வெள்ளி, நவம்பர் 23, 2007
வெள்ளி, நவம்பர் 16, 2007
Listen to the Thrilling Songs of Pithukuli Murugadoss
புதன், நவம்பர் 07, 2007
Enjoy the Deepavali Fireworks and Illuminated Skies !!!
And Sanku Chakram and Kalasam
DEEPAVALI SIGNIFIES TRIUMPH OF TRUTH OVER ALL EVIL.
Wish You All a Very Happy Deepavali.
Sarve Janaha Sukhino Bhavanthu.
புதன், அக்டோபர் 17, 2007
கொலு வைப்பதன் தத்துவம்!
கொலு வைப்பதன் தத்துவம்!
பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா தன் வியாபாரி சுமதியுடன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார். குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை ஆவாகானம் பண்ணி உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான். அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி புராணத்தில். இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
ஒன்பது படிகள் :
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
Please visit: http://movieraghas.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com
ஞாயிறு, அக்டோபர் 14, 2007
வெள்ளி, செப்டம்பர் 28, 2007
Laugh ..laugh and laugh ..
width="350" height="275">
Sirithu Vazha Vendum...Pirar Sirikka Vazhnthidaathe...
Live with a laugh always..but never live to be laughed at by others..
(Tamil Poet Kannadasan.
சிரித்து வாழ்ந்தால் கோடி நன்மை!
- எஸ்.சரவணன்
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.
அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.
சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.
சிரிப்பின் பலன்கள்
* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.
* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.
* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.
* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.
* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.
* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.
நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.
(மூலம் - வெப்துனியா)
ஞாயிறு, செப்டம்பர் 23, 2007
This song was sung in every Tamil Home throughout the world during 1960s when the unforgettable movie PASA MALAR directed by Bhim Singh where Sivaji Ganesan and Savitri played the roles of a brother and sister. This song was written by the greatest poet Kannadasan.
I used the sing the song for my children during 1960s.
The turn now is for me to sing for my grandchildren.
I cannot sing in those rhythms but am sure I am getting the spirit behind the song.
வெள்ளி, செப்டம்பர் 21, 2007
சனி, செப்டம்பர் 15, 2007
சனி, செப்டம்பர் 01, 2007
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
