வியாழன், பிப்ரவரி 26, 2009
மாதேஸ்வரி
கவிதையை ஒரு ராகமாலிகையில் பாட நினைத்துப் பாடத்துவங்கினேன். முதல் இரண்டு மூன்று சரணங்கள் பாடியிருப்பேன். சாதாரணமாக, முதலில் ஒரு ஒத்திகை போலத்தான் பாடுவேன். அது சரியாக இருந்தால் அல்லது இதற்கு மேல் சரியாக முடியாது என்று தோன்றாத வரை அதை நான் எடிட் செய்து கொண்டே இருப்பேன்.
ஆனால், மாதேஸ்வரி எனும் வார்த்தை அடங்கிய சரணத்தை நான் பாடும்போது ஒரு அற்புதம் நடந்தது. அதை ஒரு கோயின்ஸிடன்ஸ் என்று சொல்லிவிடலாம். ஆனால்,
புத்தி சொல்வதை மனம் எப்பொழுதும் ஒப்புவதில்லை அல்லவா ?
நான் மாதேஸ்வரி என்று வார்த்தை பாடும்பொழுது, எனது மகளுக்கு ஸ்டாம்போர்டு
பிரசவ மருத்துவகத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி ஸெல் ஃபோனில் வருகிறது. அதை என்
மனைவி என்னிடம் சொல்கிறாள். என் மனவியின் குரல் கேட்பதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். புவனேஸ்வரியை மாதே என்று அழைக்கும்பொழுது
ஒரு மழலை பிறந்த செய்தி எனக்கு ஒரு மிராகில் ஆக த் தெரிந்தது.
கேட்பவருக்கு இந்த ராகமாலிகை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. அடாணா,
சஹானா, பூபாளம், மோஹனம் போன்ற ராகங்கள் பிரதானமாகத் தெரியவரும்.
அன்னை அளிப்பது ஒரு புன்னகைதான் எனினும்
அதை களிப்பதில் எத்துணை வகை உள்ளது !!
அதுவும் அன்னையின் அற்புதமே !!
பாடலைக் கேட்க இங்கே வாருங்கள் அல்லது
யூ ட்யூபில் எனை ஆளும் புவனேஸ்வரி என்று ஸ்ரச் செய்யவும்.
சுப்பு ரத்தினம்.
புதன், பிப்ரவரி 25, 2009
திங்கள், பிப்ரவரி 23, 2009
கருணைக்கு ஏது எல்லை!
ON THE EVE OF MAHA SHIV RATHRI DAY, MADAM SHYLAJA HAS COMPOSED AN INVOCATION SONG ON LORD SHIVA. THIS IS SUNG (OR PERHAPS ATTEMPTED TO BE SUNG ) IN RAAG MUKARI.
First Song
PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE BLOG
WHERE YOU FIND THE CONTEXT OF THIS SONG BY MADAM SHYALAJA
COURTESY: SHYALAJA MADAM.
நீரினை சிரசில் கொண்டு
நெருப்பினை கையில் கொண்டு
பாரினில் பக்தர்தம்மை
பாசமுடனே காக்கும்
ஈசனே சிவனே போற்றி!
இறைவா உன் திருத்தாள்போற்றி!
வாசமாய் வாழ்க்கை மாறிட
வணங்குவோம் சிவனின் பாதம்
சிவம் என்று சொல்லும்போதே
சிந்தையது தெளிவு பெறும்
அவன் கருணைகங்கை
ஆறாகப் பாய்ந்துவரும்
நினைவெலாம் சிவமயம்
நித்தியமென்றாகிவிட்டால்
கனவிலும் எமபயமில்லை
கருத்தினில் இதனைக்கொள்வோம்!
அன்பிற்குமறுபெயராய்
அகிலத்தை ஆளுபவன்
என்புக்கு உள்கடந்துமனத்தில்
ஏகாந்தமாய் இருக்கின்றவன்
உருவமாய் உள்ளவனே
உள்ளத்தில் உறைவதை
உணர்ந்தபின் தாழ்வில்லை
உமாமகேசுவரனின்
கருணைக்கு ஏது எல்லை!
புதன், பிப்ரவரி 18, 2009
Let Goddess Visalakshi Bless Kavinaya and her family
Madurai Meenakshi, Kasi Visalakshi, Kanchi Kamakshi, Chamundeswari, Abhirami all represent the One Goddess who showers all Her Best Blessings on all who worship Her with purity of heart.
சனி, பிப்ரவரி 14, 2009
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
This second version was taken first. Both are raga malikas. In the first, one can find jonpuri and bhoopalam in addition to kanada, sahana, atana, hindolam etc.
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
My appreciation for the efforts of Mr.Kumaran not only for this posting of This Ashtagam but also for the in-depth writings on aanmeeka topics in his blog.
God Bless him and his family.
மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)
செவ்வாய், பிப்ரவரி 10, 2009
Saravana Bhavan in Edison
அமெரிக்காவுக்கு வ ந்து இன்றுடன் 15 நாட்களாகிவிட்டன. ந்யூ ஜெர்ஸியில் அமக்களமா ஒரு காஃபி சாப்பிட்டேன். பேஷ் பேஷ் என்று சொல்லும்படியாக
இரு ந்தது என்று சொன்னாலும் நம்ம தஞ்சாவூர் காஃபிக்கு இணையாகச் சொல்ல
முடியாது.
இங்கு எல்லோரும் காஃபி என்றாலே ஒரு பெரிய டம்ளரில் முக்காலே மூணு வீசம் பங்கு
டிகாஷனை (அதுவும் தண்ணியாக ) தருகிறார்கள். பக்கத்திலே போனால் அங்கு ஹாஃப், ஹாஃப் என்று ஒரு பால் ஒரு ஃப்ளாஸ்கில் இருக்கிறது. அது ஜில் பால். அதை சற்று ஊத்திக் கல ந்தாலே காஃபி ஜில்லிட்டுப் போய்விடுகிறது. அதைத் திரும்பிக் கொண்டுபோய் மைக்ரோ ஓவனில் ஒரு 20 செகன்டுக்கு சூடு செய்து விட்டு சாப்பிடவேண்டும். சில பேர் அதில் பாதியை சாப்பிட்டு விட்டு, மிச்சத்தை அப்படியே
பாக் செய்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். நல்ல காஃபியாக இரு ந்தால், மிச்சம் இருக்குமோ ?
. இவர்களுக்கு ஒரு தஞ்சாவூர் காஃபி என்றால் அதன் சுகம் தெரியுமா என்ன?இன்னமும் 111 நாட்கள் இங்கே இருக்கவேண்டும். பிறகு சென்னைக்கு போய் அம்பத்தூர் க்ருஷ்ணா காஃபி கடைலே பிளான்டேஷன் ஏ சிக்கரி கலக்காமே வாங்கி அதில் முதல் டிகாஷன் ஸ்ட்ராங்கா எடுத்து திக் பாலோட கல ந்து சாப்பிடவேண்டும். அதன் சுகமே சுகம்.
ந்யூ ஜெர்சிக்குப்போகும் வழியிலே தஞ்சாவூர் ரெஸ்டாரன்ட் ஒன்று இருக்கிறது. 1980 லே இங்கு வ ந்த ஒரு தஞ்சாவூர் காரர் இங்கே ஹோட்டல் ஒன்று அதே மாதிரி நெய் ரவா வெங்காய ஸ்பெஷல் மசாலா தோசை, ஊத்தப்பம், வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி அமக்களமாக தருகிறாராம். விலை 30 டாலராம். ( நம்ம ஊர் மதிப்பிலே 1500 ரூபாய். ) தோசை ஸ்பெஷலிஸ்ட் என்ற போதிலும் இட்லி வடை, பூரி, எல்லாமும் கிடைக்குமாம்.
பிரிட்ஜ் வாடடருக்குப்போய் அங்கு வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்றபோது இரவு
மணி 8.30 . ஜோ ஜோ பாடி பகவானை தூங்க வைக்கிறார்கள். கோவில் சுத்தமாக இருக்கிறது. பக்தர்கள் நிதானமாக அமைதியாக க்யூவில் நின்று தரிசிக்கிறார்கள். பட்டர் கர்பக்ருகத்தில் காலில் ஸாக்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பாவம். பாலாஜி பகவான் மட்டும் அப்படியே பீதாம்பரத்தில் நம்ம ஊர் டிரஸ்ஸிலே இருக்கிறார்.அபிஷேகம் செய்த பால் தீர்த்தம், சடாரி எல்லாம் நம்ம பெருமாள் கோவில்கள் மாதிரியே ச்ம்பிரதாயம். அக்ஷதை, குங்குமம் , துளசி பிரசாதம். அதை வாங்கிக்கொண்டு இந்தப்பக்கத்தில் நவக்ரகம் . அதையும் வேயுறு தோளி பங்கன் சொல்லிக்கொண்டே மூன்று சுற்று சுற்றி வந்து சரி, திரும்புவோம் என்று வந்தால், அங்கு கான்டீன். பொங்கல் 3 டாலர். காஃபி 1 டாலர்.டீ ஒரு டாலர்.லட்டு 3 டாலர். காஃபி மட்டும் சொல்லக்கூடாது. காஃபி மாதிரி இல்லை. டீ சாப்பிடவேண்டியதுதானே என்று என் துணைவி என்னை இடிக்கிறாள். அதில் ஒரு வாய் ஸிப் பண்ணிப்பார்த்தேன். அது தேவலை. கோவிலுக்கு உள்ளே வெளியே போகும்போது சூடான் காற்று நம் மேல் விழ் இதமாக இருக்கிறது.மனசுக்கும் ஒரு இதம். பெருமாள் எங்கேயும் இருக்கார். அவர் நம்மை ரக்ஷிப்பார் என்று நினைத்துக்கொண்டேன். நம்ம ஊர் ஸ்ரீரங்கத்து பட்டாச்சாரியார் கள் தக்ஷிணை டிமான்ட் செய்வது ஞாபகம் வந்தது.இவர்கள் வாய் திறப்பதில்லை. ஆனால் டாலர் டாலராக அவர்கள் தட்டில் விழுகிறது. எல்லாம் பெருமாள் அனுக்ரஹம்.
திரும்பவும் ந்யூ ஜெர்ஸியிலிருன்து ஸ்டாம்ஃபோர்டு வரும்போது எடிஸன் வழியாக வ ந்தோம். அங்கு ஓக் ட்ரீ என்னும் வீதியில் இந்திய நாட்டு க்க்டைகள் ஏராளம். நம்ம டி. நகர் அமைதியாக இருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ ? இந்தியர்கள் அதுவும் சென்னைவாசிகள் நிறைய போக்குவரத்து இருப்பதால், சாலையிலும் சென்னைபோலவே டிராஃபிக் கொஞ்சம் அதிகம். அதே சமயம் சாலை டிஸிப்ளினும் குறைவு. நம்ம ஊர் சரவண் பவன், தமிழில் போர்டு போட்டு இருக்கிறார்கள்.ரவா தோசைக்கு மோர்க்குழ்ம்பு ஸைட் டிஷ் உண்டு என்றார். ஒரு சபலம். உள்ளே போய் ஒரு வெட்டு வெட்டலாமா என்று என் மாப்பிள்ளை கேட்டார். இப்ப வேண்டாம், ஊருக்குத் திரும்பும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.
சனி, பிப்ரவரி 07, 2009
முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்
முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்
முத்து மாரி யம்மா - நா
முன்ன செஞ்ச வெனையெல்லாம்
முழுக வெப்பா யம்மா
கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
கோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா
சித்தங் கலங்குதடி
சமயபுரத் தம்மா - நீ
சித்த வந்து கண்ணு தொறக்க
வேணுமடி யம்மா
பித்துப் புடிக்குதடி
பாளையத்து அம்மா - நீ
பெத்த புள்ள கலங்குறத
பார்ப்பதென்னடி சும்மா?
--கவிநயா
Please click at the title to log on to poetess' blog
வியாழன், ஜனவரி 22, 2009
பெருமாளின் கருணை என்னே !
- இருபத்தி ஒன்று சனவரித்திங்களன்று அதிகாலை 01.00 இருவரும் புறப்பட்டோம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு.
- .ஜெட் வேகத்தில் பறந்தோம். ஜெட் விமானத்தில்.
- உய்ர உயர வானத்தில் உச்சியை அடைந்தோமா ? இல்லை உச்சியென்பது என்னும் மிச்சமிருக்குமா !!
- நிற்பது போலத்தோன்றும் விமானம் பறப்பது 700 கிமி க்குமேல் என்று வளா வளாவென ஓயாது பேசுவது எதிரே உள்ள டி.வி. திரை.
- நிற்பதுவே நடப்பதுவே எல்லாமே சொப்பனந்தான் என்று பாடிய பாரதியின் பாடல் நினைவுக்கு வர, பயணத்தைத் தொடர்ந்தோம்.
- பகல் எங்களைத் தொடர அகல்கிறது இரவு
- ஒரு காஃபி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கையில் அருகில் வந்த ஓர் நங்கை காஃபி என்கிறாள்.தருகிறாள். ஆகா இதுவன்றோ ஆண்டவன் அருள் என நினைக்கிறேன்.
- அவசர அவசரமாக அதை நான் உறிஞ்சுகிறேன்.
- முகம் சுளிக்கிறேன். மனைவி பக்கம் திரும்புகிறேன். என்ன இவ்வளவு சக்கரை போட்டு, பாயசம் போல் பண்ணியிருக்கிறார்கள் என்கிறேன்.
- சரிதானே ! இன்று நமது 42 ஆவது திருமண நாள் அல்லவா என்கிறாள். எனது இல்லக்கிழவி.
- ஆகா ! நமது 67 வருட வாழ்க்கையில் ஒரு திருமண நாளை 40000 அடி உயரத்தில் கொண்டாடுகிறோமா !!
- எண்ணம் இனிக்கிறது. கரு வண்ணக்காபியும் சுவையாகிறது.
- பயணம் தொடர்கிறது.வானத்து ஊர்தியின் அலுவலர் பணிவும் அன்பும் மனத்தைக் கவர்கிறது.
- பிரஸ்ஸலஸில் பிறமொழி பேசும் நங்கை ஒருவள் எனது மனைவிக்கு உடன் பிறவாத தங்கையாக செயல் படுகிறாள்.
- ந்யூ யார்க் வருகிறது. அதன் வ்யூவே பிரமிக்கச்செய்கிறது. வானத்திலே கதிரவன் ஒளி கண்களைக்கூச வைப்பினும் குளிரோ எங்கள் உடலைக் குலுங்க வைக்கிறது.
- கஸ்டம்ஸ், பாஸ்போர்ட் எல்லாமே கஷ்டம் கஷ்டம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், எங்களுக்கோ எங்கேயும் ஏக மரியாதை. சொன்னார்கள் வயதானவர்களுக்கு இங்கே தனியான கவனிப்பாம்.
- அத்தனை நூறுபேர் வரிசையில் நிற்க, வீல் சேர் பயணிக்குத்தனி வரிசை.
- எத்துணை பணிவு எத்துணை பரிவு !! சொல்லி மாளாது. அமெரிக்க அன்புக்கு உளமார நன்றி.
- வீடு வந்ததும் கதவைத் திறந்தேன். ஆம் எனது வலை நண்பர் ஜீவாவின் வலைக்கதவைத் திறந்தேன்.
- ஆகா ! பெருமாள் நிற்கிறார். ஸ்ரீ நிவாஸத் திரு வேங்கட முடையான என உள்ளமுருகப் பாடல் கேட்கிறது. ரஞ்சனி பாடிக்கொண்டிருக்கிறார் Courtesy: Youtube. Additional Courtesy: http://jeevagv.blogspot.com பெருமாளின் கருணை என்னே ! ஆகா ! இந்த 42 வருட திருமண வாழ்க்கையில் இப்படியொரு இனிதான ஒரு நாள் என்றும் கண்டதில்லையே !
சனி, ஜனவரி 17, 2009
Today is Happy BirthDay of Sanchu our Grandkid
A VERY HAPPY HAPPY BIRTHDAY TO YOU SANCHU.
In case the above video is not opening ( there appears to be some service provider issues relating to uploading perhaps ! for the last few days.) please click or cut and paste, the following linnk.http://www.esnips.com/doc/a1f5db2f-c8ef-45eb-8327-3f819e5ac6e5/HAPPY-BIRTHDAY-Sanju
(There is one mistake in this video. Sanju to find out what is that.Do it yourself. Don't get help from Mom or Dad.)
One more quiz for Sanchu: What is 0101010 + 101010 + 110101 + 1001001 + 1 + 1001 = ? ( Only two minutes are allowed.)
வெள்ளி, ஜனவரி 09, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)