JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, பிப்ரவரி 06, 2022

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

Gopika Geetham

புதன், ஜூலை 07, 2021

Dhyana slokam

 



புதன், டிசம்பர் 09, 2020

, கோவில்களில் ராகங்கள்!

 கோவில்களில் ராகங்கள்!

ச.நாகராஜன்

பாரத தேசத்தில் இசைக்குத் தனி இடம் உண்டு.

72 மேளாகர்த்தா ராகங்கள் அடிப்படையான ராகங்கள். இதிலிருந்து உதயமாகும் ஜன்ய ராகங்களுக்கு கணக்கே இல்லை. சுமார் 30000 ராகங்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட பெர்முடேஷன் காம்பினேஷன் படி பல லட்சம் ராகங்கள் உருவாகக் கூடும்.

இவற்றின் பயனையும் நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

வியாதி போக ஒரு ராகம், உடம்பின் வலி போக ஒரு ராகம், எழுந்திருக்கும் போது ஒரு ராகம், தூங்க வைக்க ஒரு ராகம், அழுகைக்கு ஒன்று, ஆனந்தத்திற்கு ஒன்று, சக்தி பெற ஒன்று என்று இப்படி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதற்குரிய ராகத்தை நமக்குத் தந்துள்ளனர்.

அதே போல கல்யாணத்தில் பாட வேண்டிய ராகங்கள் உண்டு; ஒப்பாரிக்கு ஒரு இசை உண்டு.

கோவில்களில் பாட வேண்டிய ராகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆறு கால பூஜை என்பது நமது ஆலயங்களில் ஆறு தடவைகள் நடக்கும் பூஜை நேரத்தைக் குறிக்கும்.

ஒவ்வொரு கால பூஜைக்கு உரித்த ராகங்கள் உண்டு.

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டு மணி நேரங்களாகப் பிரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பாட வேண்டிய ராகங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணலாம்.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி முடிய

பூபாளம்

பௌளி

மலயமாருதம்

வலசி

நாதநாமக்ரியை

மாயாமாளகௌளை

காலை 6 முதல் 8 மணி  முடிய

பிலஹரி

கேதாரம்

கௌளிபந்து

ஜகன்மோஹினி

சுத்த தன்யாசி

காலை 8 முதல் 10 மணி  முடிய

தன்யாசி

அஸாவேரி

சாவேரி

ஆரபி

தேவகாந்தாரி

தேவமனோகரி

காலை 10 முதல் 12 மணி  முடிய

சுருட்டி

ஸ்ரீராகம்

மத்தியமாவதி

மணிரங்கு

பிருந்தாவன சாரங்கா

தர்பார்

பகல் 12 முதல் 2 மணி  முடிய

சுத்தபங்காளா

பூர்ணசந்திரிகா

கோகிலதிலகம்

முகாரி

கௌடமல்லார்

பகல் 2 முதல் 4 மணி  முடிய

நாட்டைக் குறிஞ்சி

உசேனி

ரவிசந்திரிகா

வர்த்தனி

ஹம்ஸாநந்தி

மந்தாரி

மாலை 4 முதல் 6 மணி  முடிய

பூர்வி கல்யாணி

பந்துவராளி

வசந்தா

லலிதா

சரஸ்வதி

சீலாங்கி

கல்யாணி

மாலை 6 முதல் 8 மணி  முடிய

சங்கராபரணம்

பைரவி

கரகரப்ரியா

பைரவம்

நாராயணி

ஹம்ஸத்வனி

கௌளை

இரவு 8 மணி முதல் 10 முடிய

காம்போதி

ஷண்முகப்ரியா

தோடி

நடபைரவி

ஹரிகாம்போதி

கமாஸ்

ரஞ்சனி

இரவு 10 மணி முதல் 12 முடிய

சிம்மேந்திர மத்யமம்

சாருகேசி

கீரவாணி

ரீதிகௌளை

ஆனந்தபைரவி

நீலாம்பரி

யதுகுலகாம்போதி

இரவு 12 மணி முதல் 2 முடிய

அடாணா

கேதாரகௌளை

பியாகடை

சாமா

வராளி

தர்மவதி

இரவு 2 மணி முதல் அதிகாலை 4 முடிய

ஹேமாவதி

இந்தோளம்

கர்நாடக தேவகாந்தாரி

ரஸாவளி

பாகேஸ்வரி

மோஹனம்

இந்தப் பட்டியலை பழநி நாதசுர வகுப்பார் தொகுத்து அளித்துள்ளனர். இது 1958, டிசம்பர் திருக்கோயில் இதழில் வெளி வந்துள்ள தொகுப்பு. இதில் 74 ராகங்கள் இருப்பதைக் காணலாம்.

இதே போல ராகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து நோய் தீர உள்ள ராகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அடுத்துக் காண்போம்.

 tags--கோவில், ராகங்கள், 

ஞாயிறு, அக்டோபர் 25, 2020

Manikka Veenai Endhum

வியாழன், அக்டோபர் 22, 2020

Durga Lakshmi Saraswathi Navrathri song

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

புதன், மார்ச் 18, 2020

Krishna Kavacham...KANNADASAN...THE GREAT AND IMMORTAL POET OF OUR TAMIL NADU.

அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே இகமும் பரமும் இணையும் இடமே ஈதல்மபாம் இதயத் தவமே உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே எரியும் கனலில் தெரியும் புனலே ஏழைமனதில் வாழும் அருளே 
கண்ணன் கவசம் கண்ணதாசன். 


ஶ்ரீ கிருஷ்ண கவசம்
அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே—8

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்அவ் வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம்
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே-16

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்-24

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க—32

கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக துணையே தருக
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட—40

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக
துருவத் துருவத் துருவத் துருவி
தொலையப் பொருளே அலையாய் வருக
நிஷ்காமத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக—48

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம்-56

கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோத குமாரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுகள் இல்லை
என்னை விட்டொரு இனியவன் இல்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை64

எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள் செய வருக
கோசலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக—72

திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம்
இராவணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு—80

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கௌரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கௌரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்88

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்--90
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று?—96

உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லை
கண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறப்பும் அடியேன் கொண்டால் !—104

சத்திய நாதன் தாள்களை மறவேன்
த்துவக்கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளில்லை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்ந்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
எங்கு முழங்கு தர்ம்ம் நிலைக்க-112

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்|றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்—120

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு-128

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க—136

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி ரகுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம்—144

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணியென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய--151