநி பூரி. குலோப் ஜாமுன்.
குலோப் ஜானிலே நெய் நிறையா இருக்குமோ ?
நெய் அப்படின்னா ghee யா ?
ஆமாம்.
இருங்க. +Geetha Sambasivam மேடத்தை கேட்டு சொல்றேன்.



என்ன சுவை ! என்ன சுவை !!
கண்ணபிரானின் கருணையும் அதே சுவை.
சுவைத்தவர்கள் சொல்லமுடியாது.
சொல்ல நா வன்மை படைத்தவர்கள் சுவைக்க இயலாது.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
******************************************************************************************************************************************************************************************************************************************

சனி, ஜனவரி 04, 2014

அடியே !! தாயாரைப் பார்த்து சேவிச்சுக்கோ .


இன்னிக்கு என்ன விசேஷம். ஊரே கூடி தெருவை அடிச்சுண்டு கோலம் போடறா....



என்னது.. ஒன்னுமே தெரியாது மாதிரி கேட்டாரது..

பெருமாள் வந்துண்டு இருக்கார் பாருங்கோ.

திருப்பாவை 20 வது பாசுரம் கேட்கறதே  !!

எங்கே ?

காது மெஷின் வச்சுக்கோங்கொ அப்படின்னு நான் கரடியா கத்தியாச்சு,
கேட்டாதானே....

என்ன கேட்டாதானே ??
நான் உன்னை காப்பி கேட்கவில்லையே..

சிவா சிவா..  சாரி,

நாராயணா

பெருமாள் இன்னிக்கு வீதி  ஊர்வலம்.  தாயார் என்னமா ஜ்வெல்லிகரா  பாருங்கோ.

  என்ன அட்டிகை அது !! அத்தனை பிரகாசமா !!

நான் எப்பவோ உங்களை ஒரு அட்டிகை கேட்டாச்சு. தாயார் தான் உங்களுக்கு புத்தி சொல்லி வாங்கிக்கொடுக்க சொல்லணும். 

 அடியே !! தாயாரைப் பார்த்து சேவிச்சுக்கோ .






பெருமாள் ஊர்வலத்தோட வேளுக்குடி கிருஷ்ணனும் வரார்.




கண்ணதாசன் உரை இன்னிக்கு படிக்கட்டுமா ?

அந்த அட்டிகையை நீங்க பார்த்தேளோ!  அதே மாதிரி ஆண்டிகிவிடி அட்டிகை பிரின்ஸ் ஜிவேல்லறி லே பார்த்தோமே..நினைவு இருக்கா ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி....


பார்த்தோம். அன்னிக்கு 75 ஆயிரம் சொன்னாங்க. இன்னிக்கு கேட்டா 7 லட்சத்து 50 ஆயிரமாம்.

இன்னிக்கு கடை உண்டா...!!

ஏண்டி !!  தாயார் காலைப் பிடிச்சுண்டு கெஞ்சி அந்த பெருமாள் காலிலே என்னை கொண்டு போய் விட்டுடுங்கோ அப்படின்னு சொல்வே ன்னு நினைச்சா, 

நீ தாயார் கழுத்தை பார்த்துட்டு, அதே மாதிரி எனக்கு ஒரு அட்டிகை வாங்கித் தாங்கோ அப்படிங்கரையே... 

பெருமாள் உன்னை பார்த்து என்ன நினைச்சுபார் !  நீ நினைச்சு பார் !!

சரி. சரி.. எதுன்னாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுடுவேளே !! அந்த பெருமாளே பாருங்கோ, தாயார் சொற்படி தான் கேட்கறார்.

கண்ணதாசன் வசன உரை படிக்கறேன். கேள்.


ப்ரவசனம் முடியும் நேரம் மூக்கு என்னவோ புதுசா வாசனை வர்றதே அப்படின்னு சொல்றது...

இன்னிக்கு நைவேத்யம் புளி அவல் , உசிலி அவல் , தயிர் அவல் .

எதுக்கு மூணு ஐடம் ?

சொல்றேன். அதுக்கு முன்னாடி நீங்க மட்டும் ஷைலஜா மேடம் வலைக்குச் சென்று இன்றைய பாசுரத்துக்கு என்ன விளக்கம் என்று தெரிந்து கொண்டு வாருங்கள்.

அதுக்குள்ளே இதெல்லாம் தீர்ந்து போயிடுத்துன்னா ?


எல்லாத்துலேயும் ஒரு கரண்டி தான்.   உங்களுக்கு இருக்கறது என்னிக்குமே கிடைக்கும்.   பெருமாள் மேலே நம்பிக்கை இருக்கா இல்லையா..

பெருமாள் மேல இருக்கு.






உசிலி தான் கன ஜோர்.

*******************************************************************************

வெள்ளி, ஜனவரி 03, 2014

பஞ்சு மெத்தையிலே பெருமாள்.



யாரு அது அவ்வளவு அழகா கோலம் போட்டிருக்காங்க...
நீ தூங்கிக்கிட்டு இல்ல இருக்க.


வாணி முத்துகிருஷ்ணன் அவங்க போட்டு இருக்காங்க.
அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.

என்ன நீ இன்னுமா படுத்துட்டு இருக்க ?

அந்த கண்ணனே இன்னும் படுத்திட்டு தான் இருக்காரு.
ஆமாம். அவ எப்படி படுத்திட்டு இருக்காரு பாரத்தீல
எப்படி ?
பாட்டை நல்லா படிச்சு பாரு.

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் 
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி 
கொந்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் 
வைத்துகிடந்த மலர் மார்ர்பா!
வாய் திறவாய் 
மைத்தடங் கண்ணினாய் 
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ 
ஒட்டாய் காண் 
எத்தனையேலும்பிரிவாற்ற கில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். 

விளக்கம் தருபவர் திரு பட்டாபிராமன் அவருக்கு நன்றி.

சஹானா ராகம் மனசை உருக்கும் தன்மை உடையது.
அந்த ராகத்துலே பாடி இந்த நப்பின்னை மனதிலே தன மேலே கருணை உண்டாகட்டும், நாங்களும் அந்த பரமனை, எங்கள் கண்ணனை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று கோதை பிராட்டியார் கெஞ்சுவது போல் இருக்கிறது.
 எம்.எல்.வி. அம்மா பாடுவது.
MLV sings. Raag Sahana



velukkudi krishnan
தத்துவார்த்தம்  இங்கே.திருமதி ஷைலஜா அவர்கள் வலையிலும் பொருள் விளக்கம் அவசியம் படிக்கவும்.





பஞ்சு மெத்தை லே பெருமாள்.

எப்படி இருக்கார் ?

கண்ணதாசன் உரை



இங்கே கேட்பதற்கு பொறுமை இருக்குமா ?
அதுக்குள்ளே .
நைவேத்யம் வந்து  விட்டது.
என்ன என்று பார்ப்போம்.



தேங்காய் போளி , கொழக்கட்டை தட்டு தட்டா வந்து விட்டது.

தேங்காய் கொலஸ்ட்ரால். அதுவும் நெய் ரொம்ப சாசுரேடட் கொழுப்பு.   அதிகம்.கம கம அப்படின்னு  வாசனை.

சும்மா புகுந்து விளையாடுவோம் அப்படின்னு
+Balu Sriram நினைக்கிறது  தெரியறது.

இன்னிக்கு மட்டும் ஒ.கே.

இந்த தில்லானா கேட்டுண்டே போளி சுவைப்போம்.



வியாழன், ஜனவரி 02, 2014

சுவர்க்க சம்பந்தம்

என்ன 

நீங்க எல்லோரும் இவ்வளவு கூட்டம் கூட்டமா கோலம் போடறது நிஜமாவே ரொம்ப நல்லாவே இருக்கு.  என்ன விசேஷம் ?

என்ன ஒன்னுமே தெரியாதமாதிரி  மூஞ்சியை வச்சுண்டு இருக்கீக ,,

உங்களுக்குத் .தெரியாதா....கோதை  இந்த வழியா  தான்  க்ருஷ்ணனை  பார்க்க  போரா அப்படின்னு பேச்சு அடிபடறது. நேத்திக்கு ராத்திரி   நாலு மாட வீதியிலும் ஒரே  கொண்டாட்டம்.

.ஓஹோ. நேத்தி ராத்திரி அம்மா.. தூக்கம் போச்சுதே அம்மா. அந்த கேசா !!

 நான் ஜனவரி  1 ம் தேதி. அதுக்காக அப்படின்னு  நினைச்சேன்.



நீங்க மனசுலே என்ன வேணா நினைப்பேள் ,

ஆனா,

என்ன ஆனா , ஈ நா ?

நீங்க எல்லோரும் திருவெல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலுக்கு முன்னாடி போய் பார்க்கணும்.

அங்கே என்ன அதிசயம்.

அதிசயம் தான். கோவில் பக்கத்துலே முன்னாடி ஒரு வீட்டு முன்னாடி ஒரு பொண்ணு கோலம் போட்டுண்டு இருக்கு...

அதிலே என்ன அதிசயம் ?

அத பார்க்கறதுக்கு கோதையே வந்து நின்னுட்டு இருக்கா.  என்னோட கூட வாங்கோ. அங்கே போய் பார்க்கலாம்.

 சும்மா சொல்லல்லே..

நீங்களே பாருங்கோ.  




ஆஹா. அந்த யுகத்திலே ஆண்டாளாப்பிறந்த கோதை நாச்சியார் பெருமானைக் காண வந்து வாசல்லே நிற்கிற போல அல்லவா காட்சி இருக்கிறது !!

அன்னிக்கு பிரவசனத்திலே வேளுக்குடி சொன்னமாதிரி சாக்ஷாத் கோதை நாச்சியாரே வந்து இருக்கிறா போல அல்லவா இருக்கிறது.

தெய்வம்  மனுஷ்ய ரூபேண...

சாக்ஷாத் மகா லக்ஷ்மி கடாக்ஷம் இன்னிக்கு 18 வது பாசுரம் இல்லையா.

சில சமயம் நம்ம எதிர்பாராத நிகழ்வுகள் நம்ம மனசுக்கு ஒரு மகிழ்ச்சியும்
சுகத்தையும் தரது இல்லையா !!

என்ன அப்படி நடந்தது !!

நேத்திக்கு மேடம் துளசி கோபால் தம்பதிகள் எங்க வீட்டுக்கு வந்தது சாக்ஷாத் அந்த பெருமாளும் தாயாரும் வந்தாபோல்
புத்தாண்டு தினம் வந்து எங்களுக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட் கொடுக்கறா !!
நேத்திக்கு எடுத்த படம் மேடம் துளசி அனுப்புவாங்க.அதுவரைக்கும் இத பார்க்கணும் 

யார் யாருக்கு எப்படி எப்படி வர்றார் அப்படி எல்லாம்  சொல்ல முடியாது.
அது அவர்கள் அவர்கள்  பாக்கியம்.

 எம். எல். வி.பாடறா  .இன்னிக்கு இல்லையா !!

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
 நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
 கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
 வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!
 மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
 பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச் 
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! 
ஆண்டாள் வாழி திருநாமம்!
 ஆமாம்.

 சரி.
டி.வி.டி. போடுங்கோ. கேட்கலாம்.



இப்ப கண்ணதாசன் இந்த பாசுரத்துக்கு எழுதிய உரை பார்க்கப்போறோம்.
சுப்பு தாத்தா பாடறார்.

உயிரைன்னா எடுக்கிறார். 

மூச் ! சும்மா இருங்க.. உங்களுக்கு பிரசாதம் வேணுமா வேண்டாமா.

வேணும்.

அப்ப பொறுமையா சுப்பு தாத்தா பாடறதை கேட்கணும்.

சரி. 







 வேளுக்குடி சார் இன்னிக்கு  வந்தாச்சு.
எல்லோரும் அமைதியா ப்ரவசனம்  கேட்கணும்.

நைவேத்யம் என்ன அப்படின்னு சொல்லுங்கோ ..முதல்லே.

சுவாமி, பகவத் சந்நிதானம்.  அங்கே 
ஸ்ரவணம்  பர்ஸ்ட். அதுவரைக்கும் fast.

.

   காலங்கார்த்தாலே இன்னிக்கு அகோர பசி. 
அங்க நந்தகோபாலனும் வாசற்கதவை  திறக்கல்ல.
 இங்கன வேளுக்குடியும் பிரசங்கத்தை முடிக்கல்ல.

அதுக்கென்ன ! நிதானமா  கேளும்.என்ன அழகா சொல்றார் !

 ஆஹா.  ஆஹா.

  என்ன ஆஹா

  வண்டி வண்டியா , அண்டாக்கள் வர்றதே !!
   வாசனை புடிச்சாலே சுவர்க்க சம்பந்தம் இருக்கு.

    முதல்லே ப்ரவசனம் முடியட்டும்.
    எல்லாரும்  திவ்ய நாமம்    சொல்லுங்கோ.
  ..கோவிந்தா.  .கோவிந்தா.

    கோவிந்தா.. 
    இங்கே யே  ப்ரவசனம் கேட்டுண்டு இருந்தா அன்னம் கோவிந்தா ஆயிடுத்து அப்படின்னு அங்கே சொல்லிட்டா...

    எல்லாருக்கும்  கிடைக்கும். நீங்க பேசாம  இருங்கோ.

www.asvatham.blogspot.com
thank u madam.
   இருந்தாலும் மொத்தக் கூட்டமும் கரைஞ்சு போயிடுத்து. அந்த டின்னர் ஹால் லே திடீர் ஆரவாரம்.

diabetes   டயாபெடிஸ் காரா மட்டும் தனியா  வாங்கோ. அங்க ஒரு குரல்.

  அவர்களுக்கு என்ன ?

  இத்தனை sweet சக்கரை அவர்களுக்கு ஒத்துக்காது. அதுனாலே அவர்களுக்கு நெய்  கார கொழுக்கட்டை.. இட்லி  ,மிளகாய் போடி, கதம்ப  சாம்பார்.   கொத்தமல்லி சட்னி.


  சார்
 எனக்கு டயாபெடிஸ் கொஞ்சம் தான்.
அதுனாலே க்ஷீரன்னம் , கொழுக்கட்டை இரண்டும்  உண்டு
அப்படின்னு நீங்க பெரிய மனசு பண்ணி ரெகமெண்ட் செய்யணும்.

  ஓகே. ஆதார் கார்டு இருக்கா ?

   ஆதார் கார்டா...இதுக்கு எதுக்கு ?

   முதல்லே உமக்கு சுகர் இருக்கா அப்படின்னு செக் பண்ணின பிறகு தான்
    மத்த தெல்லாம்.  லபராடறி லே ஆதார் கார்டு கேட்பா.

    உமக்கு, சொல்லக்கூடாது. எனக்கு சக்கரை இருக்கோ இல்லையோ .. உமக்கு  கொலஸ்ட்ரால் நிறையாவே இருக்கு.

    கோவிந்தா...கோவிந்தா.


எல்லாரும் தீபாராதனை  பாருங்கோ.
 கோவிந்தா.கோவிந்தா.
சாற்று முறை வேதம். ஹெச்.ஹெச். அழகிய சிங்கர் ஸ்வாமிகள் முன்னிலையில் 

செவ்வாய், டிசம்பர் 31, 2013

Thiruppavai 17

வெளிலே கதவ திறந்து போக முடியாது போல இருக்கே
பனி கொட்டறது.
வாசல்லே  பார்க்கறேன்.ஒரு நிலாவுக்கு பத்து நிலா   இருக்கு.
 என்ன இது ?




பனி வருஷா வருஷம் தான் கொட்டறது. அதற்காக ஆண்டாள் திருப்பாவை பாடற மாசத்திலே வாசல் லே கோலம் போடாம குத்து விளக்கு ஏத்தாம இரண்டு பேர் கோலாட்டம் போட்டுண்டு பாடாம இருக்கலாமா?

உனக்கு முடியல்லேன்னா நான் போடறேன், என்று கோல மாவு, காவி அனைத்தையும் எடுத்துண்டு தலைலே மப்ளர் சுத்திண்டு வாசலுக்கு போனால்,

பிரமித்து போய்விட்டேன்.

ஏ , மீனாச்சி, இங்கே வந்து பாரு.

இங்கே ஏற்கனவே ஒரு திவ்யமா கோலம் போட்டு இருக்கா.

.
யாரு போட்டு இருப்பா ?
என்று கேட்பதற்கு முன்னாடி,
நான் தான் தாத்தா போட்டேன் என்று என் பேத்தி சஞ்சு சொல்றா.
நீயா போட்டே.
ஆமாம்.
யாரு சொல்லிகொடுத்தா.
அத நானே கத்துண்டு போட்டேனாக்கும்.

அது தான் நம்ம பேத்தி. mezzo  சுப்ரானோ வும் பாடும். அதே சமயம் பூக்கோலமும் போடுவாள். ஷி இஸ் எ க்ரியேடிவ் ஜீனியஸ் . நான் அன்னிக்கு அவ பாடறத பாத்த உடனே சொல்லிட்டேனே என்கிறாள்  வீட்டுக்காரி.

என் பொண்ணு முகத்திலே அத்தனையும் பெருமை. 

கௌரி பொண்ணா , கொக்கா என்றாள் என் அகமுடையாள்.

சரி சரி  அப்படின்னு சொல்லிட்டு திருப்பி ஒரு தரம் கோலத்தை பார்ப்போம் அப்படின்னு திரும்பினா கோலம் காணாம போச்சே.

என்னது ?
தாத்தா இது ஹோலொக்ரம் டிஸ்ப்ளே .
என்றாள் பேத்தி.
அதானே பார்த்தேன். கோல மாவே இல்லாம ஒரு கோலமா !!

சரி சரி; திருப்பாவை பாசுரம் 17 இன்னிக்கு
.எம்.எல்.வி. அம்மா பாட்டு


ஆஹா !! இப்ப தானே தெரியறது... இன்னும் அந்த கண்ண பிரானே துயில் களைந்து எழவில்லை !!

அதுனாலே தூங்காதே தூங்காதே அப்படின்னு சொல்லி எழுப்பு உன் தம்பியை அப்படின்னு பலதேவன் கிட்டே கோதையும் அவங்க பிரண்ட்ஸ் ம்
ரிக்வெஸ்ட் பண்றாங்க.

கண்ணனுக்குத் தெரியாதா ! எப்ப எழுந்திருக்கணும் அப்படின்னு !
மாயன் அல்லவா ! அவனும் மாயன் அவன் துயிலும் மாயமே அல்லவா !

கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு தந்த உரை பார்ப்போம்.

நீங்க என்ன வேற ராகத்துலே பாடி இருக்கீங்க..!!

இது ஒரு அதிசய ராகம். ஆனந்த ராகம். அபூர்வ ராகம். 

இந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.
கேட்கறவங்க சொல்லணும் என்ன ராகம்
அப்படின்னு

பாடி முடியறதுக்குள்ளே சத்தமான சத்தம்.
ஒரே கோலாட்ட சத்தம்.

என்னது ஒரு கல்யாண கோஷ்டியே வர்றது !!

ஆமாம். இன்னிக்கு கோதை திருக்கல்யாண உத்சவம். கெட்டி மேளம் கொட்டற கல்யாணம். 

இந்த ஊர் மாமி எல்லாம் நம்மாத்துலே வந்து கல்யாணம் உத்சவம்
இன்னிக்கு ஒரு கோலாட்ட நிகழ்ச்சி.

பேஷ் பேஷ்.
Reception Rose petals.
courtesy: tripadvisor.com


வாங்க.வாங்க. எல்லோரும் வாங்க.
வந்த உடனே ஒரு நிமிஷம் கூட டிலே பண்ணாம, கோலாட்டம், கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பம்.
vanga vanga.




அமக்களம் தான் இன்னிக்கு.

வந்தவர்கள் எல்லாமே களைச்சு போயிட்டாங்க.
அவங்களுக்கு என்ன கொடுப்பது ? என்ன நைவேத்தியம் ?

அதெல்லாம் சின்ன சின்ன நைவேத்யம் எல்லாம் சரிப்படாது.
அப்படின்னு சரவணா பவன் லே சொல்லி ஒரு கல்யாண சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.

யாரு இத்தனை பணம் கொடுத்தா?

பணத்துக்கு என்ன குறைச்சல் ? ஒரு ஈமெயில் போட்டேன். பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டிடுத்து. பெருமாள் நா அனுப்பறார் !! தாயார் கவனிச்சுப்பா அப்படின்னு இருந்துட்டா எதுக்குமே கவலைப்பட வேண்டாம்.

இப்ப எனக்கு பசி வந்துடுத்து.

பசி தினம் தான் வரது.  ஷைலஜா அம்மா உரை இங்கே இருக்கு. அதை முதல்லே படிச்சு இன்னம் நன்னா இந்த பாசுரத்தை மனசுக்குள் வாங்கிக்கங்க.



இது என்ன துளசி கோபால் 60 வது ஷஷ்டி அப்த் பூர்த்தி அன்று கிடைச்ச சாப்பாடு மாதிரி இருக்கு.

ஜோர்.ஜோர்.

அது மாதிரி இன்னொரு சாப்பாடு என்னிக்கு கிடைக்கும் என்றே தெரியல்ல.
எல்லாம் +revathi narasimhan கைங்கர்யம்.

அவர் மூலமா அந்த பெருமாளே அனுக்ரஹம் பண்ணி இருக்கார்.

யார் யார் வந்திருக்கிராளோ அவர்களுக்கெல்லாம் தேங்காய்,குங்குமம்,0பழம் வெத்தலை பாக்கு , பக்ஷணம் ஒரு தாம்பூல பைலே போட்டு   கொடு.

ஆச்சு. கோதை கல்யாணம் ஜாம் ஜாம் அப்படின்னு முடிஞ்சது.

எல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்.

*****************************************************************************
இன்னிக்கு எல்லோருக்கும் ஒன்னு சொல்ல மறந்து போயிடுத்தே..

என்ன இது.. கோதை கல்யாணத் திருவிழா.

இதுலே கூட மறந்து போறதுக்கு என்ன இருக்கு ?



ஹாப்பி நியூ இயர் சொல்லுங்கோ.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
*****************************************************************
*****************************************************************
When celebration becomes service,
there is no guilt.
And when service becomes celebration,
there is no pride.

+Sri Sri Ravi Shankar