கோவில்களில் ராகங்கள்!
ச.நாகராஜன்
பாரத தேசத்தில் இசைக்குத் தனி இடம் உண்டு.
72 மேளாகர்த்தா ராகங்கள் அடிப்படையான ராகங்கள். இதிலிருந்து உதயமாகும் ஜன்ய ராகங்களுக்கு கணக்கே இல்லை. சுமார் 30000 ராகங்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட பெர்முடேஷன் காம்பினேஷன் படி பல லட்சம் ராகங்கள் உருவாகக் கூடும்.
இவற்றின் பயனையும் நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
வியாதி போக ஒரு ராகம், உடம்பின் வலி போக ஒரு ராகம், எழுந்திருக்கும் போது ஒரு ராகம், தூங்க வைக்க ஒரு ராகம், அழுகைக்கு ஒன்று, ஆனந்தத்திற்கு ஒன்று, சக்தி பெற ஒன்று என்று இப்படி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதற்குரிய ராகத்தை நமக்குத் தந்துள்ளனர்.
அதே போல கல்யாணத்தில் பாட வேண்டிய ராகங்கள் உண்டு; ஒப்பாரிக்கு ஒரு இசை உண்டு.
கோவில்களில் பாட வேண்டிய ராகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆறு கால பூஜை என்பது நமது ஆலயங்களில் ஆறு தடவைகள் நடக்கும் பூஜை நேரத்தைக் குறிக்கும்.
ஒவ்வொரு கால பூஜைக்கு உரித்த ராகங்கள் உண்டு.
ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டு மணி நேரங்களாகப் பிரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பாட வேண்டிய ராகங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணலாம்.
அதிகாலை 4 மணி முதல் 6 மணி முடிய
பூபாளம்
பௌளி
மலயமாருதம்
வலசி
நாதநாமக்ரியை
மாயாமாளகௌளை
காலை 6 முதல் 8 மணி முடிய
பிலஹரி
கேதாரம்
கௌளிபந்து
ஜகன்மோஹினி
சுத்த தன்யாசி
காலை 8 முதல் 10 மணி முடிய
தன்யாசி
அஸாவேரி
சாவேரி
ஆரபி
தேவகாந்தாரி
தேவமனோகரி
காலை 10 முதல் 12 மணி முடிய
சுருட்டி
ஸ்ரீராகம்
மத்தியமாவதி
மணிரங்கு
பிருந்தாவன சாரங்கா
தர்பார்
பகல் 12 முதல் 2 மணி முடிய
சுத்தபங்காளா
பூர்ணசந்திரிகா
கோகிலதிலகம்
முகாரி
கௌடமல்லார்
பகல் 2 முதல் 4 மணி முடிய
நாட்டைக் குறிஞ்சி
உசேனி
ரவிசந்திரிகா
வர்த்தனி
ஹம்ஸாநந்தி
மந்தாரி
மாலை 4 முதல் 6 மணி முடிய
பூர்வி கல்யாணி
பந்துவராளி
வசந்தா
லலிதா
சரஸ்வதி
சீலாங்கி
கல்யாணி
மாலை 6 முதல் 8 மணி முடிய
சங்கராபரணம்
பைரவி
கரகரப்ரியா
பைரவம்
நாராயணி
ஹம்ஸத்வனி
கௌளை
இரவு 8 மணி முதல் 10 முடிய
காம்போதி
ஷண்முகப்ரியா
தோடி
நடபைரவி
ஹரிகாம்போதி
கமாஸ்
ரஞ்சனி
இரவு 10 மணி முதல் 12 முடிய
சிம்மேந்திர மத்யமம்
சாருகேசி
கீரவாணி
ரீதிகௌளை
ஆனந்தபைரவி
நீலாம்பரி
யதுகுலகாம்போதி
இரவு 12 மணி முதல் 2 முடிய
அடாணா
கேதாரகௌளை
பியாகடை
சாமா
வராளி
தர்மவதி
இரவு 2 மணி முதல் அதிகாலை 4 முடிய
ஹேமாவதி
இந்தோளம்
கர்நாடக தேவகாந்தாரி
ரஸாவளி
பாகேஸ்வரி
மோஹனம்
இந்தப் பட்டியலை பழநி நாதசுர வகுப்பார் தொகுத்து அளித்துள்ளனர். இது 1958, டிசம்பர் திருக்கோயில் இதழில் வெளி வந்துள்ள தொகுப்பு. இதில் 74 ராகங்கள் இருப்பதைக் காணலாம்.
இதே போல ராகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து நோய் தீர உள்ள ராகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அடுத்துக் காண்போம்.
tags--கோவில், ராகங்கள்,