திருப்பாவை பாடல் 13
இந்தப் பாசுரத்தில் வரும்
கள்ளம் என்ற சொல்லுக்கு எனது வலைத் தள நண்பர் திரு புதுவை வேலு
சொல்லும் அற்புத விளக்கம்.
"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள்.
தூக்கம் ஒரு திருட்டுத்தனம்.
பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!
நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!
அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும்
நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.
வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?"