வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ?! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம்! பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்!
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!
இந்த பாசுரத்திற்கு அழகான பொருள் எனது நண்பர் குமரன் எழுதிய பதிவுக்கு
வழி இங்கே
அவரது வலையில் நான் கண்ட அற்புதமான ஆழ்வார் அவதாரிகை இங்கு தரப்படுக்கிறது.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து!