இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.
எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சயம்பதி என்னும் பெயரிட்ட வலையிலே
ஆதி சங்கரர் இயற்றிய அற்புத பாடலான கணேச பஞ்சரத்தினத்தை இட்டு இருக்கிரார்கள்.
அப்பொழுதுதான் சங்கட ஹர சதுர்த்தி என அகத்தீஸ்வரர் கோவிலிலும் வினை தீர்த்த விநாயகன் கோவிலிலும் விநாயகனை தரிசித்து வந்த எனக்கு, கணினியைத் திறக்கும்பொழுது பார்க்கக் கிடைத்த இந்த பஞ்ச ரத்தினம்
விநாயகனின் அருட்பிரசாதமாக விளங்கியது.
ஆண்டவன் நமக்கு யார் உருவில் நமக்கு நல்லது செய்வார் என நமக்கே தெரியாது. ஆகவே தான் வீட்டுக்கு வரும் அனைவருமே சிவன் என நினைக்கவேண்டும், விருந்தோம்பவேண்டும் என்பது முதியோர்கள் சொன்னது.
திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு எனது நன்றி.
பாடலை பல முறை பாடியிருக்கிறேன் என்றாலும் இன்று எனது நண்பருக்காகவும் அவரது குடும்பத்தார் எல்லா நலன்களும் பெறவேண்டும் என பிரார்த்திக்கொண்டு இன்று பாடுகிறேன்.
மகா சங்கட ஹர சதுர்த்தி.