JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 22, 2009

பெருமாளின் கருணை என்னே !

  1. இருபத்தி ஒன்று சனவரித்திங்களன்று அதிகாலை 01.00 இருவரும் புறப்பட்டோம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு.
  2. .ஜெட் வேகத்தில் பறந்தோம். ஜெட் விமானத்தில்.
  3. உய்ர உயர வானத்தில் உச்சியை அடைந்தோமா ? இல்லை உச்சியென்பது என்னும் மிச்சமிருக்குமா !!
  4. நிற்பது போலத்தோன்றும் விமானம் பறப்பது 700 கிமி க்குமேல் என்று வளா வளாவென ஓயாது பேசுவது எதிரே உள்ள டி.வி. திரை.
  5. நிற்பதுவே நடப்பதுவே எல்லாமே சொப்பனந்தான் என்று பாடிய பாரதியின் பாடல் நினைவுக்கு வர, பயணத்தைத் தொடர்ந்தோம்.
  6. பகல் எங்களைத் தொடர அகல்கிறது இரவு
  7. ஒரு காஃபி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கையில் அருகில் வந்த ஓர் நங்கை காஃபி என்கிறாள்.தருகிறாள். ஆகா இதுவன்றோ ஆண்டவன் அருள் என நினைக்கிறேன்.
  8. அவசர அவசரமாக‌ அதை நான் உறிஞ்சுகிறேன்.
  9. முகம் சுளிக்கிறேன். மனைவி பக்கம் திரும்புகிறேன். என்ன இவ்வளவு சக்கரை போட்டு, பாயசம் போல் பண்ணியிருக்கிறார்கள் என்கிறேன்.
  10. சரிதானே ! இன்று நமது 42 ஆவது திருமண நாள் அல்லவா என்கிறாள். எனது இல்லக்கிழவி.
  11. ஆகா ! நமது 67 வருட‌ வாழ்க்கையில் ஒரு திருமண நாளை 40000 அடி உயரத்தில் கொண்டாடுகிறோமா !!
  12. எண்ணம் இனிக்கிறது. கரு வண்ணக்காபியும் சுவையாகிறது.
  13. பயணம் தொடர்கிறது.வானத்து ஊர்தியின் அலுவலர் பணிவும் அன்பும் மனத்தைக் கவர்கிறது.
  14. பிரஸ்ஸலஸில் ‌ பிறமொழி பேசும் நங்கை ஒருவள் எனது மனைவிக்கு உடன் பிறவாத தங்கையாக செயல் படுகிறாள்.
  15. ந்யூ யார்க் வருகிறது. அதன் வ்யூவே பிரமிக்கச்செய்கிறது. வானத்திலே கதிரவன் ஒளி கண்களைக்கூச வைப்பினும் குளிரோ எங்கள் உடலைக் குலுங்க வைக்கிறது.
  16. கஸ்டம்ஸ், பாஸ்போர்ட் எல்லாமே கஷ்டம் கஷ்டம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், எங்களுக்கோ எங்கேயும் ஏக மரியாதை. சொன்னார்கள் வயதானவர்களுக்கு இங்கே தனியான கவனிப்பாம்.
  17. அத்தனை நூறுபேர் வரிசையில் நிற்க, வீல் சேர் பயணிக்குத்தனி வரிசை.
  18. எத்துணை பணிவு எத்துணை பரிவு !! சொல்லி மாளாது. அமெரிக்க அன்புக்கு உளமார நன்றி.
  19. வீடு வந்ததும் கதவைத் திறந்தேன். ஆம் எனது வலை நண்பர் ஜீவாவின் வலைக்கதவைத் திறந்தேன்.
  20. ஆகா ! பெருமாள் நிற்கிறார். ஸ்ரீ நிவாஸத் திரு வேங்கட முடையான என உள்ளமுருகப் பாடல் கேட்கிறது. ரஞ்சனி பாடிக்கொண்டிருக்கிறார் Courtesy: Youtube. Additional Courtesy: http://jeevagv.blogspot.com பெருமாளின் கருணை என்னே ! ஆகா ! இந்த 42 வருட திருமண வாழ்க்கையில் இப்படியொரு இனிதான‌ ஒரு நாள் என்றும் கண்டதில்லையே !