JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, செப்டம்பர் 18, 2010

karumaree amma



கருமாரி அம்மன் திருவேற்காடு  அருள் பெற வேண்டி சுப்பு தாத்தா பாடுகிறார்.
என் வலை அன்பர்கள் என்னையும் ஒரு பொருளாக மதித்து அவர்கள் வலையான அம்மன் பாட்டு ப்ளாக் ஸ்பாட் காமில்  என்னை ஒரு டீம் அங்கத்தினராக சேர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவேற்காடு கருமாரி
அம்மன் பாட்டு ஒன்று எழுதினேன். அது இதுவே: 

பல் இல்லாத கிழவன் பாடுவது ராகம் தர்பாரி கானடா .( இன்னிக்கு எடுத்த பல்லையும் சேர்த்து மொத்தம் எடுத்த பற்கள் பதினான்கு )
இந்த பாடல் வரும் 1.1.2011  அன்று இங்கே வரும்.

கருமாரி .. 
நின் கருணைவிழிப்பார்வை வேண்டிக் ‌
காலடியில் 
காத்திருப்பேன்.. கருமாரி.  

அருள் மாரி பொழிந்தே 
அகிலமெல்லாம் காத்திடுவாய் ! 
இருள் இடர் இன்னல் இங்கே 
இனி இல்லை எனச் சொல்வாய் ! = கருமாரி ... 
உள்ளத்திலே குடிபுகுந்து என் 
உள்ளத்திலே குடிபுகுந்து 
உண்மையெது ? உணரச்செய்வாய் !
மெய்யதனைச் சுட்டெரித்து 
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி 

 எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான் 
ஏங்கிய சங்கதி யாவும் 
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி...

ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி ....

ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள 
ஒப்பிலா உந்தனருள் 
ஓம்காரம்   வழிதரும் .   ...கருமாரி.  

அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ...கருமாரி.