JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, டிசம்பர் 21, 2013

வாசலிலே பூ விளக்கு கோலம்.

திருப்பாவை ஆறாம் நாளான இன்று

வாசலிலே பூ விளக்கு கோலம்.
+Shylaja Narayan
புள்ளும் சிலம்பின காள் என்று துவங்கும் பாசுரம். திருமதி. ஷைலஜா அவர்கள் அற்புதமாக இந்த பாசுரம் உருவான பின் புலத்தை சொல்கிறார்கள் இங்கே சென்று படியுங்கள்.


இன்றைக்கு தாத்தா திருப்பாவை பஜனை கோஷ்டியில் நாட் கோயிங்.
சென்னையில் இரண்டு நாட்களாக அடிக்கும் பனி காரணமாக , ஜல்ப் பிடித்துக்கொண்டு விட்டது.

தாத்தா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நாங்க போயிட்டு வந்துடறோம். என்று
தாத்தாவின் சிஷ்ய கோடிகள். வாலண்டியர் பண்ண, அவர்
சரி என்றார்.


இன்றைக்கு பிரசாதம் சாம்பார் இட்லி ( நெய் கலந்த சாம்பார்)  ஒரு அம்பது ப்ளேட் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது.

எப்படி செய்வது என்று கேட்டேன். முதல்லே சாப்பிடுங்க என்றார்கள்.


saambar idli
தாத்தா ஒரு மூணு ப்ளேட் போதும் என்று நினைத்தார். இருந்தாலும் அரை ப்ளேட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

ஜலதோஷம் லேசா பீவர் இல்லை மாதிரியும் இருக்கு. இருக்கிற மாதிரியும் இருக்கிறது. 

அதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருந்தால், கண்ணுக்கு நேரே இருக்கும் சாம்பார் இட்லி காணாமல் போயிடும் என்ற கவலை வேற.

இப்ப என்ன பண்ணுவது என்று சக தர்மிணியைக் கேட்டேன்.

பேசாம கண்ணை மூடிண்டு ராம ராம அப்படின்னு சொல்லிண்டு ஜபம் பண்ணுங்க அப்படின்னாள்.

த எண்ட் 
***********************************************************************************************************************************************************************************************************************************************


இராம நின்னே நீ ப்ரோவரா..
இன்னிக்கு சனிக்கிழமை. அனுமார் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றேன். ஒவ்வொரு நாளும் மாருதி பகவானை பிரார்த்தனை பண்ணும்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள் இருக்கின்றன. 


Meditate. A few minutes of deep meditation will connect you with the ocean of intuition deep within you. +Sri Sri Ravi Shankar 

வெள்ளி, டிசம்பர் 20, 2013

அது யாரு அந்த மாயன் ?


அது யாரு அந்த மாயன் ?

என்ன கேட்கற ?

யாரு அந்த மாயன் ?

மாயனா யாரை கேட்கராய் !  எனக்கு எந்த மாமனையும் தெரியாது.

நாராயணா நாராயானா !!
மாயனைச் சொன்னேன்.
நேத்திக்கு அந்த குழந்தைகள் போட்ட கோலாட்டமே  மனசுலே நின்னுண்டு இருந்தது இல்லையா.
இராத்திரி லே ஒரு கனவு.

என்ன .. உனக்கு ஒரு ரூபி வச்ச மோதிரம் வாங்கற மாதிரியா ?

அதெல்லாம் பிஸ்தா.
இங்கே இந்த கனவிலே அந்த குழந்தகள் அத்தனையும் வித விதமா கலர் புல்லா டிரஸ் பண்ணிண்டு வந்து
திருப்பாவை அஞ்சாம் பாசுரத்துக்கு நாட்டியம் ஆடறா பாருங்கோ..

நான் எங்கே பார்த்தேன்.?
 நீ மட்டும் தானே கனவிலே பார்த்தேன் அப்படின்னு சொல்ற.  பாத்த உடனே என்னை எழுப்பக்கூடாதோ...

கனவு கலைஞ்சு போடும் இல்ல.
அதனாலே தான்.
இப்ப பாருங்க...
கண்ணன் நினைச்சான் கனவுலே வந்துட்டான்.

கையைக் கிள்ளிப் பார்த்தேன். நான் தூங்கிக்கொண்டு இல்லை.
கிழவி கனவில் கண்டதை உடனே டவுன்லோடு பண்ணி வச்சு இருக்கிறாள்.

காலை விடிந்து விட்டது. எனக்கு முன்னமேயே வீட்டுக்காரி எழுந்து
இந்த எழுபத்தி இரண்டு வயசுலே வாசல்லே என்னமா ஒரு அழகா கோலம் போட்டு இருக்கிறாள் .

மீனாச்சி என்று அன்பொழுக அழைத்தேன்.

என்ன ?

என்று அந்த  சரவணன் மீனாச்சி சீரியல் ஹீரோயின் குரலில் ரிடார்ட் செய்ய...
நான் தொடர்ந்தேன்.

ரொம்ப அழகா...

ஆகிற வயசுக்கு, இந்த கமேண்டாலாம் தேவையா ?

உன்னை சொல்லலீடி .. கோலத்தை சொன்னேன்.

அதுவா. வாணி முத்துகிருஷ்ணனுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.
இப்ப இந்த நாட்டியத்தை பாருங்க. என்று டி.வி.டி ஐ. ஆன் பண்ண, 




என்ன ஒரு சிரத்தை? என்ன ஒரு பக்தி.

அதுக்கு இந்த குழந்தைகளுக்கு அந்த ஆண்டாளே அனுகிரஹம் பண்ணி இருக்கணும்.

மீனாச்சி, ஏண்டி அந்த அனுகிரஹத்துலே ஒரு அஞ்சு பர்சென்ட் கூட உனக்கு கிடைக்கலையா ?

ஆண்டாள் பெயரைச் சொல்வதற்கும் அந்த திருப்பாவை தனை தினம் தினம் காலை எழுந்தவுடன் பாடவேண்டும் என்று மனசு கொடுத்ததே அந்த தாயார் தானே. !!

ஆமாம். ஆமாம்.

என்ன ஆமாம் என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீரங்கம் வந்தார்.

இந்த உரை பளிச் அப்படின்னு செந்தமிழ் லே அழகா இருக்கிறது இல்லையா.
என்னோட உரையையும் பாருங்க.. என்றார்.

இன்றைய பஜனை கோஷ்டி ஊர்வலத்தைத் துவங்கியது.

தாத்தாவுக்கு மூட்டு வலி பயங்கரமா. நெற்றிக்கு சாலிகிராமம் பாபா கோவிலுக்கு போயிட்டு வந்தார். வாழ்க்கையிலே எத்தனை மேடு பள்ளம் இருக்கும் என்பதை விருகம்பாக்கம் ரோடுகளே ஆட்டோவில் போகும்போதும் சொல்லுகின்றன.

 இருந்தாலும் தத்தக்கா தத்தக்கா என்று அவரும் நடந்தார்.
பாட்டை கேட்டுண்டே தாத்தாவும் போகிறார் ஊர்வலத்துடன்.
 மனசு சொல்றது:
என்னமா அந்த அம்மா பாடறாங்க..

அந்த நாராயணன் நாமத்தை  கேட்டுகிட்டே இருக்கணும். 
நாராயணன் நம்மை அறியாம கூட்டிண்டு போகனும் 



தாத்தா நீங்க உட்காருங்கோ. நாங்க இன்னிக்கு பிரசாதம் எல்லாம் தந்துடரோம் என்று +Balu Sriram வாய்ஸ் தர்றார்.

இன்னிக்கு என்ன பிரசாதம் என்று கேட்பதற்குள் வாசனை மூக்கைத் துளைத்து விட்டது.

இவ்வளவு டேஸ்டா எங்க கிடைக்கிறது என்று கொண்டு வந்தவரை கேட்டேன்.

ஒரு ரோஜா கொத்துடன் பிரசன்னமான அவர்,  கடவுள் காட்டும் பிரத்யேக அன்பு தான் நாம் நம்ம பிரண்ட்ஸ் வழியாக உணரும் நட்பு என்று புள்ளி வைத்த கோலம் போல சிக் என்று ஒரே செண்டன்ஸில் ஒரு உண்மையை புரிய வைக்கிறார்.
+Ramalakshmi Rajan

பத்மா ரிசைப்ஸ் என்று பெங்களூர் ல் இருக்கிறது. ஸ்பெசல் ஆக நிவேத்தியம் என்று சொல்லி வாங்கிண்டு வந்தேன் அவர்களும் சொல்ல வலை நண்பர் எல்லோருமே எஸ். எஸ். என்றார்கள்.

தாங்க்ஸ் .

நண்பர் திரு வெங்கடராமன் பெங்களூரில் தான் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஒரு கூடை நிறையா வாங்கிண்டு வந்திடுவார்.

நாராயணா !!

ப்ளீஸ் டிலே யுவர் விசிட் டில் ஐ ஹாவ் ஹார்ட் புல் ஆப் கேசரி.

த எண்டு
தொடரும்.  நாளைக்கு ஆறாவது பாசுரம் திருப்பாவை

************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
மனசு இருக்கே அது சஞ்சலம் என்பதற்கு ஒரு உதாரணம். 
ரவி சங்கர் அவர்கள் சொல்லுவார்.

The most unreliable thing in your life is your own mind. One minute, it likes s omething, another minute it likes something else. So, your mind goes all over the place. So, you cannot rely on your own mind. Once you know this, you will laugh, you will smile. Never mind: why should I control someone else’s mind when my mind itself is not under my control? Isn’t it? +Sri Sri Ravi Shankar 

வியாழன், டிசம்பர் 19, 2013

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

பார்த்த ஞாபகம் இல்லையோ !!
+Tulsi Gopal
ஏன் இல்லை.. இது எங்கள் அன்பு நண்பர் துளசி மேடம் ஆத்து கோலமும் அதனுள்ளே அவரது பூஜை அறையும்.  

இன்று நாலாம் நாள் திருப்பாவை பாடி பெருமாளை சேவிக்கும்  திரு கோபால் சாருக்காக விசேட பிரார்த்தனை. அவர் முழு நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். பழைய படி துளசி மேடம் உற்சாகமாக பதிவு எழுத துவங்கி இருக்கிறார்.


நான்காவது நாள். விடியற்காலை 5 மணிக்கே ஒரு ஏழெட்டு கலர் கலர் பாவாடை சட்டை போட்டுண்டு சின்னஞ்சிறு சிறுமியர்  கோலாட்டமும் கையுமாக, குதூகலமா  வந்துவிட்டார்கள்.  அவர்களது அம்மாக்கள் கூடவே வந்திருக்கிறார்கள்.


என்ன அமக்களமா இருக்கப்போறது இன்று நினைத்துப்பார்த்தால் அங்கே இன்னும் ஒரு அதிசயம்.


வியந்து போய் நிற்கிறேன். என்ன அற்புதமான பூக்கோலம்.
நாங்க தான் போட்டோம் என்று அந்த குழந்தைகளோட அம்மாக்கள் சொல்லாமே தன முக பாவங்களிலேயே பெருமையாக சொல்கிறார்கள்.

ஒரு விஷயம் துவங்கி விட்டாலே போதும்.
மேற்கொண்டு நடப்பதை பரந்தாமன் பார்த்துக்கொள்கிறான்.
சிகாகோ நகரில் கோலாட்டம் 
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

நாங்கள் எல்லோரும்  திருப்பாவை சொல்லும் கோஷ்டி முன்னாடி  கோலாட்டம் போட்டு கொண்டு வர்றோம் என்கிறது அந்தச் சின்னஞ்சிறுசுகள்.

அந்தக் குழந்தகளோட அம்மாக்கள்  அப்பாமார்களும் எங்கள் திருப்பாவை கோஷ்டிலே சங்கமம். மொத்தம் 30 பேர் துவக்கத்தில்.இருக்கோம்.




+Preethe Sriram அவர்கள் இந்த பாடலை அற்புதமாக பாடி இருக்கிறார்கள். அவருக்கு சுப்பு தாத்தா நன்றி சொல்லவேண்டும்.

மிக்க நன்றி. ப்ரீத்தி ஸ்ரீராம் ..அவர்களே.

சுப்பு தாத்தா காலைலேந்து எழுந்ததிலிருந்து தொண்டை கட்டி இருக்கிறது. எப்படி பாடுவது என்று யோசித்தபோது அந்த பரந்தாமனே இந்த பாட்டினைக் கேள் என்று சொல்லி இருக்கிறார்.

கண்ணதாசன் அற்புத உரை இங்கே.



சத்தமா நாலாவது திருப்பாவை ஆரம்பிக்கிறது.
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல்.

சுப்பு தாத்தா எல்லோருடனும் சேர்ந்து பாடிண்டு வராரே தவிர அவர் நினைவு எல்லாம் ,

இந்தக்குழந்தைகளுக்கு ஊர்வலம் முடிஞ்சப்பறம் என்ன நைவேத்தியம் தருவது என்ற கவலை தான்.

இருந்தாலும் அவன் தானே இதை ஆரம்பிச்சு வச்சான் அவனே பார்த்துப்பான் என்று மனசும் ஒருபக்கம் சொல்ல,

நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ.
சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா வெங்கடேசா கோவிந்தா.
கோவிந்தா கோவிந்தா சீனிவாசா கோவிந்தா

என்று கௌதமன் சார் குரல் கொடுக்க,
திருப்பாவை கோஷ்டி பயணத்தை துவங்குகிறது.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்

திரும்பிய உடனே குழந்தைகளுக்கு இந்த கிழவி என்ன பிரசாதம் கொடுப்பா  என யோசிச்சுண்டே வர்றேன்.  





வந்த எல்லா குழந்தைகளுக்கும் அந்த திருப்பதி லட்டு ஒன்று பிரசாதம் இன்னிக்கு. 

வீட்டுக்காரி மீனாட்சி பாட்டி கிட்டே நைசா கேட்கிறேன். 

ஏதுடி இத்தனை லட்டு ?

எனக்கே தெரியாது.  யாரோ ஒருவர் இன்னிக்கு எங்க உபயமா இருக்கட்டும் அப்படின்னு சொல்லி விட்டு கொடுத்துட்டு போறார். 

எப்படிடி இருந்தார் ?

அதை சரியா கவனிக்கலையே...  திருப்பதிலேந்து நேரே இங்கே வர்றேன் என்று மட்டும் சொன்னார்.

ஆஹா.  பெருமாளே வந்தாரா ?
ஆமாம். சொன்னா நம்ப மாட்டேள் அப்படின்னு ஒரு செல்லிலே ஒரு போட்டொ எடுத்து வச்சேன். இத பாருங்க.


கோவிந்தா கோவிந்தா...


யாரு தந்திருப்பா அப்படின்னு என் மனதிலே ஐயம் தோன்றியதும் சரியா ?



Doubt is simply lack of energy. When you are high in energy, where is the doubt? Doubt comes when the energy is low. +Sri Sri Ravi Shankar 

புதன், டிசம்பர் 18, 2013

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,


திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் வீட்டுக்கோலத்தைப் பார்த்தேன்.
பிரமித்துப்போனேன்.  பார்த்துக்கொண்டே அவர்கள் வாசலிலே நின்று கொண்டே இருந்தேன்.

யாரேனும், யோவ் பெரிசு !! யாருய்யா நீ ? எங்க இந்த காலைலே பனிலே நின்னுகிட்டு இருக்கே ?  வீட்டுக்கு பத்திரமா போய் சேருய்யா . நடு ரோட்டு  வழிலே நின்னுகிட்டு இருந்தா காலைலே பைக் ரேஸ் , கார் ரேஸ் அப்படின்னு யாருன்னாச்சும் நீ யாருன்னே தெரியாதபடி செஞ்சுடுவாங்க..

அப்படின்னு கொஞ்ச நேரம் கொஞ்சி பேசுவார்களோ என்று தோன்றியது.

அந்த நேரம் , கோலத்தின் வரைவாளர் வந்தார்.

தாத்தா ..என்ன வேணும் ? என்றார்.

எங்காத்து வாசலிலும் அந்தக்கோலத்தை ஒரு நாள் போட்டுக் கட்டுமா என்று கேட்டேன்.

 ஓ. எஸ். என்று இங்க்ளிஷில் அவர்கள் சொல்ல, அனுமதி கிடைத்து  விட்டதால் இங்கே மேலே நீங்கள் பார்க்கிறீர்கள்.

தாங்க்ஸ்
+Mythily kasthuri rengan

இன்னிக்கு பஜனை திருப்பாவை
மூன்றாவது பாடல்.
பாடும்போதே ஸ்ரீரங்கம் +Shylaja Narayan அவர்கள் மிகவும் நன்றாக விளக்கம் தருகிறார்கள் தனது பதிவிலே அதையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,
நாமும் நம் பாவைக்கு சாற்று நீராடினால்



நீங்கள் கேட்பது அடானா ராகம். கவிஞர் கண்ணதாசன் உரை.
தமிழ் ஹிந்துவில் கண்ட உரை. அவர்களுக்கு நன்றி.

நேற்று திருப்பாவை பாடல் பாடும்போது +Balu Sriram அவர்கள் எங்கள் வீட்டில் இன்று சக்கரை பொங்கல் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

அடியே நாளைக்கு சக்கரை பொங்கல் என்று சகதர்மணியிடம் சொல்ல, அவளோ,
நாளைப்பாட்டுக்கு நாராயணன் இருக்கான் என்றாள்.

நாளைப்பாட்டுக்கு இல்ல,

 இந்த மார்கழி மாதம் முழுக்கவே நாராயணனே நமக்கு பறை தருவான். ஆனா, என்னிக்கு எனக்கு நீ சக்கரை பொங்கல் தரப்போறே அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிப்புட்டேன்.

சரி, வெல்லம் , பாசிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிபருப்பு, நெய், திராட்சை, எல்லாம் வாங்கிண்டு வாங்க அப்படின்னு உத்தரவு போட,

நானும் அம்பிகா அப்பளம் ஸ்டோருக்கு சென்று,
எல்லாத்துலேயும் ஒரு கிலோ போட்டு பில் போடுங்க அப்படின்னு சொன்னா
அவன் என்னைப் பார்த்து,

சார் ஏலக்காய், முந்திரி எல்லாம் ஒரு கிலோவா வேணும் சிரிக்கிறான்.கேட்கிறான்

பின்னே என்ன பத்து கிலோ வா வாங்க முடியும் என்றேன்.

சார் எதற்கும் வீட்டுக்கு ஒரு செல் லுலே கேளுங்கள். என்கிறான்.

சரி என்று செல் அடித்தால், இவள் செல் எடுத்தாள் பேசினாள்  என்றால் தானே. ரிங் போயிகிட்டே  இருக்குது. எடுக்கிற வழியை  காணோம்.

என்ன  சார், கோவிச்சுக்காம நான் சொல்வதை கேளுங்க.  என்றார்.

நான் வீடுலேயே கோவிச்சுப்பது  கிடையாது.செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் என்று தெரியாதா என்ன  எனக்கு,என்றேன்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்றார் முதலாளி.

அப்ப என்ன தெரியும் ?
முந்திரி இருக்கும் இடம் தெரியல்லையா ?

சார், நீங்க வீட்டுக்கு போய், நிதானமாய் மாமி கிட்டே பேசி அப்பறம் எனக்கு போன் பண்ணுங்க. நான் கொண்டு வந்து தர்றேன். என்கிறார் ப்ரோப்ரைடர்.
எனக்கு வேண்டியவர்.

வீட்டுக்கு போய், அவளிடம் கேட்கலாம் . ஓட்டமும் நடையுமாக சென்றேன்.

 அவளோ, அப்பத்தான் கருத்தம்மா வை கவனமாக பார்த்துக்  கொண்டு இருக்கிறாள்.  அதற்கப்பறம், மண் வாசனை, சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் , ஆபீஸ் என்று போனால், மணி 11 ஆகிவிடும். அம்பிகா அப்பளம் ஸ்டோர்ஸ் கடையை சாத்தி விடுவார்கள்.

அப்பறம் நாளைக்கு சக்கரை பொங்கல் அம்பேல் ஆகிவிடும் என்ற பயம்.

ஒரு பவ்யமாக அவள் பக்கத்தில் நின்றேன்.

ஒரு இடைவேளை போது என்னை கவனித்த பார்யாள் என்ன விசேஷம் என்று கண்களால் கேட்க, நான் நடந்ததை நடந்தபடி, உள்ளத்தை உள்ளவாறே சொல்ல, அவள் திரும்பவும்,

நாராயணா, நாராயணா என்றாள்.

ஏன் நாராயணனைக் கூப்பிடற ? அவர் இப்போதே வந்துட்டா சக்கரை பொங்கல் எந்த ஜன்மத்திலே நான் சாப்பிடறது ?

 சக்கரை பொங்கல் முதல்லே சாப்பிட்டு விட்டு பிறகு அவர் வந்தா நல்லதா இருக்குமே , என்று நான் சொல்ல,

நான்  போன் போட்டு சொல்லிவிடுகிறேன் என்று செல்லை பிடுங்கினாள் .

யாருக்கு ? நாராயணனுக்கா ? என்றேன் திரும்பவும் பதட்டத்துடன்.

இல்ல, உங்க மாமியாருக்கு , என்றவள் செல்லில் கவனம் செலுத்தினாள்.

யாரு, அம்பிகா ஸ்டோர்ஸ் ஆ ... உடனே அரை கிலோ பாசிப்பருப்பு, ஆவின் நெய் 200 கிராம், முந்திரி பருப்பு 200 கிராம், ஏலக்காய் 50 கிராம் அச்சு வெள்ளம் ஒரு அரை கிலோ அனுப்புங்கோ என்றாள்.

அங்கிருந்து என்ன சொன்னாரோ அவர் ..

நல்ல வேளை . நான் பிழைத்துக்கொண்டேன் என்றாள்.

இவ கிடக்கா, சக்கரை பொங்கல் எப்படி செய்யணும் அப்படின்னு நம்ம தெரிஞ்சு வச்சுப்போம் என்று நானும் இன் த மீன் டைம்  நெட்டிலே பார்த்தேன்.



இந்த சக்கரை பொங்கல் இருக்கிறதே...

அத வைஷ்ணவர்கள் அக்கார வடிசல் அப்படின்னு ஒரு கரஸ்பாண்டிங்க் டிஷ் a little different. அவர்களோட டிஷ் தனி சுவை.

ஆனா இதெல்லாமே சேர்ந்து ஒரு பத்து பேரோட சாப்பிடுவது தனி சுகம்.

இன்றைக்கு ஒரு ஸ்ட்ராங் காபி. இதோ இங்கே.

We need to develop the habit of sharing our joy with others. If you are happy, infect others with your happiness; don't just keep it to yourself. Any action done with this idea is service and the best form of service is uplifting someone's state of mind. +Sri Sri Ravi Shankar 


நாளைக்கும் மறக்காம வாங்க...


செவ்வாய், டிசம்பர் 17, 2013

வையத்து வாழ்வீர்காள் !! நாமும் நம் பாவைக்கு..

இன்றைய கோலம் திருமதி. வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலைப்பதிவிலிருந்து .

.இதோ !! வைகறைப் பொழுதிலே பரந்தாமனைப் பாடிட பஜனை கோஷ்டி தன் பயணத்தைத் துவங்கிவிட்டது.
  வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு ..


அது சரி, என்ன இது சுப்பு தாத்தா குரல் நடுக்கமாக இருக்கிறது ?

ஒண்ணுமில்லை. மீனாச்சி பாட்டி

இந்த வயசான காலத்துலே கொட்டற பனிலே இதுமாதிரி எல்லாம் தேவையா ?
நாளைக்கு ஜலதோஷம் கபம் அப்படின்னு வந்தா அந்த இருமல் வந்தா உங்களை இரண்டு மாசத்து விடாதே  

அப்படின்னு ஊர்வலம் போகும்போது ஒரு வார்த்தை சொல்லி இருப்பார்கள்.

அதனாலே என்ன ?

திரும்பி வந்ததும் சூடாக ஒரு காபி சாப்ப்பிடால் எல்லாம் சரியாயிடும்.

அது சரி, இன்னிக்கு பஜனை முடிஞ்ச உடனே என்ன நைவேத்தியம்.? என்ன வினியோகம்.

கௌதமன் சார் வீட்டிலேந்து செய்து கொண்டு வந்த ரவா பொங்கல் இன்னிக்கு .

ஆஹா... என்ன மணம் என்ன மணம் !!


மணம் இருக்கட்டும் ஸ்வாமி !! இத்தனை பேருக்கு செஞ்சு கொண்டு வந்து தரனும் அப்படின்னா ஒரு மனசு வேண்டும் இல்லையா.

அது அவருக்கு அந்த பரந்தாமன் தந்து இருக்கார்.

+Gowthaman K G க்கு ஜே . சார் ரொம்ப தாங்க்ஸ்.

இது எப்படி பண்ணறது ?

அதெல்லாம் தெரிஞ்சுக்க இங்கே போங்க.

காபி வந்தாச்சா?

ஆஹா...


பிரமாதம்.
ஆமாம். நாளைக்கும் இது மாதிரி பொங்கல் காபி ??

முதல்லே சரியான நேரத்துக்கு திருப்பாவை பஜனைக்கு வரணும். அப்பத்தான் வினியோகம்.



திங்கள், டிசம்பர் 16, 2013

கண்ணா கண்ணா ஓடி வா

IDUKKU PULLI KOLAM 
இந்த கோலம் கமலாஸ் கார்னர் லேந்து கொண்டு வந்தேன்.
ரொம்ப தாங்க்ஸ்.
http://kolangal.kamalascorner.com/2010/01/kolam-no265.html
idukku pulli kolam
Courtesy: kolangal: kolam 265
மாதங்களில் நான்
மார்கழி  என்றான் கண்ணன்.  அப்படி என்ன அந்த மார்கழிக்கு விசேஷம் என்று ஆன்மீக பதிவாளர்களில் முதன்மையானவரும் அந்த ஆண்டாளே இவர்தானோ என்று அதிசயிக்கச்செய்பவருமான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் பதிவுக்குச் சென்று 

அந்த ரங்கனிடம் ஐக்கியமான ஆண்டாள் வைர மூக்குத்தி சேவையை தரிசித்து விட்டு ,

இங்கே திரும்பவும் வருவோம்.

அந்த கண்ணனை ஓடி வா என்று அழைப்போம்.

கண்ணா கண்ணா ஓடி வா சின்ன கண்ணா ஓடி வா.

குருவாயூர் கண்ணன்
புல்லாங்குழலை ஊதி வா.



அந்த காலத்தில் ஐம்பது வருஷங்களுக்கு முன்பாக திருச்சி ஆண்டார் வீதியிலே விடியற்காலையிலே வைகரைப்பொழுதிலே திருப்பாவை, திருவெம்பாவை பதிகங்களை பாடிக்கொண்டே ஒரு கோஷ்டி செல்லும்.

அந்த கோஷ்டியுடன் நானும் பல முறை சென்று இருக்கிறேன். பெரிய பக்தி பெருவெள்ளம் என்று ஒன்றும் இல்லை.

அவர்கள் பஜனை முடிவிலே நான்கு வீதிகளும் சுற்றி முடிந்தபின்னே ஒரு தொன்னையில் வெண் பொங்கல் தருவார்கள்.

இன்று சுப்பு தாத்தா மார்கழி திங்கள் என்று முதல் பாடலை பாடுகிறார்.

தமிழ் ஹிந்துவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லவேண்டும். கண்ணதாசன் அவர்களின் உரையை இன்றைய நாளிதழில் இட்டு இருக்கிரார்கள்.




இன்று வெண் பொங்கல் வடை தனது கிருஹத்தில் செய்து கொண்டு வருவதாக நமக்கு செய்தி அனுப்பி இருக்கும்

+Balu Sriram

அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

அது சுகம் சுகம். அவர்களே தினமும் கொண்டு வந்து தரவேண்டும் என எதிர்பார்ப்பது தவறாகுமே என்று மனதில் தோன்றியதால், நாளை முதல் நாமே பொங்கலை தயார் செய்யவேண்டும் என்பதால், இந்த இடத்துக் சென்று எப்படி பொங்கலை தயாரிப்பது என்று ஒரு கிராஷ் கோர்ஸ் செய்யவும்.

பொங்கல் ரெடி.
சாப்பிட துவங்குவோமா...
நீங்கள் அதை சாப்பிட்டு முடிக்குமுன்னே காபி தயாராகி விடும்.
இன்று பால் கொஞ்சம் லேட்டாகி வருகிறது போல இருக்கிறது.
ஆத்துக்காரி எழுந்து கொள்வதும் லேட் ஆகிவிட்டது.

காபி வருவதற்குள்
நமது தஞ்சை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள், மார்கழி மாதச் சிறப்பு என்ன என்பதை அழகென எழுதியிருக்கிறார்கள்.

அதை சத்தமாக படிப்போம்.

காபி வந்துவிட்டதே.

சுவையான காபி. அதை சூடாக சாப்பிடுங்கள்.

வந்த அத்தனை பேர்களுக்கும் தாங்க்ஸ்.

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

மார்கழி திங்கள் அல்லவா !!

MARGALI THINGAL ALLAVAA

மார்கழி திங்கள் அல்லவா !!

இதை நான் க்ளிக் செய்யவா ?
இது எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் ஆத்துக் கோலம் அல்லவா..!!

இது அவரோட காபி ரைட் அல்லவா !!

இருந்தால் என்ன ?

அவருக்கு சூடா ஒரு தஞ்சாவூர் டிகிரி காபி கொடுத்து விட்டு
இதை அப்படியே இல்லாம கொஞ்சம் கலர் அடிச்சு
எங்காத்து முன்னாடி வரைஞ்சுட்டேன்.

ஸ்ரீராம் சார். கௌதமன் சார் ...
+kg gouthaman
சீக்கிரம் காப்பி சாபிட வாங்கோ
சூடான பொங்கல் வடை ரெடி.


சூடான இட்லி வடை கேசரி சாப்பிட்டு முடிச்சப்பறம் காபி கொண்டு வந்து தரேன்.
சக்கரை ஹால்ப் ஆக போடணுமா ..? இல்லை நார்மலா ?

ஹால்பும் போடலாம். full ம் போடலாம்.
காப்பியை பத்தி சொல்லுங்கோ.

ராமா ராமா ..
+Raman ES
என்ன சுப்பு தாத்தா சார்.
ஆஹா நீங்க வந்துட்டேளா..
சரி.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
+Madhan Nagasubramaniam +Mrityunjeyan S
+
திவ்ய நாமம் சொல்லுங்கோ...
+Desigan Ramanujam
+Dindigul Dhanabalan
+Sethuraman Anandakrishnan
சொல்றேன். ஆனா இந்த ஆனந்தமான காபி எப்படி போடுகிறீர்கள் அப்படின்னு
ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் பண்ணுங்களேன்.

அப்படியா பாருங்கா. 

THIVAANANDHAM. PERAANANDHAM.

திவ்யானந்தம் பேரானந்தம்.
+Rajeswari Jaghamani
அந்த ஆனந்த நடராஜ பெருமானை தரிச்சுண்டே
அந்த பெருமாள் சாக்ஷாத் பாதங்களை
அடியேன் அடியற  போது  இது மாதிரி
ஆத்துக்காரி கையிலினாலே ஒரு காப்பி
சாப்பிட்டுகொண்டே
கோவிந்தா கோவிந்தா அப்படின்னு சொல்லிண்டே
காணாம போயிடனும்.

சுவாமி...நாளைக்கும் நான் வருவேன்.
கண்டிப்பா வாங்கோ ஸ்ரீராம்.
+Balu Sriram
உங்களுக்காக தினம் தினம் மார்கழி மாதம் முழுக்க
காபி தர்றேன். 

புதன், நவம்பர் 20, 2013

இதுவும் ஒரு ஸ்பெசல் டிரைனிங் ப்ரோக்ராம்.

பஞ்ச கச்சமாக வேட்டியை கட்டிகொள்வது எப்படி ?

இதுவும் ஒரு ஸ்பெசல் டிரைனிங் ப்ரோக்ராம்.

கோபால், போர்ட்ரான், ஸீ , சி ப்ளஸ் , எல்லாம் எப்பவோ கத்துட்டு மறந்தும் போயிட்டேன். ஆனா இந்த பஞ்ச கச்சமாக வேட்டியை கட்டிகொள்வது மட்டும் பார்க்கிறேன். இந்த அம்பது வருஷத்திலும் 35 மார்க் கூட வாங்க முடியவில்லை. 


மடிசார் புடவை ஒன்பது கஜம் கட்டுவது எப்படி ?

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா ?

அந்த டான்ஸ் ஆடணும் அப்படின்னா இந்த டிரைனிங் யூஸ்புல் ஆக இருக்கும் இல்லையா ?


ஞாயிறு, நவம்பர் 17, 2013

kaarthigai deepam.

திருமதி பார்வதி இராமச்சந்திரன் அ வர்கள் தனது வலையில் கார்த்திகை தீபம் பற்றி அற்புதமா ஒரு பாடல் எழுதியிருக்கிறார்கள். 


வெள்ளி, நவம்பர் 01, 2013

தீபாவளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்.


எங்கள் உற்றம், சுற்றம் 
எல்லோருக்கும் எங்கள் உளம் கனிந்த தீபாவளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்.