சனி, ஜூலை 17, 2010
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
அன்னமாச்சார்யா அவர்களின் அற்புத கிருதி ஸ்ரீமந நாராயண எனத் துவங்கும் பௌளி ராகத்தில் பாடப்பெறுகிறது. அதைக் கேட்டு மகிழாதார், மயங்காதார் இல்லை.
வலை அன்பர் திரு கண்ணபிரான் ரவி ஷங்கர் கே. ஆர். எஸ். அவர்கள் அந்தப்பாடலினை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
http://kannansongs.blogspot.com/2010/07/ms-immortal.html
திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!
கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
தாமரை யாளுடன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!
(திருநாரணன் திரு)
பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, அணுவில் அணுவே
திருவேங்கட மலை உடையானே சரணம்!
அந்தப்பாடலை, இந்த பல் போன கிழவன் பாடுவதை மேலே கேளுங்கள். அசல் பாட்டு தெலுங்கில் அன்னமாச்சார்யா இயற்றி டாக்டர் எம். எஸ். பாடியது, இப்பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால் கேட்கலாம். கூடவே தமிழ்ப் பாடலை இயற்றிய கே.ஆர்.எஸ்.ஐயும் சந்திக்கலாம்.
இப்ப என்னோட பேத்தி ஒரு முனு வருசத்துக்கு முன்னாடி இதே பாட்டை பாடினதை கேட்போமா ?