JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், ஏப்ரல் 30, 2012

அந்த கால நினைவுகள் 1962


.2012 == >>1962

The picture i saw in the FACEBOOK today led to reflecting moments of 1962, which i choose to narrate now.

இந்த படத்தில் பார்க்கும் பெண்மணி எனது நெருங்கிய நண்பரின் புதல்வி. எனது மகளின் பள்ளித்தோழி. 
தஞ்சையை நினைக்கும் பொழுதெல்லாம் இவரது தந்தையார் நினைவுதான் வரும். 
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப தமது
நண்பர்களுக்கு இன்னல் வரும்போதெல்லாம் தான் முன்னிருந்து உதவி செய்தவர் இன்னமும் செய்து கொண்டு இருப்பவர்.  
நானும் இவரும் எங்களுடைய உற்ற சகோதரர் போல் விளங்கிய திரு ரெங்கநாத ஐயங்கார் சுவாமிகளும் தஞ்சை நாணயக்கார செட்டி தெருவில் இருந்த நினைவுகள் பல பொக்கிஷமாக இருக்கின்றன. 
பிறகு, வரகப்ப ஐயர் வீதி ( அல்லது சந்து ) அவர்கள் வசித்தபோது அவர்களுடன் தங்கி இருந்தது, ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லும்போது அவரது தந்தை என் பக்கத்தில் வந்து அமர்ந்து அவரும் சேர்ந்து சொல்லியது எல்லாமே பசுமையாக நினைவுகளில் உள்ளது. 
நான், திருவேங்கடசாமி, ரெங்கநாதன், ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சவுரி ராஜன், எல்லாம் இப்ப எழுபதை தாண்டிய கிழங்கள். 
ஆனா 1962 லே இள வட்டங்கள். அந்த கால கட்டத்திலே ஆடிய சீட்டாட்டங்கள், போட்ட சண்டைகள், அப்பப்ப.. நோ. ஒன்ஸ் மோர் இன் லைப். 
ஒரு தடவை, திருவேங்கட சுவாமி, தனது கிராமம் சேரன்குலத்திற்கு எங்களை கூட்டி சென்று இருந்தார். அந்த ஊர் பெருமாள் கோவில் உத்சவம். அன்று சேவை முடிந்தவுடன் புளியோதரை, ததியோன்னம், பாயசம், தயிர் வடை சும்மா சொல்லக்கூடாது, பிரம்மானந்தம். 
கொஞ்சம் பாக்கி இருக்கா சார் ?
அந்த கால நினைவுகள் தொடரும்.